அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம், ரமளான் மாத நோன்புக்கு அடுத்து சிறந்த நோன்பு எது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ரமளானை கண்ணியப்படுத்த (வைக்கப்படும்) ஷஃபான் மாத நோன்பு” என்று பதிலளித்தார்கள்.
(பிறகு) எது மிகச் சிறந்த தர்மம்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ரமளான் மாதத்தில் வழங்கப்படும் தர்மம் (மிகச் சிறந்தது)” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது ஃகரீப் எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதில் வரும் ஸதகா பின் மூஸா என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களிடம் அந்தளவிற்கு பலமானவர் அல்ல.
(திர்மிதி: 663)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ مُوسَى، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ قَالَ:
سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الصَّوْمِ أَفْضَلُ بَعْدَ رَمَضَانَ؟ فَقَالَ: «شَعْبَانُ لِتَعْظِيمِ رَمَضَانَ»، قِيلَ: فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «صَدَقَةٌ فِي رَمَضَانَ»
«هَذَا حَدِيثٌ غَرِيبٌ، وَصَدَقَةُ بْنُ مُوسَى لَيْسَ عِنْدَهُمْ بِذَاكَ القَوِيِّ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-663.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-599.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19752-ஸதகா பின் மூஸா அத்தகீகீ-அபுல் முகீரா என்பவர் பற்றி முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் இப்ராஹீம என்பவர் மட்டுமே நம்பகமானவர் என்று கூறியுள்ளார். - இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இன்னும் பலர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். - தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/432, மீஸானுல் இஃதிதால்-3879, தஹ்தீபுத் தஹ்தீப்-2/208, தக்ரீபுத் தஹ்தீப்-1/452)
- மேலும் இந்தச் செய்தி முஸ்லிம்-2157 எண்ணில் வரும், ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும் என்ற செய்திக்கு முரணாக உள்ளது.
இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-9763 , திர்மிதீ-663 , முஸ்னத் பஸ்ஸார்-6890 , முஸ்னத் அபீ யஃலா-3431 , ஷரஹ் மஆனில் ஆஸார்-3330 , குப்ரா பைஹகீ-8517 , ஷுஅபுல் ஈமான்-3539 ,
சமீப விமர்சனங்கள்