தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2485

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, மக்கள் அவர்களை நோக்கி விரைந்துச் சென்றனர். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள்!” என்று சொல்லப்பட்டது. நானும் அவர்களைப் பார்ப்பதற்காக மக்களுடன் சென்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் திருமுகத்தை நான் தெளிவாகப் பார்த்தபோது, ‘இது ஒரு பொய்யரின் முகமல்ல’ என்று தெரிந்து கொண்டேன்.

அவர்கள் முதன்முதலில் பேசியதாவது:

“மக்களே! ஸலாமைப் பரப்புங்கள். (பசித்தோருக்கு) உணவளியுங்கள். மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது இரவில் தொழுங்கள். (இவற்றால்) நீங்கள் நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)

(திர்மிதி: 2485)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَابْنُ أَبِي عَدِيٍّ، وَيَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَوْفِ بْنِ أَبِي جَمِيلَةَ الأَعْرَابِيِّ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ، قَالَ:

لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ انْجَفَلَ النَّاسُ إِلَيْهِ، وَقِيلَ: قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجِئْتُ فِي النَّاسِ لِأَنْظُرَ إِلَيْهِ، فَلَمَّا اسْتَبَنْتُ وَجْهَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَفْتُ أَنَّ وَجْهَهُ لَيْسَ بِوَجْهِ كَذَّابٍ وَكَانَ أَوَّلُ شَيْءٍ تَكَلَّمَ بِهِ أَنْ قَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، أَفْشُوا السَّلَامَ، وَأَطْعِمُوا الطَّعَامَ، وَصَلُّوا وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُونَ الجَنَّةَ بِسَلَامٍ»

«هَذَا حَدِيثٌ صَحِيحٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2409.
Tirmidhi-Shamila-2485.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2422.




 


இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-23784 , தாரிமீ-1501 , 2674 , இப்னு மாஜா-1334 , 3251 , திர்மிதீ-2485 ,


 

3 comments on Tirmidhi-2485

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

    இந்த ஹதீஸில் ரஸூல் (ஸல்) அவர்கள் சொன்னதின் மொழிபெயர்ப்பை மட்டுமே கொடுத்துள்ளீர்கள். அதோடு சேர்ந்த சம்பவத்தின் மொழிபெயர்ப்பையும் கொடுத்தால் முழுமையான ஹதீஸைத் தெரிந்துக்கொள்ள உதவியாக இருக்குமல்லவா?

    لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ انْجَفَلَ النَّاسُ إِلَيْهِ، وَقِيلَ: قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجِئْتُ فِي النَّاسِ لِأَنْظُرَ إِلَيْهِ، فَلَمَّا اسْتَبَنْتُ وَجْهَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَفْتُ أَنَّ وَجْهَهُ لَيْسَ بِوَجْهِ كَذَّابٍ وَكَانَ أَوَّلُ شَيْءٍ تَكَلَّمَ بِهِ أَنْ قَالَ

    ஹதீஸின் ஆரம்பத்திலுள்ள இதன் தமிழாக்கம் தர முடியுமா?

    1. வ அலைக்கும் ஸலாம். முழு தமிழாக்கம் சேர்க்கப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் மற்ற தகவலை பிறகு பதிவு செய்கிறோம். ஆய்வுச் செய்திகள் வரிசையாக இருப்பதால் அதன் பணிகள் நடைப்பெற்று வருகிறது.

      1. ஜஸாக்கல்லாஹ் ஹைரா. அல்லாஹ் உங்கள் பணிகளை இலகுவாக்கி, அதை உங்களின் நன்மைகளில் சேர்ப்பானாக.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.