தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1216

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

நிபந்தனைகளை எழுதிக்கொள்வது.

அப்துல் மஜீத் பின் வஹ்ப் என்பார் அறிவிக்கின்றார்:

அத்தாஉ பின் காலித் (ரலி) அவர்கள் என்னிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு எழுதிக் கொடுத்த ஒரு கடிதத்தை உனக்கு நான் படித்துக் காட்டட்டுமா? என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அவர் ஒரு ஏட்டை வெளியில் எடுத்தார்.

அதில் (பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது)

“அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அத்தாஉ பின் காலித் இந்த அடிமையை விலைக்கு வாங்கிக் கொண்டார்; இது ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிடம் செய்த வியாபாரமாகும்; இதில் எந்தக் குறையுமில்லை; இவரிடம் கெட்ட குணமில்லை, குற்றம் புரியும் தன்மையுமில்லை.

(திர்மிதி: 1216)

بَابُ مَا جَاءَ فِي كِتَابَةِ الشُّرُوطِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: أَخْبَرَنَا عَبَّادُ بْنُ لَيْثٍ صَاحِبُ الكَرَابِيسِيِّ البَصْرِيُّ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ المَجِيدِ بْنُ وَهْبٍ، قَالَ:

قَالَ لِي العَدَّاءُ بْنُ خَالِدِ بْنِ هَوْذَةَ: أَلَا أُقْرِئُكَ كِتَابًا كَتَبَهُ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: قُلْتُ: بَلَى، فَأَخْرَجَ لِي كِتَابًا: «هَذَا مَا اشْتَرَى العَدَّاءُ بْنُ خَالِدِ بْنِ هَوْذَةَ مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، اشْتَرَى مِنْهُ عَبْدًا أَوْ أَمَةً، لَا دَاءَ وَلَا غَائِلَةَ وَلَا خِبْثَةَ، بَيْعَ المُسْلِمِ المُسْلِمَ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ، لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عَبَّادِ بْنِ لَيْثٍ، وَقَدْ رَوَى عَنْهُ هَذَا الحَدِيثَ غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الحَدِيثِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1137.
Tirmidhi-Shamila-1216.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1133.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20658-அப்பாத் பின் லைஸ் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • இந்த செய்தியின் இறுதி பகுதியை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், தஃலீகாக (அறிவிப்பாளர்தொடர் கூறாமல்) பதிவு செய்துள்ளார். (பார்க்க: புகாரி-6980 )
  • புகாரீயின் தஃலீக்கான செய்திகளை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் தனது தக்லீகுத் தஃலீக் என்ற நூலில் அறிவிப்பாளர்தொடர்களை குறிப்பிடுவார்.
  • மேற்கண்ட கருத்தில், அப்பாத் பின் லைஸ் வராத மற்ற அறிவிப்பாளர் தொடர்களையும் கூறி இந்த செய்தியை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் ஹஸன் தரம் எனக் கூறியுள்ளார். (நூல்: தக்லீகுத் தஃலீக்-3/218) 

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

  • அப்பாத் பின் லைஸ் —> அப்துல் மஜீத் —> அத்தாஉ பின் காலித் (ரலி)

பார்க்க: இப்னு மாஜா-2251 , திர்மிதீ-1216 , குப்ரா நஸாயீ-11688 , தாரகுத்னீ-3080 , குப்ரா பைஹகீ-10782 ,

  • உஸ்மான் பின் மைமூன் —> அபூரஜாஉ —> அத்தாஉ பின் காலித் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-15 , குப்ரா பைஹகீ-10783 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.