இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது வருபவர், இரண்டு ரக்ஆத்துகள் தொழ வேண்டும் என்பது குறித்த பாடம்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று (குத்பா) உரையாற்றி கொண்டிருந்தபோது ஒரு மனிதர் (பள்ளிவாசலுக்கு) வந்(து தொழாமல் அமர்ந்)தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் (தமது உரையினிடையே). “நீர் தொழுது விட்டீரா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். “எழுந்து, தொழுவீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதி: 510)بَابُ مَا جَاءَ فِي الرَّكْعَتَيْنِ إِذَا جَاءَ الرَّجُلُ وَالإِمَامُ يَخْطُبُ
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ:
بَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمَ الجُمُعَةِ إِذْ جَاءَ رَجُلٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَلَّيْتَ؟»، قَالَ: لَا، قَالَ: «قُمْ فَارْكَعْ [ص:385]»
وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-510.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
இது ஹசன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.இமாம் உரை நிகழ்த்தும்போது வெளியிலிருந்து பள்ளிவாசலுக்கு வருபவர் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும் என்பது குறித்து வந்துள்ள ஹதீஸ்களிலேயே இதுதான் மிகவும் ஆதாரபூர்வமானதாகும் என திர்மிதீ இமாம் கூறுகிறார்.
மேலும் பார்க்க: புகாரி-930 .
சமீப விமர்சனங்கள்