பாடம்:
மக்களின் வெறுப்பிற்குரியவர் தொழுகை நடத்துவது பற்றி வந்துள்ளவை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூவரை சபித்தார்கள்.
அவர்கள்:
1 . மக்கள் அவரை வெறுத்தும் அவர்களுக்கு தொழுகை நடத்துபவர்.
2 . கணவன் கோபமான நிலையில் இரவைக் கழிக்கும் பெண்.
3 . (பாங்கு கூறும்போது) ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியை நோக்கி வாருங்கள்) என்பதை செவியேற்றும் அதற்கு பதிலளிக்காதவர்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்தப் பாடப் பொருளில் உள்ள செய்தி இப்னு அப்பாஸ் (ரலி), தல்ஹா (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அபூஉமாமா (ரலி) ஆகிய நபித்தோழர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அனஸ் (ரலி) வழியாக வரும் இந்த செய்தி சரியானதல்ல. ஏனெனில் இந்த செய்தி ஹஸன் பஸரீ அவர்கள் வழியாக (முர்ஸலாக) நபித்தோழர் விடப்பட்டு வந்துள்ளது. இதில் இடம்பெறும் முஹம்மது பின் அல்காஸிம் என்பவர் பலவீனமானவர் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் விமர்சித்துள்ளார். மேலும் இவர் ஹாஃபிள்.. அல்ல.
இந்த செய்தியின் படி, மக்களின் வெறுப்பிற்குள்ளானவர் தொழுகை நடத்துவது வெறுப்பிற்குரிய செயல் என கல்வியாளர்களில் சிலர் கூறியுள்ளனர்.
இமாம், அநியாயக்காரராக இல்லாமல் இருந்து அவரை வெறுத்தால் அதன் குற்றம் வெறுத்தவர்களையேச் சேரும்.
இமாமை ஒருவரோ அல்லது இருவரோ அல்லது மூவரோ வெறுத்தால் அவர் மக்களுக்கு தொழுகை நடத்துவது தவறல்ல. ஆனால் அதிகமானோர் வெறுத்தால் அவர் தொழுகை நடத்துவது வெறுப்பிற்குரிய செயல் என இமாம் அஹ்மத், இஸ்ஹாக் ஆகியோர் கூறியுள்ளனர்.
(திர்மிதி: 358)بَابُ مَا جَاءَ فِيمَنْ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ
حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ وَاصِلٍ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ القَاسِمِ الأَسَدِيُّ، عَنْ الفَضْلِ بْنِ دَلْهَمٍ، عَنْ الحَسَنِ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ:
لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةً: رَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ، وَرَجُلٌ سَمِعَ حَيَّ عَلَى الفَلَاحِ ثُمَّ لَمْ يُجِبْ
وَفِي البَابِ عَنْ ابْنِ عَبَّاسٍ، وَطَلْحَةَ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، وَأَبِي أُمَامَةَ،: «حَدِيثُ أَنَسٍ لَا يَصِحُّ، لِأَنَّهُ قَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ عَنِ الحَسَنِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلٌ»،: «وَمُحَمَّدُ بْنُ القَاسِمِ تَكَلَّمَ فِيهِ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ وَضَعَّفَهُ، وَلَيْسَ بِالحَافِظِ» وَقَدْ كَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ العِلْمِ: أَنْ يَؤُمَّ الرَّجُلُ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ فَإِذَا كَانَ الإِمَامُ غَيْرَ ظَالِمٍ فَإِنَّمَا الإِثْمُ عَلَى مَنْ كَرِهَهُ ” وقَالَ أَحْمَدُ، وَإِسْحَاقُ فِي هَذَا: إِذَا كَرِهَ وَاحِدٌ أَوْ اثْنَانِ أَوْ ثَلَاثَةٌ فَلَا بَأْسَ أَنْ يُصَلِّيَ بِهِمْ حَتَّى يَكْرَهَهُ أَكْثَرُ القَوْمِ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-358.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-326.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-37939-முஹம்மது பின் காஸிம் அல்அஸதீ என்பவர் பற்றி இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்றோர், இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று கூறியுள்ளனர். அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூஸுர்ஆ, நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். - இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் மட்டுமே இவரைப் பற்றி ஸதூக்-நம்பகமானவர் என்று கூறியுள்ளார். - இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இவர் பலமானவர் என்று கூறியதாக இப்னு அபூகைஸமா அறிவித்துள்ளார். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இவரை பொருந்திக்கொள்ளவில்லை என்று ஸாஜீ கூறியுள்ளார். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் இவரை பொருந்திக்கொள்ளவில்லை-ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கு காரணம் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்பதால் அல்ல. இவரின் கவனக்குறைவு காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன் என்று முஹம்மது பின் அப்பாஸ் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/678, தக்ரீபுத் தஹ்தீப்-1/889, அல்இக்மால்-10/315)
அனஸ் (ரலி) வழியாக வரும் இந்த செய்தியை பலமான அறிவிப்பாளர்கள் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடமிருந்து நபித்தோழர் விடுப்பட்டு முர்ஸலாக அறிவித்துள்ளனர் என்பதால் இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடர்கள் முர்ஸல் என்று கூறுவதே பொருத்தமானதாகும்.
என்றாலும் ஹஸன் பஸரீ அவர்கள், முர்ஸலாக அறிவிக்கும் செய்திகளை ஏற்கலாம் என்று சில அறிஞர்களும், ஏற்கக்கூடாது என்று சில அறிஞர்களும் கூறியுள்ளனர்…
5 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஃபள்ல் பின் தல்ஹம் —> ஹஸன் பஸரீ —> அனஸ் (ரலி
பார்க்க: திர்மிதீ-358 , முஸ்னத் பஸ்ஸார்-6707 ,
- யஸீத் பின் அபூஹபீப் —> அம்ர் பின் வலீத் —> அனஸ் (ரலி
பார்க்க: இப்னு குஸைமா-1519 ,
5/1 . ஹஸன் பஸரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
- ஸவ்ரீ —> இஸ்மாயீல் —> ஹஸன் பஸரீ (ரஹ்)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3895 ,
- கதாதா —> ஹஸன் பஸரீ (ரஹ்)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3893 , 3896 , குப்ரா பைஹகீ-5340 , …குப்ரா பைஹகீ-5342 ,
- வகீஃ —> ஸயீத் —> ஹஸன் பஸரீ (ரஹ்)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-4108 ,
- ஹுஷைம் —> ஹிஷாம் —> ஹஸன் பஸரீ (ரஹ்)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-4111 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-360 .
சமீப விமர்சனங்கள்