நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடமிருந்து ஹதீஸ் அறிவிப்பதை பயந்து கொள்ளுங்கள்; உங்களுக்கு உறுதியாக தெரிந்ததைத் தவிர!
என்மீது யார் வேண்டுமென்றே (இட்டுக்கட்டி) பொய் சொல்வாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்.
யார் குர்ஆனுக்கு சுயவிளக்கம் கூறுகிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன்” தரத்தில் அமைந்த செய்தியாகும்.
(திர்மிதி: 2951)حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا سُوَيْدُ بْنُ عَمْرٍو الكَلْبِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الأَعْلَى، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«اتَّقُوا الحَدِيثَ عَنِّي إِلَّا مَا عَلِمْتُمْ،
فَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ،
وَمَنْ قَالَ فِي القُرْآنِ بِرَأْيِهِ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
«هَذَا حَدِيثٌ حَسَنٌ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2951.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2894.
திர்மிதீ இமாம் இது “ஹஸன்” தரத்தில் அமைந்த செய்தி என்று கூறியுள்ளார்…
…
இந்தச் செய்தியின் இரண்டாவது பகுதி வேறு பல சரியான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(நூல்: புகாரி-108)
இந்தச் செய்தியின் முதல் பகுதி, மூன்றாவது பகுதி பற்றி விமர்சனம் உள்ளது என்பதால் இவை பலவீனமான செய்திகளாகும்.
இதைப் பற்றிய விவரம்:
1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17804-ஸுஃப்யான் பின் வகீஃ பின் அல்ஜர்ராஹ் நம்பகமானவர் என்றாலும் இவரின் நூலில் இவரின் எழுத்தாளர் மவ்கூஃபான செய்திகளை மர்ஃபூவாக மாற்றுவது உட்பட சில தவறுகளை செய்துவிட்டார் என இப்னுஅதீ அவர்கள் கூறியுள்ளார்.
- அபூஸுர்ஆ அவர்கள் இவர் பொய்யர் என சந்தேகிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார். இவருக்கு சொல்லிக்கொடுக்கும் செய்திகளில் தவறுசெய்துவிட்டார் என அறிஞர்கள் விமர்சிக்கின்றனர் என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/62)
2 . மேலும் இதில் வரும் ராவீ-20943-அப்துல்அஃலா பின் ஆமிர் அஸ்ஸஅலபீ என்பவர் பற்றி ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
ஆகியோர் இவர் இப்னுல் ஹனஃபிய்யா அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகளை பலவீனமானது என்று கூறியுள்ளனர். (…
- யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள், تَعْرِف وتُنْكِر – இவர் சில செய்திகளை பலமானவர்கள் அறிவிப்பதைப் போன்று அறிவித்துள்ளார்; சில செய்திகளை பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார். - அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள், இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவிப்பதை விட்டுவிட்டார். - அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவர் ஸயீத் பின் ஜுபைர் வழியாக அறிவிப்பது முன்கரான செய்தி என்று கூறியுள்ளார். - இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவர் இப்னுல் ஹனஃபிய்யா, ஸயீத் பின் ஜுபைர், அபூஅப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமீ ஆகியோர் வழியாக மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை தனித்து அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார். - அபூஸுர்ஆ அவர்கள், இவர் (ஒரு செய்தியை) சில நேரம் மர்ஃபூவாக-நபியின் சொல்லாகவும், சில நேரம் மவ்கூஃபாக-நபித்தோழரின் சொல்லாகவும் அறிவிப்பார் என்று விமர்சித்துள்ளார்.
- தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் இவர் சிறிது பலவீனமானவர் என்றும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் நம்பகமானவர்; சிறிது தவறிழைப்பவர் என்றும் கூறியுள்ளனர்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/25, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-6/546, அல்காஷிஃப்-3/220, தஹ்தீபுத் தஹ்தீப்-2/464, தக்ரீபுத் தஹ்தீப்-1/561…)
- அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்களின் விமர்சனமும், அபூஸுர்ஆ அவர்களின் விமர்சனமும் இந்த செய்திக்கு பொருத்தமாக உள்ளது.
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவர் ஸயீத் பின் ஜுபைர் வழியாக அறிவிப்பது முன்கரான செய்தி என்று கூறியுள்ளார். இந்த செய்தியை அப்துல்அஃலா பின் ஆமிர் அஸ்ஸஅலபீ என்பவர் ஸயீத் பின் ஜுபைர் அவர்கள் வழியாகவே அறிவித்துள்ளார்.
