தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2850

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், நபி (ஸல்) அவர்களின் அவையில் 100 தடவைக்கும் அதிகமாக அமர்ந்துள்ளேன். அப்போது நபித்தோழர்கள் கவிதைகளைப் படிப்பார்கள். மேலும் அறியாமைக் காலம் குறித்துப் பேசி(ச் சிரித்து)க் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சில நேரம்) அமைதியாக இருப்பார்கள். சில நேரம் அவர்களுடன் சேர்ந்து புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். (இந்தக் கருத்தில் சிலதை) ஸிமாக் அவர்களிடமிருந்து ஸுஹைர் பின் முஆவியா அவர்களும் அறிவித்துள்ளார்.

(திர்மிதி: 2850)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ:

«جَالَسْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثَرَ مِنْ مِائَةِ مَرَّةٍ، فَكَانَ أَصْحَابُهُ يَتَنَاشَدُونَ الشِّعْرَ، وَيَتَذَاكَرُونَ أَشْيَاءَ مِنْ أَمْرِ الجَاهِلِيَّةِ وَهُوَ سَاكِتٌ، فَرُبَّمَا يَتَبَسَّمُ مَعَهُمْ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَقَدْ رَوَاهُ زُهَيْرٌ، عَنْ سِمَاكٍ، أَيْضًا


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2850.
Tirmidhi-Alamiah-2777.
Tirmidhi-JawamiulKalim-2796.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . அலீ பின் ஹுஜ்ர்

3 . ஷரீக் பின் அப்துல்லாஹ்

4 . ஸிமாக் பின் ஹர்ப்

5 . ஜாபிர் பின் ஸமுரா (ரலி)


கவிதை படிப்பார்கள் என்ற கூடுதல் வாசகம் ஷரீக் பின் அப்துல்லாஹ், கைஸ் பின் ரபீஃ ஆகியோர் வழியாக மட்டுமே வந்துள்ளது. மற்ற பலமானவர்கள் இதை அறிவிக்கவில்லை.


மேலும் பார்க்க: முஸ்லிம்-1188.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.