بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ஹதீஸில் ஏற்படும் இடைச்செருகல் பற்றிய விளக்கம்:
ஹதீஸ் வகைகளில் “முத்ரஜ்-இடைச்செருகல்” என்ற ஒரு வகை உள்ளது.
- அதாவது நபி (ஸல்) அவர்கள் சொல்லாத வார்த்தையோ அல்லது வாக்கியமோ அவர்கள் சொன்னது போன்று கலந்துவிடும் செய்திக்கு முத்ரஜ் என்று கூறப்படும்.
- இவ்வாறே அறிவிப்பாளரின் தவறின் காரணமாக அல்லது வேறு ஏதேனும் காரணமாக அறிவிப்பாளர்தொடரில் ஏற்படும் கூடுதல் குறைவும், அறிவிப்பாளர்தொடருக்கு சம்பந்தமில்லாத செய்தி கலப்பதும் முத்ரஜ் ஆகும்.
எனவே இடைச் செருகல் அறிவிப்பாளர்தொடரிலும் ஏற்படும்; அல்லது ஹதீஸின் கருத்திலும் ஏற்படும் என்பதால் முத்ரஜ் இருவகைப்படும்.
1 . முத்ரஜ் ஃபில் இஸ்னாத்-அறிவிப்பாளர்தொடரில் இடைச்செருகல் ஏற்படுவது.
2 . முத்ரஜ் ஃபில் மதன்-ஹதீஸின் கருத்தில் இடைச்செருகல் ஏற்படுவது.
முத்ரஜ் ஃபில் இஸ்னாத்-அறிவிப்பாளர்தொடரில் இடைச்செருகல் ஏற்படுவது 6 வகையாகும்.
1 . ஒரு செய்தியை (வெவ்வேறான வார்த்தை அமைப்பில் கூடுதல் குறைவாக) இருவகையான அறிவிப்பாளர்தொடரில், ஒரு அறிவிப்பாளர் அறிவித்திருப்பார்.
சிலர், இந்த இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் ஏதேனும் ஒரு அறிவிப்பாளர்தொடரை மட்டும் கூறி (இரண்டு அறிவிப்பாளர்தொடரில் உள்ள செய்திகளை) சேர்த்து அறிவிப்பது.
(இந்த வகையை இப்னுஸ் ஸலாஹ் பிறப்பு ஹிஜ்ரி 577
இறப்பு ஹிஜ்ரி 643
வயது: 66
அவர்கள் முதல் வகையாகவும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் 2 வது வகையாகவும் கூறியுள்ளனர்)
உதாரணம்: தாரிமீ-1397.
ஆஸிம் பின் குலைப் அவர்களிடமிருந்து இப்னு உயைனா, ஸாயிதா பின் குதாமா ஆகியோர் (வாயில் பின் ஹுஜர் (ரலி) அவர்கள் குளிர்காலத்தில் மதீனாவுக்கு வந்த போது மக்கள் தொழுகையில் அத்தஹிய்யாத்தில் கையை உயர்த்துவது பற்றி) அறிவித்துள்ள செய்தி. இதில் ஒரே அறிவிப்பாளர்தொடரில், இரு அறிவிப்பாளர்தொடரின் செய்திகளை அறிவித்துள்ளனர்.
இதை சரியாக அறிவித்தவர்களின் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-18876.
இதில் ஆஸிம் பின் குலைப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஹைர் பின் முஆவியா அவர்கள் இரண்டு அறிவிப்பாளர் தொடரையும் பிரித்து அறிவித்துள்ளார்.
(நூல்: முகத்திமது இப்னுஸ் ஸலாஹ்-198)
2 . ஒரு செய்தியின் அறிவிப்பாளர்தொடரில், அந்த செய்தியின் அறிவிப்பாளர் கூறாத; (வேறு அறிவிப்பாளர் வேறு அறிவிப்பாளர்தொடரில் கூறிய) வார்த்தைகளை இவரின் அறிவிப்பாளர்தொடரில் கூறுவது.