2 . (அபூஸுர்ஆ அவர்களின் கருத்தின்படி பார்த்தால்) இவர் இந்தச் செய்தியை சில நேரம் மர்ஃபூவாக-நபியின் சொல்லாகவும், சில நேரம் மவ்கூஃபாக-நபித்தோழரின் சொல்லாகவும் அறிவித்துள்ளார்.
1 . இந்தச் செய்தியின் முதல் பகுதியின் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துல்அஃலா பின் ஆமிர் —> ஸயீத் பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-2675 , 2974 , 3024 , திர்மிதீ-2950 , 2951 , முஸ்னத் அபீ யஃலா-2338 , 2721 , அமாலீ அபுல்காஸிம்- இப்னு பஷ்ரான்-1573 , முஸ்னத் ஷிஹாப்-554 , தாரீகு திமிஷ்க்-10774 , கிதாபுல் இல்ம்-0 , 0, அஸ்ஸாமினு அஷர்-அபூதாஹிர்-8 , அஸ்ஸானீ வஸ்ஸலாஸூன்-அபூதாஹிர்-5 ,
இவை அனைத்திலும் அப்துல்அஃலா பின் ஆமிர் அஸ்ஸஅலபீ இடம்பெறுகிறார். எனவே இவை பலவீனமான அறிவிப்பாளர் தொடர்களாகும்.
இந்தச் செய்தியின் இரண்டாவது பகுதியின் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துல்அஃலா பின் ஆமிர் —> ஸயீத் பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, திர்மிதீ-, முஸ்னத் பஸ்ஸார்-, முஸ்னத் அபீ யஃலா-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, அல்முஃஜமுல் கபீர்-, அக்பாரு அஸ்பஹான்-, அமாலீ அபுல்காஸிம்- இப்னு பஷ்ரான்-1573 , முஸ்னத் ஷிஹாப்-554 , தாரீகு திமிஷ்க்-10774 , கிதாபுல் இல்ம்-0 , 0, அல்ஆஷிரு-அபூதாஹிர்-, அஸ்ஸாமினு அஷர்-அபூதாஹிர்-8 , அஸ்ஸானீ வஸ்ஸலாஸூன்-அபூதாஹிர்-5 ,
(மற்றவை-பார்க்க: புகாரி-108)
இந்தச் செய்தியின் மூன்றாவது பகுதியின் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துல்அஃலா பின் ஆமிர் —> ஸயீத் பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-2974 , 3024 , திர்மிதீ-2950 , 2951 , முஸ்னத் அபீ யஃலா-2338 , 2721 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, ஷரஹுஸ் ஸுன்னா-பஃகவீ-117 , முஸ்னத் ஷிஹாப்-554 , தாரீகு திமிஷ்க்-10774 , கிதாபுல் இல்ம்-0 , அஸ்ஸாமினு அஷர்-அபூதாஹிர்-8 , ..
..தஃப்ஸீருல் குர்ஆன்-அப்துர்ரஸ்ஸாக்-, அஹ்மத்-, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, தஃப்ஸீருத் தபரீ-, அல்இபானதுல் குப்ரா-, அல்இர்ஷாது ஃபீ மஃரிஃபதி உலமாயில் ஹதீஸ்-, ஷுஅபுல் ஈமான்-, அல்ஜாமிஉ லிஅக்லாகிர் ராவீ-, அல்ஃபகீஹு.. -, அல்வஸீது.. -, தல்பீஸு இப்லீஸ்-, அத்தத்வீனு ..-,
- அப்துல்லாஹ் பின் ஷைபா அஸ்ஸஃகானீ —> அபூஆஸிம் அன்னபீல் —> இப்னு ஜுரைஜ் —> அதாஉ —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: அஸ்ஸிகாத்-13913 ,
الثقات لابن حبان (8/ 368)
13913 – عبد الله بن شيبَة الصغاني يروي عَن أبي عَاصِم النَّبِيل ثَنَا بن جريج عَن عَطاء عَن بن عَبَّاسٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ من قَالَ فِي الْقُرْآنِ بِرَأْيِهِ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ حَدَّثنا عَنْهُ مُحَمَّدُ بن الْمُنْذر
யார் குர்ஆனுக்கு சுயவிளக்கம் கூறுகிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அஸ்ஸிகாத்-இப்னு ஹிப்பான்-13913)
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அப்துல்லாஹ் பின் ஷைபா அஸ்ஸஃகானீ என்பவர் பற்றி அறியப்படவில்லை. இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.மட்டுமே இந்த செய்தியில் கூறியுள்ளார். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . இந்தச் செய்தியின் மூன்றாவது பகுதியின் கருத்தில் ஜுன்துப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-3652 .
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்