தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2952

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

யார் குர்ஆனில் (அதனுடைய வசனங்களில், கருத்துகளில் தன் அறிவில் தோன்றியதை) சுயமாக பேசுகிறாரோ அவரின் கூற்று (எதார்த்தமாக) சரியாகவே இருந்தாலும் (மார்க்கத்தின் பார்வையில்) அவர் தவறிழைத்தவராவார்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த நபிமொழி “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இதில் இடம்பெறும் (ஹஸ்ம் அல்குதயீ என்பவரின் சகோதரர்)-ஸுஹைல் பின் அப்துல்லாஹ்-இப்னு அபூஹஸ்ம் என்பவரைப் பற்றி நபிமொழி ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர்.

மேலும் இவ்வாறே நபி (ஸல்) அவர்களின் தோழர்கள், அவர்களுக்குப் பின் வந்த அறிஞர் பெருமக்களில் சிலர், குர்ஆனுக்கு அதன் ஞானமின்றி சுய விளக்கம் தரக்கூடாது என்பதில் கடினமாக நடந்துகொண்டார்கள்.

தெரிந்துகொள்ளுங்கள்: முஜாஹித் (ரஹ்), கதாதா (ரஹ்) இவர்களைப் போன்ற மற்றுமுள்ள அறிஞர்கள் குர்ஆனுக்கு விளக்கமளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களில் எவரும் குர்ஆனுக்கு அதன் ஞானமின்றி, சுய விளக்கமளித்ததாகக் கருதவேண்டியதில்லை.

அவர்கள் அவ்வாறு குர்ஆனுக்கு அதன் ஞானமின்றி, சுய விளக்கமளிக்கவில்லை என்று நாம் கூறியதற்கு காரணம், அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் சில செய்திகளின் ஆதாரத்தின் அடிப்படையிலாகும்.

மஃமர் வழியாக அப்துர் ரஸ்ஸாக் அவர்களிடமிருந்து ஹுஸைன் பின் மஹ்தீ பின் மாலிக் அல்பஸரீ அவர்களின் அறிவிப்பில் கதாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

குர்ஆனின் ஒரு வசனத்தை (அது ஓதும் முறையானாலும், அல்லது விளக்கமளிப்பதானாலும்) அது தொடர்பாகக் கொஞ்சமேனும் நான் செவியுற்றதைத் தவிர வேறு எதையும் சொல்லவில்லை.

அஃமஷ் அவர்களிடமிருந்து ஸுஃப்யான் பின் உயைனா வழியாக இப்னு அபூஉமர் அவர்களின் அறிவிப்பில் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதும் முறையை நான் ஓதுபவனாக இருந்திருந்தால், அதிகமான வசனங்களுக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் விளக்கம் கேட்கவேண்டிய தேவையுள்ளவனாக நான் ஆகியிருக்க மாட்டேன்.

(திர்மிதி: 2952)

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلَالٍ قَالَ: حَدَّثَنَا سُهَيْلُ بْنُ عَبْدِ اللَّهِ وَهُوَ ابْنُ أَبِي حَزْمٍ، أَخُو حَزْمٍ القُطَعِيِّ قَالَ: حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الجَوْنِيُّ، عَنْ جُنْدَبِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ قَالَ فِي القُرْآنِ بِرَأْيِهِ فَأَصَابَ فَقَدْ أَخْطَأَ»

«هَذَا حَدِيثٌ غَرِيبٌ، وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الحَدِيثِ فِي سُهَيْلِ بْنِ أَبِي حَزْمٍ، وَهَكَذَا رُوِيَ عَنْ بَعْضِ أَهْلِ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَغَيْرِهِمْ، أَنَّهُمْ شَدَّدُوا فِي هَذَا فِي أَنْ يُفَسَّرَ القُرْآنُ بِغَيْرِ عِلْمٍ وَأَمَّا الَّذِي رُوِيَ عَنْ مُجَاهِدٍ وَقَتَادَةَ وَغَيْرِهِمَا مِنْ أَهْلِ العِلْمِ أَنَّهُمْ فَسَّرُوا القُرْآنَ، فَلَيْسَ الظَّنُّ بِهِمْ أَنَّهُمْ قَالُوا فِي القُرْآنِ أَوْ فَسَّرُوهُ بِغَيْرِ عِلْمٍ أَوْ مِنْ قِبَلِ أَنْفُسِهِمْ. وَقَدْ رُوِيَ عَنْهُمْ مَا يَدُلُّ عَلَى مَا قُلْنَا، أَنَّهُمْ لَمْ يَقُولُوا مِنْ قِبَلِ أَنْفُسِهِمْ بِغَيْرِ عِلْمٍ»

حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ مَهْدِيٍّ البَصْرِيُّ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ، قَالَ: «مَا فِي القُرْآنِ آيَةٌ إِلَّا وَقَدْ سَمِعْتُ فِيهَا شَيْئًا»

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الأَعْمَشِ، قَالَ: قَالَ مُجَاهِدٌ: «لَوْ كُنْتُ قَرَأْتُ قِرَاءَةَ ابْنِ مَسْعُودٍ لَمْ أَحْتَجْ أَنْ أَسْأَلَ ابْنَ عَبَّاسٍ عَنْ كَثِيرٍ مِنَ القُرْآنِ مِمَّا سَأَلْتُ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2952.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2895.




(இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹம்பல், புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
நஸாஈ, மற்றுமுள்ள அறிஞர்கள் தாம் குறை கூறியவர்கள் என்று அல்முன்திரீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இயற்பெயர் அப்துல்லாஹ்; அவரின் தந்தை பெயர் ஸுஹைல், அவரின் குறிப்புப் பெயர் அபூஹஸ்ம் என்பதாகும். இவர் மிஹ்ரான் என்றும், அப்துல்லாஹ் அபூபக்ர் அல்பஸரீ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஹஜ்முல் குதஈ என்பவரின் சகோதரராவார்.)

….

 

மேலும் பார்க்க: அபூதாவூத்-3652 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.