தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-2628

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனக்கு அவசியமில்லாத வீணானவற்றை விட்டுவிடுவது அவர் இஸ்லாத்தை அழகாக கடைப்பிடிக்கிறார் என்பதற்கான அடையாளமாகும்.

அறிவிப்பவர்: அலீ பின் ஹுஸைன் (ரஹ்)

(முஅத்தா மாலிக்: 2628)

وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَن عَلِيِّ بْنِ حُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ:

مِنْ حُسْنِ إِسْلاَمِ الْمَرْءِ، تَرْكُهُ مَا لاَ يَعْنِيهِ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-2628.
Muwatta-Malik-Alamiah-1402.
Muwatta-Malik-JawamiulKalim-1606.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . யஹ்யா பின் யஹ்யா அல்லைஸீ

2 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம்

3 . இப்னு ஷிஹாப்-ஸுஹ்ரீ

4 . அலீ பின் ஹுஸைன் (ரஹ்)


ஆய்வின் சுருக்கம்:

இந்தச் செய்தி முர்ஸலாக வந்திருப்பதே முன்னுரிமை பெற்ற செய்தியாகும் என்று இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (13/ 147)
3024- وَسُئِلَ عَنْ حَدِيثِ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم، قال: مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يعنيه.
فَقَالَ: يَرْوِيهِ الزُّهْرِيُّ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ بُدَيْلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عن أبيه.
ورواه الْأَوْزَاعِيِّ، عَنْ قُرَّةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سلمة، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَكِلَاهُمَا وَهِمَ.
وَالصَّحِيحُ: عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ مُرْسَلًا.
وقيل: عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، عَنْ أبيه، ولا يصح.

  • இந்தக் கருத்தில் வரும் அறிவிப்பாளர்தொடர்களில் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    இமாம் அறிவிக்கும், ஸுஹ்ரீ —> அலீ பின் ஹுஸைன் பின் அலீ பின் அபூதாலிப் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற முர்ஸலான அறிவிப்பாளர்தொடரும், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) வழியாக வரும் செய்திகளில் குர்ரா பின் அப்துர்ரஹ்மான் இடம்பெறும் அறிவிப்பாளர்தொடர் மட்டுமே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்திகளாகும் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-310, 1389, 3024, 3158)


  • ராவீ-34257-குர்ரா பின் அப்துர்ரஹ்மான் பின் ஹைவஈல் என்பவர் பற்றி இவர் பலமானவர் என்றும், சுமாரானவர் என்றும் சிலர் கூறியிருந்தாலும் இவர் முன்கருல் ஹதீஸ் என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாமும், இவர் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று அபூஸுர்ஆ, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோரும் கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-7/182, தஹ்தீபுல் கமால்-23/581, தஹ்தீபுத் தஹ்தீப்-3/438, தக்ரீபுத் தஹ்தீப்-1/800)

  • இவரைப் பற்றிய விமர்சன அடிப்படையில் இவர் தனித்து அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவையாகும். இந்தச் செய்தியை இவர் மட்டுமே மவ்ஸூலாக தனித்து அறிவித்துள்ளார் என்பதால் முன்கர் என்பதின்படி அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) வழியாக வரும் செய்தி பலவீனமாகும். 
  • அலீ பின் ஹுஸைன் (ரஹ்) அறிவிக்கும் செய்தி முர்ஸல் என்பதால் பலவீனமாகும்.

1 . இந்தக் கருத்தில் அலீ பின் ஹுஸைன் பின் அலீ பின் அபூதாலிப் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

  • மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    —> ஸுஹ்ரீ —> அலீ பின் ஹுஸைன் (ரஹ்) —> நபி (ஸல்)

பார்க்க: மாலிக்-2628, திர்மிதீ-2318, …


  • ஸுஹ்ரீ —> அலீ பின் ஹுஸைன் (ரஹ்) —> ஹுஸைன் பின் அலீ (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: அஹ்மத்-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, அல்முஃஜமுஸ் ஸகீர்-,


2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2317.


3 . ஸைத் பின் ஸாபித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுஸ் ஸகீர்-884.


கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.