அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என் கைகளில் தங்கத்தலான இரண்டு காப்புகள் வைக்கப்பட்டன. நான் அவ்விரண்டையும் கண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டதுடன் அவற்றை வெறுக்கவும் செய்தேன். உடனே (அவற்றை ஊதிவிட) எனக்கு அனுமதியளிக்கப்பட்டது. நான் அவ்விரண்டையும் ஊத, அவை பறந்து போய்விட்டன. அவ்விரண்டும் (இனி வரவிருக்கும்) இரண்டு பெரும் பொய்யர்களைக் குறிப்பதாக அதற்கு விளக்கமும் கண்டேன்…
அவ்விருவரில் ஒருவன் யமாமைவைச் சேர்ந்த முஸைலிமா ஆவான். மற்றொருவன் (யமன் நாட்டில் ஃபைரோஸ் என்பவரால் கொல்லப்பட்ட) ஸன்ஆவைச் சேர்ந்த ‘(அஸ்வத்) அல்அன்ஸீ’ ஆவான்..
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
…
(திர்மிதி: 2292)حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الجَوْهَرِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو اليَمَانِ، عَنْ شُعَيْبٍ وَهُوَ ابْنُ أَبِي حَمْزَةَ، عَنْ ابْنِ أَبِي حُسَيْنٍ وَهُوَ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي حُسَيْنٍ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
رَأَيْتُ فِي المَنَامِ كَأَنَّ فِي يَدَيَّ سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ فَهَمَّنِي شَأْنُهُمَا فَأُوحِيَ إِلَيَّ أَنْ أَنْفُخَهُمَا فَنَفَخْتُهُمَا فَطَارَا فَأَوَّلْتُهُمَا كَاذِبَيْنِ يَخْرُجَانِ مِنْ بَعْدِي
يُقَالُ لِأَحَدِهِمَا: مَسْلَمَةُ صَاحِبُ الْيَمَامَةِ وَالْعَنْسِيُّ صَاحِبُ صَنْعَاءَ
هَذَا حَدِيثٌ صَحِيحٌ غَرِيبٌ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2292.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2226.
சமீப விமர்சனங்கள்