தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1188

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 53

ஸுப்ஹுத் தொழுகைக்குப் பின் (சூரிய உதயம் வரை) தொழுத இடத்திலேயே அமர்ந்திருப்பதன் சிறப்பும், பள்ளிவாசல்களின் சிறப்பும்.

 ஸிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம், அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (ஸுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 5

(முஸ்லிம்: 1188)

52 – بَابُ فَضْلِ الْجُلُوسِ فِي مُصَلَّاهُ بَعْدَ الصُّبْحِ، وَفَضْلِ الْمَسَاجِدِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سِمَاكٌ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَاللَّفْظُ لَهُ، قَالَ: أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ

قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ: أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: نَعَمْ كَثِيرًا، «كَانَ لَا يَقُومُ مِنْ مُصَلَّاهُ الَّذِي يُصَلِّي فِيهِ الصُّبْحَ، أَوِ الْغَدَاةَ، حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، فَإِذَا طَلَعَتِ الشَّمْسُ قَامَ، وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّةِ، فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ»


Muslim-Tamil-1188.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-670.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-1080.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்.

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அப்துல்லாஹ், 3 . யஹ்யா பின் யஹ்யா.

4 . ஸுஹைர் பின் முஆவியா-அபூகைஸமா.

5 . ஸிமாக் பின் ஹர்ப்.

6 . ஜாபிர் பின் ஸமுரா (ரலி).


 


இந்தக் கருத்தில் ஜாபிர் பின் ஸமுரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஷிமாக் பின் ஹர்ப் —> ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

பார்க்க: …முஸ்லிம்-1188, 1189, 4641, அபூதாவூத்-, திர்மிதீ-, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-, …


….திர்மிதீ-2850,


..


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-586, …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.