(முதல் வகை வேறு. இந்த வகை வேறு)
(இந்த வகையை இப்னுஸ் ஸலாஹ் பிறப்பு ஹிஜ்ரி 577
இறப்பு ஹிஜ்ரி 643
வயது: 66
அவர்கள் 2 வது வகையாகவும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் 3 வது வகையாகவும் கூறியுள்ளனர்)
உதாரணம்: மாலிக்-2640.
இது அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் சரியான அறிவிப்பாளர்தொடராகும். இந்த அறிவிப்பாளர்தொடரில் “வலா தனாஃபஸூ” என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதும் சரியானதே.
ஆனால் இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்தியில் “வலா தனாஃபஸூ” என்ற வார்த்தை இல்லாமல் தான் அதிகமானோர் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாமிடமிருந்து அறிவித்துள்ளனர்.
ஆனால் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாமிடமிருந்து அறிவிக்கும் ஸயீத் பின் அபூமர்யம் அவர்கள், மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.—> ஸுஹ்ரீ —> அனஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் கீழ்க்கண்டவாறு அறிவித்துள்ளார்.
لَا تَبَاغَضُوا، ولَا تَحَاسَدُوا، ولَا تَدَابَرُوا، ولَا تَنَافَسُوا
“வலா தனாஃபஸூ” என்ற வார்த்தையின் சரியான அறிவிப்பாளர்தொடர், மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.—> அபுஸ்ஸினாத் —> அஃரஜ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்பதாகும்.
(நூல்: முகத்திமது இப்னுஸ் ஸலாஹ்-198)
3 . ஒரு செய்தியின் கருத்தை பல அறிவிப்பாளர்கள் வெவ்வேறு அறிவிப்பாளர்தொடரில் அறிவித்திருக்க, ஒருவர் ஏதேனும் ஒரே ஒரு அறிவிப்பாளர்தொடரில் அனைவரும் அறிவித்துள்ளதாக கூறுவது.
(இந்த வகையை இப்னுஸ் ஸலாஹ் பிறப்பு ஹிஜ்ரி 577
இறப்பு ஹிஜ்ரி 643
வயது: 66
அவர்கள் 3 வது வகையாகவும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் முதல் வகையாகவும் கூறியுள்ளனர்)
உதாரணம்: அஹ்மத்-4131.
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، وَالْأَعْمَشُ، وَوَاصِلٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الذَّنْبِ أَعْظَمُ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ؟ قَالَ: «أَنْ تَجْعَلَ لِلَّهِ عَزَّ وَجَلَّ نِدًّا، وَهُوَ خَلَقَكَ» ، قَالَ: قُلْتُ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «ثُمَّ أَنْ تَقْتُلَ وَلَدَكَ خَشْيَةَ أَنْ يَأْكُلَ مِنْ طَعَامِكَ» – وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ مَرَّةً: «أَنْ يَطْعَمَ مَعَكَ» -، قَالَ: ثُمَّ قُلْتُ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «أَنْ تُزَانِيَ بِحَلِيلَةِ جَارِكَ»
- இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் மன்ஸூர், அஃமஷ் (ஸுலைமான் பின் மிஹ்ரான்), வாஸில் ஆகிய மூன்று பேரிடமிருந்து அபூவாயில் —> அபூமைஸரா (அம்ர் பின் ஷுரஹ்பீல்) —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்ததாக அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ அவர்கள் அறிவித்துள்ளார். - இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களிடமிருந்து அறிவிக்கும் யஹ்யா பின் ஸயீத் அவர்கள் பிரித்து அறிவித்துள்ளார். இதை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் புகாரி-6811 மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
قَالَ يَحْيَى: وَحَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي وَاصِلٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مِثْلَهُ
அதாவது வாஸில் அவர்கள் மட்டும், அபூவாயில் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் (இருவருக்கும் இடையில் அபூமைஸராவை கூறாமல்) ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அறிவித்ததாக யஹ்யா பின் ஸயீத் அவர்கள் பிரித்து அறிவித்துள்ளார்.
- இந்தச் செய்தியை மன்ஸூர், அஃமஷ் ஆகியோர் அபூவாயில் அவர்களுக்கும், இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களுக்கும் இடையில் அபூமைஸரா இடம்பெறுவதாக மனனமிட்டுள்ளனர். - வாஸில் அவர்கள், அபூவாயில் அவர்களுக்கும், இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களுக்கும் இடையில் அபூமைஸரா இடம்பெறாதவாறு மனனமிட்டுள்ளார்.
