தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-359

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அம்ர் பின் அல்ஹாரிஸ் பின் அல்முஸ்தலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்களில் இருவர் (மறுமை நாளில்) கடுமையாக வேதனை செய்யப்படுவர். (அவர்களில் ஒருவர்) கணவனுக்கு மாறு செய்த பெண். (மற்றொருவர்) ஒரு கூட்டத்தினர் வெறுத்தும் அவர்களின் தலைவராக இருப்பவர் என்று (எங்கள் காலத்தில்) சொல்லப்பட்டுவந்தது.

 

….

(திர்மிதி: 359)

حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ زِيَادِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ عَمْرِو بْنِ الحَارِثِ بْنِ المُصْطَلِقِ، قَالَ:

كَانَ يُقَالُ: ” أَشَدُّ النَّاسِ عَذَابًا اثْنَانِ: امْرَأَةٌ عَصَتْ زَوْجَهَا، وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ “،

قَالَ جَرِيرٌ: قَالَ مَنْصُورٌ: فَسَأَلْنَا عَنْ أَمْرِ الإِمَامِ؟ فَقِيلَ لَنَا: «إِنَّمَا عَنَى بِهَذَا الْأَئِمَّةَ الظَّلَمَةَ، فَأَمَّا مَنْ أَقَامَ السُّنَّةَ فَإِنَّمَا الإِثْمُ عَلَى مَنْ كَرِهَهُ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-359.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-327.




  • இந்த செய்தி பற்றி நபித்தோழரின் கூற்று என்று கூறுவதற்கும், நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இவ்வாறு கூறப்பட்டது என்ற பொருளின் படி நபி (ஸல்) அவர்களின் கூற்றாக இருப்பதற்கும் இடம்பாடு உள்ளது என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16295-ஸியாத் பின் அபுல்ஜஃத் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் மட்டுமே நம்பகமானவர் பட்டியலில் சேர்த்துள்ளார் என்பதால் இவரின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை. இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை மக்பூல் தரத்தில் சேர்த்துள்ளார். எனவே இவர் போன்றவர்கள் தனித்து அறிவித்தால் அது ஏற்றுக்கொள்ளப்படாது என்பது ஹதீஸ்கலை விதியாகும். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

1 . இந்தக் கருத்தில் அம்ர் பின் ஹாரிஸ் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு அபீஷைபா-4110 , 17130 , திர்மிதீ-359 ,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-360 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.