தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3502

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் ஒரு சபையிலிருந்து எழுந்திருக்கும் போது சிலவேளை தமது தோழர்களுக்காகப் பின்வரும் பிரார்த்தனையைச் செய்பவர்களாக இருந்தார்கள்.

இறைவா! எங்களுக்கும் நாங்கள் உனக்கு மாறுசெய்வதற்கும் மத்தியில் ஒரு தடையாக உனது பயத்தை எங்களுக்கு வழங்குவாயாக! எங்களை உனது சுவனத்திற்கு நீ அழைத்துச் செல்லும் காரணமாக (நாங்கள்) உனக்கு கட்டுப்படுவதை ஆக்குவாயாக! எங்களுக்கு ஏற்படும் உலக ரீதியான துன்பங்களை உன் மேல் கொண்ட உறுதியான நம்பிக்கையால் கடினமில்லாமல் ஆக்குவாயாக!

எங்களது செவிகளாலும், பார்வைகளாலும் ஆற்றலாலும் நாங்கள் உயிருடன் உள்ள வரை எங்களை பயன்பெறச் செய்வாயாக! அந்த பயனை (மரணம் வரை) எங்களுக்கு நிலைக்கச் செய்வாயாக! எங்களுக்கு அநியாயம் செய்தவர்களுக்கு எதிராக எங்களை பழிவாங்கச் செய்வாயாக! எங்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!

எங்களது மார்க்கத்தில் நாங்கள் தவறிவிடுவதை ஆக்கிவிடாதே! உலக வாழ்க்கையை (பற்றிய சிந்தனையை) எங்களது கவலையில் பெரியதாக ஆக்கிவிடாதே! அதை எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்கிவிடாதே! எங்களுக்கு இரக்கம் காட்டாதோரை எங்கள் மீது சாட்டி விடாதே!

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(திர்மிதி: 3502)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا ابْنُ المُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ زَحْرٍ، عَنْ خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ:

قَلَّمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ مِنْ مَجْلِسٍ حَتَّى يَدْعُوَ بِهَؤُلَاءِ الدَّعَوَاتِ لِأَصْحَابِهِ: «اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ، وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ، وَمِنَ اليَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مُصِيبَاتِ الدُّنْيَا، وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا، وَاجْعَلْهُ الوَارِثَ مِنَّا، وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا، وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا، وَلَا تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا، وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَلَا مَبْلَغَ عِلْمِنَا، وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا»

هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ. وَقَدْ رَوَى بَعْضُهُمْ هَذَا الحَدِيثَ عَنْ خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3502.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3448.




إسناد ضعيف لأن به موضع انقطاع بين خالد بن أبي عمران التجيبي وعبد الله بن عمر العدوي (جوامع الكلم)

  • காலித் பின் அபூஇம்ரான்  என்பவருக்கும் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) அவர்களுக்கும் இடையில் ஒரு அறிவிப்பாளர் விடப்பட்டுள்ளார். எனவே இது முன்கதிஃயான செய்தி. திர்மிதீ அவர்கள் வேறு அறிவிப்பில்  இருவருக்குமிடையில் நாஃபிவு வருகிறார் என்று இங்கு குறிப்பிட்டுள்ளார்.
  • மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-27335-உபைதுல்லாஹ் பின் ஸஹ்ர் பற்றி, இவரின் ஹதீஸ்கள் எழுதப்படும். இவரோ பலமானவர் அல்ல என்று இமாம் இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    கூறியுள்ளார். இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இவரை பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
    இவர் ஒரு பொருட்டாக இல்லை என்று இமாம் யஹ்யா பின் மயீன் கூறியள்ளார். ஹதீஸில் மறுக்கப்படுபவர் என்றும் இமாம் அலீ இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    கூறியுள்ளார்.
    இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று இமாம் அபூஹாதம் கூறியுள்ளார். இவரைக் கொண்டு எந்தப் பிரச்சனையும் அல்ல என்று இமாம் அபூஸுர் ஆ கூறியுள்ளார். இவரது அனைத்து ஹதீஸ்களும் என்னிடம் பலவீனமானது என்று இமாம் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார். இவர் பலமானவர் அல்ல என்று இமாம் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    கூறியுள்ளார்.
    இவர் நம்பகமானவர்கள் வழியாக இட்டுக் கட்டப்பட்ட செய்திகளை அறிவிக்கிறார் என்று இமாம் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    கூறியுள்ளார்.
    (பார்க்க: அஸ்ஸிகாத், பாகம் 2, பக்கம் 109, அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 5, பக்கம் 315, லுஅஃபா, பாகம் 3, பக்கம் 120, லுஅஃபா வல்மத்ரூகீன், பாகம் 2, பக்கம் 162)
  • ஒரு சில அறிஞர்கள் இவரை உண்மையாளர், இவரால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறியிருந்தாலும் இவர் மீது குறைகள் அதிகமாக சொல்லப்பட்டுள்ளதால் இவர் பலவீனமானவர் ஆவார். எனவே, இவர் இடம்பெறும் அறிவிப்பு பலவீனமடைகிறது.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : திர்மிதீ-3502 , முஸ்னத் பஸ்ஸார்-5989 , குப்ரா நஸாயீ-10161 , 10162 , அல்முஃஜமுஸ் ஸகீர்-866 , ஹாகிம்-1934 ,

  • இந்தச் செய்தி தொடர்பான அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும். தான் நாடியோருக்கு அல்லாஹ் ஆட்சி அதிகாரத்தை வழங்குகிறான். நமக்கு யார் ஆட்சியாளர்களாக வர வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் கோரிக்கை வைத்துப் பிரார்த்தனை செய்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவ்வாறு ஒரு துஆ நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள் என்று எண்ணி, இதுபோன்ற பலவீனமான செய்திகளை அமல்படுத்தினால் அது தவறாகிவிடும்.

work-ما حال الرواية: قلما كان رسول الله يقوم من مجلس

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.