1 . இந்த இருவகையான செய்திகளை ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் மூலமாக பெற்ற அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள் வாஸில் அவர்களும் மற்ற இருவர் போன்று அறிவிப்பதாக ஹதீஸை அறிவித்துவிட்டார்.
2 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள் இருவகையான அறிவிப்பாளர்தொடரையும் தனித்தனியாக பிரித்து அறிவித்துள்ளார்.
4 . ஒரு நபித்தோழர் வேறு நபித்தோழரிடமிருந்து அறிவித்த செய்தியுடன், இந்த நபித்தோழர் அறிவித்த செய்தியை சேர்த்து அறிவிப்பது.
(இந்த வகையை இப்னுஸ் ஸலாஹ்,பிறப்பு ஹிஜ்ரி 577
இறப்பு ஹிஜ்ரி 643
வயது: 66
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோர் கூறவில்லை. இந்த இருவருக்கும் முன்னால் வந்த கதீப் பஃக்தாதீ அவர்கள் கூறியுள்ளார்)
உதாரணம்: முஸ்லிம்-3626, இப்னு மாஜா-3729.
முஸ்லிமில் வரும் செய்தி, ஜாபிர் (ரலி) —> உமர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது.
இப்னு மாஜாவில் வரும் செய்தியின் கருத்தை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கவில்லை. இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
—> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் தான் அதிகமானோர் அறிவித்துள்ளனர்.
ஆனால் இந்த இரு செய்தியின் கருத்தையும் சேர்த்து, அப்தா பின் அப்துல்லாஹ் அவர்கள், அபூஅஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஸுபைரீ —> ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
—> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி) —> உமர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துவிட்டார்.
الفصل للوصل المدرج في النقل (2/ 805):
أخبرنا أبو بكر أحمد بن محمد بن غالب الخوارزمي، أنا علي بن عمر الحافظ، نا ابن صاعد ـ إملاءً ـ نا عبدة ابن عبد الله الصفار، نا أبو أحمد الزبيري، نا سفيان، عن أبي الزبير، عن جابر، عن عمر، عن النبي صلى الله عليه وسلم قال: “لئن عشت لأخرجن اليهود والنصارى من جزيرة العرب
قال: وقال رسول الله صلى الله عليه وسلم: “ولأنهين أن يسمى رباحاً ونجيحاً وأفلح ويساراً”
(நூல்: அல்ஃபஸ்ல் லில்வஸ்லில் முத்ரஜி ஃபின்னக்ல்-ஹதீஸ் 91)
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (2/ 95)
137- وَسُئِلَ عَنْ حَدِيثِ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ إِنْ عِشْتُ لَأُخْرِجَنَّ الْيَهُودَ وَالنَّصَارَى مِنْ جَزِيرَةِ الْعَرَبِ.
فَقَالَ: يَرْوِيهِ أَبُو الزُّبَيْرِ، وَوَهْبُ بْنُ مُنَبِّهٍ، عَنْ جَابِرٍ.
وَاخْتُلِفَ عَنِ الزُّهْرِيِّ؛ فَرَوَاهُ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، عَنْ عَمِّهِ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي ابْنُ تَدْرُسَ، وَهُوَ أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ عُمَرَ.
وَخَالَفَهُ مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، رَوَاهُ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: قَالَ جَابِرٌ: عَنْ عُمَرَ، مُرْسَلًا.
وَرَوَاهُ أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، عَنِ الثَّوْرِيِّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ عُمَرَ، هَذَا الْحَدِيثَ وَأَلْحَقَ بِهِ كَلَامًا آخَرَ أَدْرَجَهُ فِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَأَنْهِيَنَّ أَنْ يُسَمَّى رَبَاحًا وَنَجِيحًا.
