தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3386

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

பிரார்த்தனை செய்யும் போது கைகளை உயர்த்துவது பற்றி வந்துள்ளவை.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பிரார்த்தனை செய்யும் போது தமது இரு கைகளையும் உயர்த்தினால் (முடிவில்) அவற்றால் தமது முகத்தை தடவாமல் கீழே விடமாட்டார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

(எனது ஆசிரியர்களில் மற்றொருவரான) முஹம்மத் பின் முஸன்னா அவர்கள், இதே கருத்தை வேறு வார்த்தையில் அறிவித்தார்.

மேற்கண்ட செய்தி “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும். இதை ஹம்மாத் பின் ஈஸா என்பவர் மட்டுமே அறிவித்துள்ளதாக நாம் அறிகிறோம். இவர் குறைந்த ஹதீஸ்களையே அறிவித்துள்ளார். இவரிடமிருந்து சிலர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். மேலும் இவர் இந்தச் செய்தியை தனித்து அறிவித்துள்ளார்.

(இதில் வரும் அறிவிப்பாளர்) ஹன்ளலா பின் அபூஸுஃப்யான் அல்ஜுமஹீ என்பவர் பலமானவர் ஆவார். (ஏனெனில்) இவரை யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்கள் பலமானவர் என்று கூறியுள்ளார்.

(திர்மிதி: 3386)

بَاب مَا جَاءَ فِي رَفْعِ الأَيْدِي عِنْدَ الدُّعَاءِ

حَدَّثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ المُثَنَّى، وَإِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، وَغَيْرُ وَاحِدٍ قَالُوا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ عِيسَى الجُهَنِيُّ، عَنْ حَنْظَلَةَ بْنِ أَبِي سُفْيَانَ الجُمَحِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ، قَالَ:

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَفَعَ يَدَيْهِ فِي الدُّعَاءِ، لَمْ يَحُطَّهُمَا حَتَّى يَمْسَحَ بِهِمَا وَجْهَهُ»

قَالَ مُحَمَّدُ بْنُ المُثَنَّى فِي حَدِيثِهِ: لَمْ يَرُدَّهُمَا حَتَّى يَمْسَحَ بِهِمَا وَجْهَهُ

«هَذَا حَدِيثٌ غَرِيبٌ، لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ حَمَّادِ بْنِ عِيسَى، وَقَدْ تَفَرَّدَ بِهِ وَهُوَ قَلِيلُ الحَدِيثِ، وَقَدْ حَدَّثَ عَنْهُ النَّاسُ، وَحَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ الجُمَحِيُّ هُوَ ثِقَةٌ، وَثَّقَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ القَطَّانُ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3386.
Tirmidhi-Alamiah-3308.
Tirmidhi-JawamiulKalim-3333.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . முஹம்மத் பின் முஸன்னா, 3 . இப்ராஹீம் பின் யஃகூப்.

4 . ஹம்மாத் பின் ஈஸா அல்ஜுஹனீ.

5 . ஹன்ளலா பின் அபூஸுஃப்யான் அல்ஜுமஹீ.

6 . ஸாலிம் பின் அப்துல்லாஹ் பின் உமர்.

7 . அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).

8 . உமர் பின் கத்தாப் (ரலி).


ஆய்வின் சுருக்கம்:

பிரார்த்தனை செய்யும் போது கைகளை உயர்த்துவது பற்றி பலமான சுமார் நூறு ஹதீஸ்கள் உள்ளன.

ஆனால் துஆ செய்த பிறகு முகத்தில் கைகளை தடவிக் கொள்வது பற்றி வரும் அனைத்து செய்திகளிலும் விமர்சனம் உள்ளது.


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-13947-ஹம்மாத் பின் ஈஸா பலவீனமானவர் என்ற விமர்சனம் உள்ளது..


1 . இந்தக் கருத்தில் உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் அப்து பின் ஹுமைத்-, திர்மிதீ-3386 , முஸ்னத் பஸ்ஸார்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-,


2 . யஸீத் பின் ஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்: 1492 .


3 . இப்னு அப்பாஸ்

4 . இப்னு உமர்

5 . ஜாபிர் பின் அப்துல்லாஹ்


6 . ஸுஹ்ரீ

7 . மஃமர்


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.