தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2728

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் :

ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒரு மனிதர் தன் சகோதரனை அல்லது தன் நண்பனைச் சந்திக்கும்போது அவருக்காக (தலை) குனியலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அவரைக் கட்டியணைத்து முத்தம் தரலாமா? என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அவருடையை கையைப் பிடித்து முஸாஃபஹா (கைலாகு) செய்யலாமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் (செய்யலாம்) என்றார்கள்.

(திர்மிதி: 2728)

حَدَّثَنَا سُوَيْدٌ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ: أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ:

قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ مِنَّا يَلْقَى أَخَاهُ أَوْ صَدِيقَهُ أَيَنْحَنِي لَهُ؟ قَالَ: «لَا»، قَالَ: أَفَيَلْتَزِمُهُ وَيُقَبِّلُهُ؟ قَالَ: «لَا»، قَالَ: أَفَيَأْخُذُ بِيَدِهِ وَيُصَافِحُهُ؟ قَالَ: «نَعَمْ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2652.
Tirmidhi-Shamila-2728.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2671.




حنظلة بن عَبد اللَّهِ  ، ويُقال: ابن عُبَيد الله، ويُقال: ابن عبد الرحمن، ويُقال: ابن أَبي صفية، السدوسي، أَبُو عبد الرحيم البَصْرِيّ، إمام مسجد بني سدوس.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் حنظلة بن عبيد الله ஹன்ளலா பின் உபைதில்லாஹ் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் குறைகூறியுள்ளனர்.
  • இவர் குழப்பம் உள்ளவர் என்று யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.
  • புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அஹ்மது பின் ஹம்பள், அபூ ஹாதிம், யஹ்யா பின் அல்கத்தான், இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    ஆகியோர் இவரின் நினைவாற்றல் சரியில்லாத காரணத்தால் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். எனவே இந்தச் செய்தி பலவீனமானதாகும்.

தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.(பாகம் 3 பக்கம் 62)

1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-25718 , அஹ்மத்-13044 , இப்னு மாஜா-3702 , திர்மிதீ-2728 , முஸ்னத் பஸ்ஸார்-, முஸ்னத் அபீ யஃலா-4287 , 4289 , ஷரஹ் மஆனில் ஆஸார்-, குப்ரா பைஹகீ-13573 , ஷுஅபுல் ஈமான்-8558 , 8559 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2727 , நஸாயீ-4181 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.