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களும் இந்தச் செய்தியை குறிப்பிடும்போது இரண்டாவது பகுதி முத்ரஜ் என்று இறுதியில் கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-137)
5 . ஒரு ஹதீஸ்கலை அறிஞர், ஹதீஸை அறிவிக்கும்போது முதலில் அறிவிப்பாளர்தொடரை சொல்லிக் கொண்டே வருவார். இடையில் யாரேனும் குறிக்கிட்டுவிட்டால் அல்லது வேறு காரணத்தால் ஏதேனும் கருத்தை சொல்லிவிடுவார். இதைக் கவனிக்காதவர்கள் இந்த அறிவிப்பாளர்தொடருக்கு இது மதன் (கருத்து) என்று கருதி அதை சேர்த்து விடுவது.
(இந்த வகையை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் 4 வது வகையாக கூறியுள்ளார்)
உதாரணம்: இப்னு மாஜா-1333, மாலிக்-486,
6 . ஒருவர், ஒரு ஹதீஸின் பாதியை அல்லது சிலதை மட்டுமே தனது ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டிருப்பார். மற்றொரு பகுதியை அல்லது சிலதை வேறு ஒருவர் வழியாக தனது ஆசிரியரின் செய்தியாக கேட்டிருப்பார். சிலர் இதைத் தெரியாமல் முழுச் செய்தியையும் இரண்டில் ஏதேனும் ஒரு அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துவிடுவார்கள்.
(இந்த வகையை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)தனது நுஸ்ஹத் எனும் நூலில் 2 வது வகையில் ஒரு பகுதியாக கூறியுள்ளார். மேலும் முத்ரஜ் ஃபில் இஸ்னாத் என்ற இந்த வகையை தனது நுகத் எனும் நூலில் 5 வகையாக குறிப்பிட்டுள்ளார்.)
உதாரணம்: இப்னு மாஜா-2578.
இதில் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹுமைத் அவர்கள் “வஅப்வாலிஹா-ஒட்டகத்தின் சிறுநீரையும்” என்ற வார்த்தையை மட்டும் நேரடியாக அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கவில்லை. கதாதா —> அனஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் தான் கேட்டுள்ளார்.
இதை ஹுமைத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
யஸீத் பின் ஹாரூன் போன்றவர்கள் இரண்டையும் பிரித்து அறிவித்துள்ளனர்.
(பார்க்க: அஹ்மத்-13128, 13129)
முத்ரஜ் ஃபில் மதன்-கருத்தில் இடைச்செருகல் ஏற்படுவது.
இது 3 வகையாகும்.
1 . நபித்தோழரின் சொல் நபியின் சொல்லுடன் கலந்துவிடுவது.
உதாரணம்: அபூதாவூத்-970, புகாரி-165,
2 . தாபிஈ உடைய சொல் நபியின் சொல்லுடன் கலந்துவிடுவது.
3 . தபிஈன்களுக்கு அடுத்துள்ளவர்களின் சொல், நபியின் சொல்லுடன் கலந்துவிடுவது.
- மேலும் முத்ரஜ் பகுதி செய்தியின் ஆரம்பத்திலும் நிகழும்.
- செய்தியின் நடுவிலும் நிகழும்.
- செய்தியின் கடைசியிலும் நிகழும்.
- செய்தியின் கடைசியில் நிகழ்வதே அதிகமாக உள்ளது.
(நூல்: அல்ஃபஸ்ல் லில்வஸ்லில் முத்ரஜி ஃபின்னக்ல்-1/22-25)
முத்ரஜை அறியும் வழிகள்:
1 . குறிப்பிட்ட செய்தியின் பல அறிவிப்பாளர்தொடர்களை ஆய்வு செய்யும்போது சரியான அறிவிப்பாளர்தொடரில் குறிப்பிட்ட இன்ன வார்த்தையோ அல்லது வாக்கியமோ ஏதேனும் ஒரு அறிவிப்பாளரின் சொல்லாகவோ அல்லது விளக்கமாகவோ வந்திருப்பது.
2 . குறிப்பிட்ட இன்ன வார்த்தையையோ அல்லது வாக்கியத்தையோ நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கமாட்டார்கள் என்று வெளிப்படையில் தெரிவது.
3 . ஹதீஸின் வாக்கிய அமைப்பின் மூலமே, இது முத்ரஜ் என்று வெளிப்படையாக தெரிவது.
