நபி (ஸல்) அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் இருந்த நபித்துவ முத்திரை, புறா முட்டை அளவில் (அவர்களது உடலின் நிறத்திலேயே) சிவந்த கட்டியாக இருந்தது.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.
(திர்மிதி: 3644)حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَعْقُوبَ الطَّالقَانِيُّ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ بْنُ جَابِرٍ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ:
كَانَ خَاتَمُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: – يَعْنِي الَّذِي بَيْنَ كَتِفَيْهِ – غُدَّةً حَمْرَاءَ مِثْلَ بَيْضَةِ الحَمَامَةِ
«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3644.
Tirmidhi-Alamiah-3606.
Tirmidhi-JawamiulKalim-3577.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . ஸயீத் பின் யஃகூப்
3 . அய்யூப் பின் ஜாபிர்
4 . ஸிமாக் பின் ஹர்ப்
5 . ஜாபிர் பின் ஸமுரா (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-8642-அய்யூப் பின் ஜாபிர் என்பவர் பற்றி இவர் ஒரு பொருட்டே அல்ல என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் கூறியதாக சிலர் அறிவித்துள்ளனர். வேறு சிலர் இவர் பலவீனமானவர் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளனர். - இப்னு தாஹிர் அவர்கள், இவர் ஒரு பொருட்டே அல்ல என்று கூறியுள்ளார்.
- இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவர் அதிகம் தவறிழைப்பவர் என்பதால் இவர் ஆதாரத்திற்கேற்றவர் அல்ல என்று கூறியுள்ளார் - இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூஸுர்ஆ, நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
- அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவரின் செய்திகள் உண்மையாளர்களின் செய்திகளைப் போன்று இருக்கும் என்று கூறியுள்ளார். - அம்ர் பின் அலீ அல்ஃபல்லாஸ் அவர்கள், இவரை சுமாரானவர் என்று கூறியுள்ளார்.
- இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவரின் செய்திகள் பலமானவர்களின் செய்திகளைப் போன்று இருக்கும். இவரின் செய்திகளை எழுதிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/242, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-2/16, தஹ்தீபுல் கமால்-3/464, அல்இக்மால்-2/328, அல்காஷிஃப்-2/147, தஹ்தீபுத் தஹ்தீப்-1/201, தக்ரீபுத் தஹ்தீப்-1/158)
இந்தச் செய்தியின் கருத்தை வேறு சிலரும் அறிவித்துள்ளனர் என்பதால் இது ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும்.
மேலும் பார்க்க: முஸ்லிம்-4682.
சமீப விமர்சனங்கள்