தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-813

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

813. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே ஹஜ்ஜைக் கடமையாக்குவது எது? என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கட்டுச்சாதமும் (உணவு) வாகனமும் ஆகும் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : (ரலி)

இப்னு உமர் (ரலி)

عبد الله بن عمر بن الخطاب العدوي

இறப்பு: ஹிஜ்ரி 74, மக்கா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் உமர் பின் அல்கத்தாப்

தந்தை பெயர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)

வம்சம்: குறைஷி, பனூ அதீ

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 10, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 74, மக்கா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

இப்னு உமர் (ரலி) இரண்டாவது கலீஃபா உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் மகனும், நபித்தோழரும் ஆவார். சிறு வயதிலேயே தம் தந்தையுடன் இஸ்லாத்தை ஏற்று, அவருடன் ஹிஜ்ரத் செய்தார். சிறுவராக இருந்ததால் உஹுத் போரில் அனுமதிக்கப்படவில்லை; கந்தக் போரிலும் அதற்குப் பின் நடந்த போர்களிலும் நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொண்டார்.

ஹதீஸிலும் மார்க்கச் சட்டத்திலும் முன்னணி அறிஞராக இருந்தார்; இறையச்சம், நேர்மை, நபிவழிச் செய்திகளில் ஆழ்ந்த அறிவு ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றவர். உம்முல் முஃமினீன் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் சகோதரர் ஆவார். ஹிஜ்ரி 74 ஆம் ஆண்டு மக்காவில் மரணித்தார் என்று பலர் கூறியுள்ளனர்; ஹிஜ்ரி 73 என்றும் கூறப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), உமர் பின் அல்கத்தாப் (ரலி), ஸைத் பின் அல்கத்தாப் (ரலி), ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி), அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அலீ பின் அபூதாலிப் (ரலி), பிலால் பின் ரபாஹ் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), ஸுஹைப் பின் ஸினான் (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), ஆஇஷா பின்த் அபூபக்ர் (ரலி)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸாலிம் பின் அப்துல்லாஹ் (ரஹ்), நாஃபிஉ (ரஹ்), ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்), காஸிம் பின் முஹம்மத் (ரஹ்), வாகித் பின் அப்துல்லாஹ் (ரஹ்), அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் (ரஹ்), உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் (ரஹ்), ஹம்ஸா பின் அப்துல்லாஹ் (ரஹ்), ஸைத் பின் அப்துல்லாஹ் (ரஹ்), பிலால் பின் அப்துல்லாஹ் (ரஹ்)

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் உமர், இப்னு உமர் (ரலி), அபூ அப்துர்ரஹ்மான்


ஆதாரம்: muslimscholars.info (18) · Should verify


حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَزِيدَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادِ بْنِ جَعْفَرٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ:

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا يُوجِبُ الحَجَّ؟ قَالَ: «الزَّادُ وَالرَّاحِلَةُ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ» وَالعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ العِلْمِ: أَنَّ الرَّجُلَ إِذَا مَلَكَ زَادًا وَرَاحِلَةً وَجَبَ عَلَيْهِ الحَجُّ «وَإِبْرَاهِيمُ هُوَ ابْنُ يَزِيدَ الخُوزِيُّ المَكِّيُّ وَقَدْ تَكَلَّمَ فِيهِ بَعْضُ أَهْلِ العِلْمِ مِنْ قِبَلِ حِفْظِهِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-741.
Tirmidhi-Shamila-813.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-740.



إسناد شديد الضعف فيه إبراهيم بن يزيد الخوزي وهو متروك الحديث

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் إبراهيم بن يزيد الخوزي இப்றாஹீம் பின் யஸீத் பலவீனமானவர். இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்களே இதை இங்கு குறிப்பிட்டுள்ளார்கள்.

1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-15056 , 15703 , இப்னு மாஜா-2896 , திர்மிதீ-813 , 2998 , அல்முஃஜமுல் அவ்ஸத்-5041 , தாரகுத்னீ-2421 , 2422 , 2423 , குப்ரா பைஹகீ-8623 , 8637 , 9110 , 10129 ,

கருத்து சரியா?

உணவும் வாகனமும் ஹஜ்ஜைக் கடமையாக்கி விடும் என்று நபிகள் நாயகம் கூறியதாக உள்ள செய்தி அறிவிப்பின் அடிப்படையில் பலவீனம் அடைவதைப் போன்று கருத்தை கவனிக்கும் போதும் அது தவறான செய்தி என்பது விளங்கி விடுகிறது.

ஏனெனில் ஹஜ் யாருக்கு கடமை என்பதை குர்ஆன் விளக்கும் போது பின்வருமாறு கூறுகின்றது.

அதில் தெளிவான சான்றுகளும், மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.

(திருக்குர்ஆன் 3:97)

சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்கு ஹஜ் கடமை எனும் இறைவார்த்தையிலிருந்து உணவும் வாகனமும் இருந்து விட்டால் மட்டும் ஹஜ் கடமை என்றாகி விடாது. மாறாக சென்று வர உடல் ஒத்துழைப்பதும் – ஆரோக்கியமாக இருப்பதும் அவசியம் என்பதை அறியலாம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.