4 . (மேற்கண்ட முறைகள் மூலம் ஆய்வு செய்து) ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர் இதைப் பற்றி கூறியிருப்பது.
முத்ரஜுக்கும், மவ்ளூஃவுக்கும் உள்ள வித்தியாசம்:
1 . முத்ரஜ், பலமான அல்லது சுமாரான அறிவிப்பாளரின் கவனக்குறைவால் ஏற்படுவதாகும். சில நேரம் நினைவாற்றலில் மோசமானவர்களின் காரணமாகவும் ஏற்படும்.
ஆனால் மவ்ளூஃ என்பது வேண்டுமென்றே ஹதீஸை இட்டுக்கட்டக்கூடியவர்களால் ஏற்படுவதாகும்.
2 . முத்ரஜ் வாக்கியம் ஹதீஸின் ஒரு வார்த்தையையோ அல்லது கருத்தையோ விளக்குவதற்கு கூறப்பட்டிருக்கும். அல்லது நபி (ஸல்) அவர்களின் கருத்தை முழுமைப்படுத்துவதற்காக கூறப்பட்டிருக்கும். (இதுவும் விளக்கமாக கூறப்பட்டதே)
ஆனால் மவ்ளூஃவில் ஒன்றை விளக்குவதற்காக கூறியிருந்தாலும், அல்லது பொதுவாக கூறியிருந்தாலும் அறிவிப்பாளர் பொய்யராக இருப்பார்.
மேற்கண்ட முத்ரஜின் சில வகைகளை ஹதீஸ்கலை அறிஞர்கள் இல்லத் (நுணுக்கமான குறை) வகைகளில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது, அறிவிப்பாளர்களின் தவறின் காரணமாக அல்லது பொய்யின் காரணமாக, அல்லது இது போன்ற வேறு சில காரணமாக “வெவ்வேறு அறிவிப்பாளரின் தனித்தனியான இரண்டு ஹதீஸ்கள் ஒரே ஹதீஸாக; அல்லது இரண்டு ஹதீஸ்களின் சில கருத்துக்கள் கலந்து ஒரே ஹதீஸாக அறிவிக்கப்பட்டு அதனால் (சில செய்திகளில்) கருத்து சிதைவு ஏற்படும்.
இதை இல்முல் இலல் அறிஞர்கள், துகூலு ஹதீஸின் ஃபீ ஹதீஸின் என்பது போன்ற வார்த்தைகளில் குறிப்பிடுவார்கள். இவ்வாறு அடிக்கடி தவறாக அறிவிக்கும் அறிவிப்பாளர்களைப் பற்றி அறிஞர்கள் குறிப்பிடும்போது அஹாதீஸுஹூ மக்லூபதுன்- இவரின் ஹதீஸ்கள் தலைகீழாக மாற்றப்பட்டவை என்பது போன்ற வார்த்தைகளைக் குறிப்பிடுவார்கள்.
ஒரு ஹதீஸில் இல்லத் எனும் நுணுக்கமான குறைப்பாடு உள்ளதா? இல்லையா? என்பதைக் கண்டறிய جمع طرق الحديث அதன் அனைத்து அறிவிப்பாளர்தொடர்களை ஒன்றுத்திரட்டி, அதில் இடம்பெறும் அறிவிப்பாளர்களின் தரங்களை ஆய்வு செய்து அதன்படி முடிவு செய்வது இலல் துறையின் முக்கிய அம்சமாகும்.
இந்த வகையை தெரிந்துக் கொள்வதற்கும் جمع طرق الحديث அவசியமாகும். இந்த வகையைச் சேர்ந்த சில செய்திகளை அறிஞர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். இன்னாரின் செய்தியுடன், வேறு ஒருவரின் செய்தி கலந்துவிட்டது என்றோ அல்லது இந்த அறிவிப்பாளர்தொடர் இந்த செய்தியில் கலந்துவிட்டது என்றோ குறிப்பிட்டுள்ளார்கள்.
இதற்கு உதாரணமான செய்தி:
பார்க்க: இப்னு குஸைமா-176 .
சமீப விமர்சனங்கள்