அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “திண்ணமாக ஆதத்தின் மக (மனித)னுக்கு ஷைத்தானின் தூண்டலும் (மலக்)வானவரின் தொடுதலும் உண்டு. தெரிந்துகொள்ளுங்கள்! “ஷைத்தானின் தீண்டல் தீங்கையும் உண்மையைப் பொய்யாக்கும் (மன) நிலையையும் தரும். வானவர்கள் தீண்டல் சிறந்ததையும், உண்மையை உண்மையாக்கும் (மன) நிலையையும் தரும்.
எவர் வானவரின் தீண்டலை (உணர்வாரோ) பெற்றுக்கொள்வாரோ அவர் அது அல்லாஹ்வின் சார்பாக உண்டானது என்று புரிந்து அல்லாஹ்வைப் புகழட்டும்.
ஷைத்தானின் தீண்டலை உணருபவர் “எறியப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும்” என்று கூறிவிட்டு பின்பு “(தர்மம் செய்வதால்) ஷைத்தான் உங்களுக்கு வறுமையை அச்சமூட்டி (கஞ்சத்தனம் என்னும்) அருவருப்பானதைக்கொண்டு ஏவுவான். ஆனால், அல்லாஹ்வோ தன்னுடைய மன்னிப்பையும் செல்வத்தையும் உங்களுக்கு வாக்களிக்கிறான். அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வனும் நன்கறிவோனுமாவான்” (அல்குர்ஆன்: 2:268) எனும் அருள்மறை வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
அபுல்அஹ்வஸ் அவர்கள் வழியாக இடம்பெற்றுள்ள மேற்கண்ட செய்தி “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.
இந்தச் செய்தியை அபுல்அஹ்வஸ் அவர்களைத் தவிர வேறு யாரும் நபியின் சொல்லாக அறிவித்திருப்பதாக நாம் அறியவில்லை.
(திர்மிதி: 2988)حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ مُرَّةَ الهَمْدَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ لِلشَّيْطَانِ لَمَّةً بِابْنِ آدَمَ وَلِلْمَلَكِ لَمَّةً فَأَمَّا لَمَّةُ الشَّيْطَانِ فَإِيعَادٌ بِالشَّرِّ وَتَكْذِيبٌ بِالحَقِّ، وَأَمَّا لَمَّةُ المَلَكِ فَإِيعَادٌ بِالخَيْرِ وَتَصْدِيقٌ بِالحَقِّ، فَمَنْ وَجَدَ ذَلِكَ فَلْيَعْلَمْ أَنَّهُ مِنَ اللَّهِ فَلْيَحْمَدِ اللَّهَ وَمَنْ وَجَدَ الأُخْرَى فَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ»، ثُمَّ قَرَأَ {الشَّيْطَانُ يَعِدُكُمُ الفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالفَحْشَاءِ} [البقرة: 268] الآيَةَ
«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَهُوَ حَدِيثُ أَبِي الأَحْوَصِ لَا نَعْرِفُهُ مَرْفُوعًا إِلَّا مِنْ حَدِيثِ أَبِي الأَحْوَصِ»
Tirmidhi-Tamil-2914.
Tirmidhi-TamilMisc-2914.
Tirmidhi-Shamila-2988.
Tirmidhi-Alamiah-2914.
Tirmidhi-JawamiulKalim-2933.
العلل الكبير للترمذي = ترتيب علل الترمذي الكبير (ص: 353)
سَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا الْحَدِيثِ فَقَالَ: رَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ وَأَوْقَفَهُ. وَأَرَى أَنَّهُ قَدْ رَفَعَهُ غَيْرُ أَبِي الْأَحْوَصِ , عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ , وَهُوَ حَدِيثُ أَبِي الْأَحْوَصِ
- இந்தச் செய்தியை அபுல்அஹ்வஸ் அவர்களைத் தவிர வேறுயாரும் நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் கூறியதாக திர்மிதீ இமாம் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: அல்இலலுல் கபீர்-654)
- இந்தச் செய்தியை அதிகமானோர் நபித்தோழர்; இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளனர் என்று அபூஸுர்ஆ, அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோர் குறிப்பிட்டுவிட்டு அதுவே உண்மையாகும் என்று கூறியுள்ளனர்.
(நூல்: இலலுல் ஹதீஸ்-2224)
அதாஉ பின் ஸாயிப் அவர்கள் இறுதிக்காலத்தில் மூளைக் குழம்பிவிட்டார். இவரிடம் ஆரம்பத்தில் ஹதீஸ்களைக் கேட்டவர்களான ஹம்மாத் பின் ஸைத் அவர்கள், இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளார். இவ்வாறே ஹம்மாத் பின் ஸலமா அவர்களும் அறிவித்துள்ளார். (ஹம்மாத் பின் ஸலமா அவர்கள், அதாஉ அவர்களிடமிருந்து அவர் மூளைக் குழம்புவதற்கும் முன்பும் செவியேற்றுள்ளார்; மூளைக் குழம்பிய பின்பும் செவியேற்றுள்ளார் என்பது சில அறிஞர்களின் கருத்தாகும். இந்த இடத்தில் ஹம்மாத் பின் ஸைத் அவர்களின் அறிவிப்பின்படியே ஹம்மாத் பின் ஸலமா அவர்களின் செய்திக்கு முன்னுரிமை தந்துள்ளனர்.)
(பார்க்க: ஹம்மாத் பின் ஸலமா)
ஹம்மாத் பின் ஸலமாவின் அறிவிப்பு:
- தஃப்ஸீருத் தபரீ-6174.
تفسير الطبري = جامع البيان ت شاكر (5/ 574)
6174 – حدثني المثنى بن إبراهيم، قال: حدثنا حجاج بن المنهال، قال: حدثنا حماد بن سلمة، قال: أخبرنا عطاء بن السائب، عن مرة الهمداني أن ابن مسعود قال: إن للملك لمة، وللشيطان لمة. فلمة الملك: إيعاده بالخير وتصديق بالحق، ولمة الشيطان: إيعاد بالشر وتكذيب بالحق. (2) فمن أحس من لمة الملك شيئا فليحمد الله عليه، ومن أحس من لمة الشيطان شيئا فليتعوذ بالله منه. ثم تلا هذه الآية:”الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم”. (3) .
ஹம்மாத் பின் ஸைதின் அறிவிப்பு:
- அல்முஃஜமுல் கபீர்-8532 .
1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2988 , முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-,
சமீப விமர்சனங்கள்