தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3369

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவித்தார்:

அல்லாஹ் பூமியை படைத்தபோது, அது நடுங்க ஆரம்பித்தது. அல்லாஹ் மலைகளைப் படைத்து பூமி ஆடாமல் நிலைநிறுத்தினான். மலைகளின் பலத்தைக் கண்டு வானவர்கள் வியப்புற்று, “ எங்கள் இறைவனே! நீ படைத்தவற்றுள் இந்த மலைகளை விட பலமானது ஏதும் உண்டா?” என்று வினவினர். அதற்கு அல்லாஹ், “ஆம்! இரும்பு”என்றான்.

“ இறைவனே! இரும்பை விட பலமானது ஏதேனும் உண்டா?” என்று மீண்டும் கேட்டார்கள், “ ஆம்! உண்டு. அது நெருப்பு!’என்று அல்லாஹ் கூறினான். “இந்த நெருப்பை விட பலமானது ஏதேனும் உண்டா? “ என்று கேட்ட போது, “ஆம்! அது தண்ணீர்!” என்று கூறினான். இந்த தண்ணீரை விட பலமானது உண்டா? என்று கேட்டதற்கு, “ ஆம்! அது காற்று!” என்று அல்லாஹ் கூறினான்.

இந்த பலமான காற்றை விட பலமானது உண்டா? என்று கேட்டபோது, “ ஆம்! உண்டு, அது ஆதமுடைய மகனானவன். தன் இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுக்கும் தர்மமாகும்!’ என்று அல்லாஹ் கூறியதாக, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(திர்மிதி: 3369)

بَابٌ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: حَدَّثَنَا العَوَّامُ بْنُ حَوْشَبٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

لَمَّا خَلَقَ اللَّهُ الأَرْضَ جَعَلَتْ تَمِيدُ، فَخَلَقَ الجِبَالَ، فَقَالَ بِهَا عَلَيْهَا فَاسْتَقَرَّتْ، فَعَجِبَتِ المَلَائِكَةُ مِنْ شِدَّةِ الجِبَالِ. قَالُوا: يَا رَبِّ هَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ الجِبَالِ؟

قَالَ: نَعَمُ الحَدِيدُ.  قَالُوا: يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ الحَدِيدِ؟ قَالَ: نَعَمُ النَّارُ. فَقَالُوا: يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ النَّارِ؟ قَالَ: نَعَمُ المَاءُ.

قَالُوا: يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ المَاءِ؟ قَالَ: نَعَمُ الرِّيحُ. قَالُوا: يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ الرِّيحِ؟

قَالَ: نَعَمْ ابْنُ آدَمَ، تَصَدَّقَ بِصَدَقَةٍ بِيَمِينِهِ يُخْفِيهَا مِنْ شِمَالِهِ “: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مَرْفُوعًا إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-Shamila-3369.
Tirmidhi-JawamiulKalim-.




இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் வரும் ஸுலைமான் பின் அபீ ஸுலைமான் என்பவர் பலவீனமானவர் என்பதால் இந்த ஹதீஸ் பலவீனமாகும்.

இந்த பெயரில் இரு அறிவிப்பாளர்கள் உள்ளனர். சிலர் இருவரும் ஒருவரே என்றும், வேறு சிலர்  இருவரும் வெவ்வேரானவர்கள் என்றும் கூறுகின்றனர்.

புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் التاريخ الكبير ல் அறிவிப்பாளர் எண்-1806,1807  இரு அறிவிப்பளாராக கூறியுள்ளார்.

இந்த ஹதீஸில் வரும் ( سُلَيْمَان بن أبي سُلَيْمَان الْقُرَشِيّ الهاشمي مولى عَبْد اللَّهِ بْن عباس) ஸுலைமான் பின் அபீ ஸுலைமானிடமிருந்து அவ்வாம் பின் ஹவ்ஷப் என்பவர் மட்டுமே அறிவிக்கிறார். மேலும் குறைந்த ஹதீஸ்களே ஸுலைமான் அறிவிக்கிறார் என்பதால்  தான் இவர் அறியப்படாதவர் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகிறார்கள்…

கூடுதல் தகவல்…

المحقق: شعيب الأرنؤوط –

تعليق من مسند أحمد  رقم حديث -12253

(1) إسناده ضعيف، سليمان بن أبي سليمان -وهو مولى ابن عباس- لم يرو عنه غير العوام بن حوشب،

وقال ابن معين: لا أعرفه،

وتساهل ابن حبان فذكره في “الثقات” وذكر أنه روى عن أبي هريرة وأبي سعيد، وروى عنه العوام بن حوشب وقتادة، والصواب أنهما اثنان، فالراوي عن أبي سعيد وعنه قتادة راو آخر، وهو ليثي بصري بخلاف هذا، وقد فرق بينهما البخاري وابن أبي حاتم، وكلاهما مجهول.

 

وأخرجه الضياء في “المختارة” (2148) من طريق عبد الله بن أحمد بن حنبل، عن أبيه، بهذا الإسناد.

وأخرجه عبد بن حميد (1215) ،

والترمذي (3369) ،

وأبو يعلى (4310) ، والبيهقي في “شعب الإيمان” (3441)

، والضياء (2149) و (2150) ،

والمزي في ترجمة سليمان بن أبي سليمان من “تهذيب الكمال” 11/443-444 من طرق عن يزيد بن هارون، به.

وقال الترمذي: هذا حديث غريب لا نعرفه مرفوعاً إلا من هذا الوجه

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.