அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தனக்கு அவசியமில்லாத வீணானவற்றை விட்டுவிடுவது அவர் இஸ்லாத்தை அழகாக கடைப்பிடிக்கிறார் என்பதற்கான அடையாளமாகும்.
அறிவிப்பவர்: அலீ பின் ஹுஸைன் (ரஹ்)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவரின் பல மாணவர்கள் இவ்வாறே ஸுஹ்ரீ —> அலீ பின் ஹுஸைன் பின் அலீ பின் அபூதாலிப் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக அறிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியே நம்முடைய பார்வையில் (ஹதீஸ் எண்-2317 இல் இடம்பெற்றுள்ள) அபூஸலமா (ரஹ்) —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வரும் செய்தியை விட மிகச் சரியானதாகும்.
அலீ பின் ஹுஸைன் (ரஹ்) அவர்கள், அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்களின் காலத்தை அடையவில்லை.
(திர்மிதி: 2318)حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ مِنْ حُسْنِ إِسْلَامِ المَرْءِ تَرْكَهُ مَا لَا يَعْنِيهِ»
«وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ مِنْ أَصْحَابِ الزُّهْرِيِّ عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ حَدِيثِ مَالِكٍ مُرْسَلًا، وَهَذَا عِنْدَنَا أَصَحُّ مِنْ حَدِيثِ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَلِيُّ بْنُ حُسَيْنٍ لَمْ يُدْرِكْ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2318.
Tirmidhi-Alamiah-2240.
Tirmidhi-JawamiulKalim-2251.
சமீப விமர்சனங்கள்