தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-360

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவரின் தொழுகைகள் அவர்களின் காதுகளைக் கூட கடந்து (உயரே) செல்லாது. (அவர்கள் யாரெனில்) ஓடிப்போன  அடிமை, அவன் திரும்பி வரும் வரை; கணவன் கோபமான நிலையில் இரவைக் கழிக்கும் பெண்; மக்கள் அவரை வெறுத்தும் அவர்களுக்கு தொழுகை நடத்துபவர்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரத்தில் உள்ள அரிதான செய்தியாகும். மேலும் இதில் இடம்பெறும் அபூஃகாலிப் என்பவரின் பெயர் ஹஸவ்வர் என்பதாகும்.

(திர்மிதி: 360)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الحَسَنِ قَالَ: حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ وَاقِدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو غَالِبٍ، قَالَ: سَمِعْتُ أَبَا أُمَامَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

ثَلَاثَةٌ لَا تُجَاوِزُ صَلَاتُهُمْ آذَانَهُمْ: العَبْدُ الآبِقُ حَتَّى يَرْجِعَ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ، وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ

«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ، وَأَبُو غَالِبٍ اسْمُهُ حَزَوَّرٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-360.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-328.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் அபூஉமாமா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ராவீ-17176-அபூஃகாலிப்-ஹஸவ்வர் என்பவர் பற்றி, இவர் பலமானவர் என்று மூஸா பின் ஹாரூன், தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவர் ஸாலிஹுல் ஹதீஸ் என்று கூறியுள்ளார். (இதன் கருத்து இவர் நம்பகமானவர்; என்றாலும் மறதியால் சில நேரம் தவறிழைப்பவர் என்பதாகும். எனவே சில செய்திகளை இவர் பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவிப்பதால் இவரை முன்கருல் ஹதீஸ் என்றோ அல்லது கைவிடப்பட்டவர் என்றோ அல்லது வேண்டுமென்றே பொய் சொல்பவர் என்றோ முடிவு செய்துவிடக்கூடாது என்பதாகும்).
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்களும் இவரை இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் கூறியதைப் போன்றே கூறியுள்ளார்.
  • இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    அவர்கள், இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியதாகவும், பலவீனமானவர் என்று கூறியதாகவும் இரு கருத்துகள் உள்ளது. இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்களும் இவ்வாறே கூறியுள்ளார்.
  • அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், மேற்கண்ட அறிஞர்களின் கூற்றின்படி இவரை நம்பகமானவர்; (என்றாலும் சிறிது) தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/570, தக்ரீபுத் தஹ்தீப்-1/1188, அல்காஷிஃப்-5/90)

  • எனவே இவர் ஹஸனுல் ஹதீஸ்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்பதால் இந்த செய்தியை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    போன்ற அறிஞர்கள் ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.
  • சிலர் இந்தக் கருத்தில் வரும் அனைத்து செய்திகளிலும் விமர்சனம் இருப்பதால் இந்த செய்தியை பலவீனமானது என்றும் புகாரி-3237 , முஸ்லிம்-123 இல் இடம்பெறும் கருத்தே சரியானது என்றும் கூறியுள்ளனர். (இதைப் பற்றி ஆய்வில்)…

1 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-4113 , 17138 , திர்மிதீ-360 , அல்முஃஜமுல் கபீர்-8090 , 8098 ,

2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-3628 .

3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-971 .

4 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-358 .

5 . ஸல்மான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-4112 .

6 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு ஹிப்பான்-5355 .

7 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா பைஹகீ-5341 .

8 . அதாஉ பின் தீனார் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு குஸைமா-1518 .


1 . அம்ர் பின் ஹாரிஸ்..

பார்க்க: திர்மிதீ-359 .

2 . தல்ஹா பின் உபைதுல்லாஹ்

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-210 .

3 . அபூஹுரைரா

முஸ்னத் ஷாமிய்யீன்-

4 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-970 .

5 . ஜுனாதா பின் அபூஉமைய்யா ..வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-2177 .


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-3237 , முஸ்லிம்-123 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.