தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-7294

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

..இறைநம்பிக்கைக் கொண்டோரில் மிகவும் ஆச்சரியமானோர் யார் என்று தெரியுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், வானவர்கள் என்று பதிலளித்தார்கள். வானவர்கள் எப்படி நம்பிக்கைக் கொள்ளாமல் இருப்பார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூற, நபித்தோழர்கள்  நபிமார்கள் என்று பதிலளித்தார்கள். அவர்களுக்கு வஹீ எனும் இறைச் செய்தி கிடைக்கும்போது எவ்வாறு இறைநம்பிக்கை கொள்ளாமல் இருப்பார்கள் என்று  நபி ஸல் அவர்கள் கூற, நபித்தோழர்கள், நபிமார்களின் தோழர்கள் என்று பதிலளித்தார்கள். அவர்கள் நபிமார்களுடன் இருக்கும்போது எப்படி நம்பிக்கைக் கொள்ளாமல் இருப்பார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறிவிட்டு, எனக்கு பின்னால் சிலர் வருவார்கள்; வஹியின் நூலை காண்பார்கள். அதை நம்பிக்கைக் கொண்டு அதில் உள்ளதின் படி நடப்பார்கள். இவர்களே மக்களில் (அல்லது படைப்பினங்களில்) இறைநம்பிக்கைக் கொள்வதில் ஆச்சரியமானவர்கள் என்று கூறினார்கள்….

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(bazzar-7294: 7294)

حَدَّثنا الفضل بن يعقوب الرخامي، حَدَّثنا زيد بن يَحْيَى بن عُبَيد الدمشقي، حَدَّثنا سَعِيد بْنِ بَشِيرٍ، عَن قَتادة، عَن أَنَسٍ، قَالَ: قَالَ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم:

أَيُّ الْخَلْقِ أَعْجَبُ إِيمَانًا؟ قَالُوا: الْمَلائِكَةُ، قَالَ: الْمَلائِكَةُ كَيْفَ لَا يُؤْمِنُونَ؟ قَالَ: النَّبِيُّونَ، قَالَ: النَّبِيُّونَ يُوحَى إِلَيْهِمْ فَكَيْفَ لَا يُؤْمِنُونَ؟ قَالُوا: الصَّحَابَةُ، قَالَ: الصَّحَابَةُ يَكُونُونَ مَعَ الأَنْبِيَاءِ، فَكَيْفَ لا يُؤْمِنُونَ، وَلكن أَعْجَبَ النَّاسِ إِيمَانًا: قَوْمٌ يجيؤون مِنْ بَعْدِكُمْ، فَيَجِدُونَ كِتَابًا مِنَ الْوَحْيِ، فَيُؤْمِنُونَ بِهِ، وَيَتَّبِعُونَهُ، فَهُمْ أَعْجَبُ النَّاسِ، أَوِ الْخَلْقِ، إِيمَانًا.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-7294.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.




3 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-7294 ,

மேலும் பார்க்க: அஹ்மத்-16976 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.