தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2616

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

தொழுகையின் அவசியம் குறித்து வந்துள்ளவை.

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பயணத்தின் போது, நபி (ஸல்) அவர்களுடன் நான் இருந்தேன். ஒருநாள் அவர்களுக்கு நெருக்கமாக நான் இருந்த போது, “அல்லாஹ்வின் தூதரே! என்னை சொர்க்கத்தில் நுழையச் செய்து, நரகத்திலிருந்து தூரமாக்கும் நற்செயலை எனக்கு அறிவியுங்கள்!” என்று கேட்டேன்.

அதற்கவர்கள், “நீர் பெரிய விஷயத்தை பற்றி என்னிடம் கேட்டு விட்டீர்; அல்லாஹ் யாருக்கு அதனை இலகுவாக்கித் தருகிறானோ அவருக்கு அது இலகுவானது தான். (அவைகள்:)

அல்லாஹ்வை வணங்குவீராக! அவனுக்கு எதையும் இணை வைக்க வேண்டாம்! தொழுகையைப் பேணி, ஸகாத்தையும் வழங்குவீராக! ரமலானில் நோன்பு வைப்பீராக! கஅபா எனும் ஆலயத்திற்கு சென்று ஹஜ் செய்வீராக!” என்று கூறினார்கள்.

பிறகு அவர்கள், “நன்மைகளின் வாசல்களை உமக்கு கூறட்டுமா?” என்று கேட்டு விட்டு, நோன்பு பாவங்களை தடுக்கும் கேடயமாகும். தண்ணீர் நெருப்பை அணைப்பது போல் அது பாவத்தை போக்கி விடும். அத்துடன் ஒரு மனிதன் நடுஇரவில் தொழுவதும் (கேடயமும், பாவங்களைப் போக்குவதும்) ஆகும்” என்று கூறிவிட்டு,

அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.

அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக அவர்களுக்காக கண்குளிரும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார் எனும் (அல்குர்ஆன்: 32:16-17) ஆவது இறைவசனங்களை ஓதிக்காட்டினார்கள்.

பிறகு அவர்கள், “(அல்லாஹ் என்னை நபியாக அனுப்பிய) இந்தக் காரியத்தின் அடிப்படையையும், அதன் தூணையும், அதன் முகடையும் உமக்கு நான் கூறட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம், அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்” என்றேன். அதற்கவர்கள், “இந்தக் காரியத்தின் அடிப்படை இஸ்லாம் ஆகும். அதன் தூண் தொழுகையாகும். அதன் முகடு ஜிஹாத் எனும் அறப்போர் ஆகும்” என்று கூறினார்கள்.

பிறகு, இவை அனைத்தையும் ஒன்று சேர்க்கும் ஒரு உறுதியானதை உனக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். நான் சரி என்றேன். உடனே நபி (ஸல்) அவர்கள் தன் நாவை பிடித்துக் கொண்டு, “இதை உமக்கு எதிராக ஆகாமல் தடுத்துக் கொள்வீராக!” என்று கூறினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எதையேனும் பேசினாலும் குற்றம் பிடிக்கபடுவோமா?” என்று கேட்டேன் . அதற்கவர்கள், முஆதே, உன் தாய் உம்மை இழக்கட்டுமாக! மக்கள் முகம் குப்புற நரகில் விழுவதற்கு, அவர்களது நாவின் விளைச்சலே காரணம்” என்று கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

(திர்மிதி: 2616)

بَابُ مَا جَاءَ فِي حُرْمَةِ الصَّلَاةِ

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الصَّنْعَانِيُّ، عَنْ مَعْمَرٍ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ:

كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأَصْبَحْتُ يَوْمًا قَرِيبًا مِنْهُ وَنَحْنُ نَسِيرُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الجَنَّةَ وَيُبَاعِدُنِي عَنِ النَّارِ، قَالَ: «لَقَدْ سَأَلْتَنِي عَنْ عَظِيمٍ، وَإِنَّهُ لَيَسِيرٌ عَلَى مَنْ يَسَّرَهُ اللَّهُ عَلَيْهِ، تَعْبُدُ اللَّهَ وَلَا تُشْرِكْ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلَاةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصُومُ رَمَضَانَ، وَتَحُجُّ البَيْتَ»

