தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-23625

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு விசயங்களை ஆதமுடைய மகன் (மனிதன்) வெறுக்கிறான். (ஒன்று) மரணம். (இரண்டு) குறைந்த பொருளாதாரம். (ஆனால்) மரணம் இறைநம்பிக்கையாளருக்கு (உலகத்தின்) குழப்பத்தை விட சிறந்தது. குறைந்த பொருளாரம் (பெற்றிருப்பது) மறுமையின் கேள்விக் கணக்கை குறைக்கும்.

அறிவிப்பவர்: மஹ்மூத் பின் லபீத் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 23625)

حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ، عَنْ عَمْرٍو، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

اثْنَتَانِ يَكْرَهُهُمَا ابْنُ آدَمَ: الْمَوْتُ، وَالْمَوْتُ خَيْرٌ لِلْمُؤْمِنِ مِنَ الْفِتْنَةِ، وَيَكْرَهُ قِلَّةَ الْمَالِ، وَقِلَّةُ الْمَالِ أَقَلُّ لِلْحِسَابِ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-23625.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-23002.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32563-அம்ர் பின் மைஸரா-அம்ர் பின் அபூஅம்ர் என்பவர் பற்றி இஜ்லி இமாம், அபூஸுர்ஆ ஆகியோர் இவர் பலமானவர் என்றும்,
  • இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    ஆகியோர் இவர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர்.
  • இவ்வாறே இவர் நம்பகமானவர் என்றாலும் சிறிது தவறிழைப்பவர் என்று ஸாஜீ, இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.
  • இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    உஸ்மான் பின் ஸயீத் ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/294)

  • (இவர் இக்ரிமா வழியாக பலமானவருக்கு மாற்றமாக ஒரு செய்தியை… அறிவித்துள்ளார் என்பதால்) இவர் இக்ரிமா வழியாக முன்கரான செய்தியை அறிவிப்பவர் என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் கூறியதாக திர்மிதீ அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் கபீர்-428)

  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் பலமானவர் என்றாலும் சில இடத்தில் தவறாக அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/742)

இக்ரிமா வழியாக இவர் முன்கரான செய்தியை அறிவித்ததால் தான் இவரை சிலர் பலவீனமானவர் என்று கூறினர். இவர் இடம்பெறும் சில செய்திகளை புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.

  • மேலும் பெரும்பாலான அறிஞர்கள் இவரை ஸதூக்-நம்பகமானவர் என்று கூறியுள்ளனர் என்பதால் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இமாம் அவர்களும் இவரை ஸதூக்-நம்பகமானவர் என்றும், ஹஸனுல் ஹதீஸ்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்றும் கூறியுள்ளார்.

(நூல்: அல்காஷிஃப்-3/529, தஹ்தீபுத் தஹ்தீப்-3/294)

மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள், சிறிய வயது நபித்தோழர் ஆவார். இவர் மற்ற நபித்தோழர்களிடமிருந்து தான் அறிவிப்பார் என்பதால் இது முர்ஸலுஸ் ஸஹாபீ ஆகும். ஹதீஸ்கலை விதிப்படி இதை ஆதாரமாக ஏற்கலாம் என்றும், இந்த செய்தியை சரியானது என்றும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-813)

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-2362523626 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.