தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3652

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

அல்லாஹ்வின் வேதமான குர்ஆனுக்கு அறிவு-ஞானமின்றி விளக்கமளிப்பது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

யார், குர்ஆனில் (அதனுடைய வசனங்களில்,கருத்துகளில் தன் அறிவில் தோன்றியதை) சுயமாக பேசுகிறாரோ அவரின் கூற்று (எதார்த்தமாக) சரியாகவே இருந்தாலும் (மார்க்கத்தின் பார்வையில்) அவர் தவறிழைத்தவராவார்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி)

(அபூதாவூத்: 3652)

بَابُ الْكَلَامِ فِي كِتَابِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ الْمُقْرِئُ الْحَضْرَمِيُّ، حَدَّثَنَا سُهَيْلُ بْنُ مِهْرَانَ، أَخِي حَزْمٍ الْقُطَعِيُّ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ، عَنْ جُنْدُبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

مَنْ قَالَ: فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ بِرَأْيِهِ فَأَصَابَ، فَقَدْ أَخْطَأَ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3652.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3169.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-18824-ஸுஹைல் பின் மிஹ்ரான்-ஸுஹைல் பின் அப்துல்லாஹ்-ஸுஹைல் பின் அபூஹஸ்ம் என்பவர் பற்றி அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள் இவர் ஸாபித் அவர்களிடமிருந்து முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று விமர்சித்துள்ளார்.
  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இவர் மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை (தனித்து) அறிவிப்பவர் என்று விமர்சித்துள்ளார்.
  • இவ்வாறே உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவர் பலமானவர்கள் வழியாக பலமானவர்களின் செய்திகளை போன்று இல்லாதவற்றை அறிவிப்பவர் என்று விமர்சித்துள்ளார். (இது பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கபடுபவர்களுக்கு கூறப்படும் கடுமையான விமர்சனம் ஆகும்)

இவ்வாறு அறிவிப்பது அறிவிப்பாளரிடம் ஏற்படும் மோசமான தவறு என்பதால் தான் இவரை அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஆகியோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவர் صالح – சுமாரானவர் என்ற கருத்தில் கூறியதாக இஸ்ஹாக் பின் மன்ஸூர் அறிவித்துள்ளார்; பலவீனமானவர் என்று கூறியதாக அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஸுஹைர் அறிவித்துள்ளார்.
  • இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் இவர் பலமானவர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஷாஹீன்,பிறப்பு ஹிஜ்ரி 298
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 87
    இப்னு கலஃபூன் ஆகியோர் இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/247, தஹ்தீபுல் கமால்-12/217, தஹ்தீபுத் தஹ்தீப்-2/127, தக்ரீபுத் தஹ்தீப்-1/421)

அதிகமான ஹதீஸ்கலை அறிஞர்கள் இவரை விமர்சித்துள்ளனர் என்பதால் அதற்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

2 . இந்தக் கருத்தில் ஜுன்துப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-3652 , திர்மிதீ-2952 , குப்ரா நஸாயீ-8032 , முஸ்னத் அபீ யஃலா-1520 , தஃப்ஸீருத் தபரீ-, அல்முஃஜமுல் கபீர்-1672 , அல்முஃஜமுல் அவ்ஸத்-5101 , தஃலீகாத்-தாரகுத்னீ-, அல்இபானதுல் குப்ரா-, ஷுஅபுல் ஈமான்-, அல்ஃபகீஹ்-, அல்வஸீத்-, ஷரஹுஸ் ஸுன்னா-, தபகாதுல் ஹனாபிலா-, தைலு தாரீகு பஃக்தாத்-,தாரீகு திமிஷ்க்-31/6 ,

மேலும் பார்க்க: திர்மிதீ-2951 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.