தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2308

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்கு அருகில் நின்றால் தாடி நனைகின்ற அளவு அழுவார்கள். சொர்க்கம், நரகத்தைப் பற்றி கூறப்படும் போது தாங்கள் அழுவதில்லை. ஆனால் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறீர்களே ஏன் ? என்று அவர்களிடத்தில் வினவப்பட்டது.

அதற்கு அவர்கள், “மண்ணறை மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும். இதில் இருந்து ஒருவன் ஈடேற்றம் பெற்றுவிட்டால் இதன் பிறகு உள்ளவை இதை விட எளிதானதாகும். இதிலிருந்து அவன் ஈடேற்றம் பெறாவிட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதைவிடக் கடினமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மேலும், “நான் கண்ட காட்சிகளிலேயே மண்ணறை தான் மிகக் கோரமாக இருந்தது” என்றும் அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (எனவே தான் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறேன் என்று (உஸ்மான் (ரலி) அவர்கள்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹானிஉ (ரஹ்)

(திர்மதி: 2308)

بَابٌ

حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بَحِيرٍ، أَنَّهُ سَمِعَ هَانِئًا، مَوْلَى عُثْمَانَ قَالَ

كَانَ عُثْمَانُ، إِذَا وَقَفَ عَلَى قَبْرٍ بَكَى حَتَّى يَبُلَّ لِحْيَتَهُ، فَقِيلَ لَهُ: تُذْكَرُ الجَنَّةُ وَالنَّارُ فَلَا تَبْكِي وَتَبْكِي مِنْ هَذَا؟ فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ القَبْرَ أَوَّلُ مَنْزِلٍ مِنْ مَنَازِلِ الآخِرَةِ، فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ، وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ»

قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلَّا وَالقَبْرُ أَفْظَعُ مِنْهُ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ هِشَامِ بْنِ يُوسُفَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2230.
Tirmidhi-Shamila-2308.
Tirmidhi-Alamiah-2230.
Tirmidhi-JawamiulKalim-2240.




[حكم الألباني] : حسن

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் பஹீர் சுமாரானவர் என்பதால் இது ஹஸன் என்ற தரத்தில் உள்ள அறிவிப்பாளர்தொடர் என அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் கூறியுள்ளார்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

1 . பார்க்க : அஹ்மத்-454 , இப்னு மாஜா-4267 , திர்மிதீ-2308 , முஸ்னத் பஸ்ஸார்-444 , 445 , ஹாகிம்-1373 , 7942 ,

2 . பார்க்க : அபூதாவூத்-3221 , ஹாகிம்-1372 , குப்ரா பைஹகீ-7064 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1778 ,

4 comments on Tirmidhi-2308

  1. இமாம் அல்பானி (ரஹ்) இந்த ஹதீஸ் ஹஸன் என்றே பதிவு செய்கிறார்கள்

    நூல்-ஸஹீஹ் அல் ஜாமி-1684

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.