ثُمَّ قَالَ: ” أَلَا أَدُلُّكَ عَلَى أَبْوَابِ الخَيْرِ: الصَّوْمُ جُنَّةٌ، وَالصَّدَقَةُ تُطْفِئُ الخَطِيئَةَ كَمَا يُطْفِئُ المَاءُ النَّارَ، وَصَلَاةُ الرَّجُلِ مِنْ جَوْفِ اللَّيْلِ ” قَالَ: ثُمَّ تَلَا {تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ المَضَاجِعِ} [السجدة: 16]، حَتَّى بَلَغَ {يَعْمَلُونَ} [السجدة: 17]

ثُمَّ قَالَ: «أَلَا أُخْبِرُكَ بِرَأْسِ الأَمْرِ كُلِّهِ وَعَمُودِهِ، وَذِرْوَةِ سَنَامِهِ»؟ قُلْتُ: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «رَأْسُ الأَمْرِ الإِسْلَامُ، وَعَمُودُهُ الصَّلَاةُ، وَذِرْوَةُ سَنَامِهِ الجِهَادُ»

ثُمَّ قَالَ: «أَلَا أُخْبِرُكَ بِمَلَاكِ ذَلِكَ كُلِّهِ»؟ قُلْتُ: بَلَى يَا نَبِيَّ اللَّهِ، فَأَخَذَ بِلِسَانِهِ قَالَ: «كُفَّ عَلَيْكَ هَذَا»، فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، وَإِنَّا لَمُؤَاخَذُونَ بِمَا نَتَكَلَّمُ بِهِ؟ فَقَالَ: «ثَكِلَتْكَ أُمُّكَ يَا مُعَاذُ، وَهَلْ يَكُبُّ النَّاسَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ أَوْ عَلَى مَنَاخِرِهِمْ إِلَّا حَصَائِدُ أَلْسِنَتِهِمْ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2616.
Tirmidhi-Alamiah-2541.
Tirmidhi-JawamiulKalim-2558.




ஆய்வின் சுருக்கம்:

  • இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடரில் விமர்சனம் இருந்தாலும் இந்தச் செய்தியின் கருத்துக்கள் பல்வேறு சரியான ஹதீஸ்களில் தனித்தனியாக வந்துள்ளன…
  • மேலும் இந்தச் செய்தி ஷஹ்ர் பின் ஹவ்ஷப் அவர்கள் வழியாக வந்துள்ளதே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும் என்றும், ஷஹ்ர் பின் ஹவ்ஷப் பலவீனமானவர் என்பதின்படி இந்த செய்தி பலவீனமானது என்றும் சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
  • ஷஹ்ர் பின் ஹவ்ஷப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்ஹமீத் பின் பஹ்ராம், இப்னு அபூஹுஸைன் ஆகியோர், ஷஹ்ர் பின் ஹவ்ஷப்—> அப்துர்ரஹ்மான் பின் ஃகன்ம் —> முஆத் பின் ஜபல் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். ஷஹ்ரிடமிருந்து அப்துல்ஹமீத் பின் பஹ்ராம் அறிவிப்பது சரியாக இருக்கும் என்றும் சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியிருப்பதால் இந்த அறிவிப்பாளர்தொடரை சரியானது என்றும் சில அறிஞர்கள் கூறியுள்ளனர்…

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


 


…..

அல்இலலுல் வாரிதா-988,


இந்தக் கருத்தில் முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஆஸிம் பின் அபுன்நஜூத் —> அபூவாயில் —> முஆத் பின் ஜபல் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, அஹ்மத்-, இப்னு மாஜா-3973, திர்மிதீ-2616, குப்ரா பைஹகீ-, அல்முஃஜமுல் கபீர்-,


  • ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —> முஆத் பின் ஜபல் (ரலி)

பார்க்க:


  • ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —> அப்துர்ரஹ்மான் பின் ஃகன்ம் —> முஆத் பின் ஜபல் (ரலி)

பார்க்க:


ஹகம் பின் உதைபா —>

பார்க்க:


கஅப் பின் அம்ர் —>

பார்க்க:


மக்ஹூல் —>

பார்க்க:


ஸஃத் பின் இயாஸ் —>

பார்க்க:


மைமூன் பின் அபூஷபீப் —>

பார்க்க:


அபூஉமாமா (ரலி)  —> முஆத் பின் ஜபல் (ரலி)

பார்க்க:


அதிய்யா பின் கைஸ் —> முஆத் பின் ஜபல் (ரலி)

பார்க்க:


அல்அர்பஈன்-நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
எண்-29.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.