தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-16976

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூஜுமுஆ-ஹபீப் பின் ஸிபாஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உணவு உண்டோம். எங்களுடன் அபூஉபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அப்போது அபூஉபைதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களை விடச் சிறந்தவர்கள் வேறு யாரேனும் இருப்பார்களா? நாங்கள் தங்களுடன் இணைந்து இஸ்லாமைத் தழுவினோம், தங்களுடன் இணைந்தே ஜிஹாதும் செய்தோம்” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்! உங்களுக்குப் பின்னால் வரக்கூடிய ஒரு சமுதாயம். அவர்கள் என்னைப் பார்க்காமலேயே என் மீது நம்பிக்கை கொள்வார்கள்” என்று கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 16976)

حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي أَسِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنِي صَالِحُ بْنُ جُبَيْرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو جُمُعَةَ، قَالَ:

تَغَدَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَعَنَا أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ، قَالَ: فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ أَحَدٌ خَيْرٌ مِنَّا؟ أَسْلَمْنَا مَعَكَ وَجَاهَدْنَا مَعَكَ، قَالَ: «نَعَمْ، قَوْمٌ يَكُونُونَ مِنْ بَعْدِكُمْ يُؤْمِنُونَ بِي وَلَمْ يَرَوْنِي»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-16362.
Musnad-Ahmad-Shamila-16976.
Musnad-Ahmad-Alamiah-16362.
Musnad-Ahmad-JawamiulKalim-16632.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத் பின் ஹன்பல்

2 . அப்துல்குத்தூஸ் பின் ஹஜ்ஜாஜ்

3 . அவ்ஸாஈ இமாம்-அப்துர்ரஹ்மான் பின் அம்ர்

4 . அஸீத் பின் அப்துர்ரஹ்மான்-அல்கஸ்அமீ

5 . ஸாலிஹ் பின் ஜுபைர்

6 . அபூஜுமுஆ (ரலி)-ஹபீப் பின் ஸிபாஃ (ரலி)


التاريخ الكبير للبخاري (4/ 274 ت المعلمي اليماني):
‌‌2784 – ‌صالح ‌بْن ‌جُبَيْر، يعد فِي الشاميين، سَمِعَ أبا جمعة، روى عَنْهُ هشام بْن سَعْد والأوزاعي ومُعَاوِيَة بْن صالح، وَقَالَ الأوزاعي: صالح بْن مُحَمَّد، وقَالَ ضمرة عَنْ رجاء بْن أَبِي سَلَمَةَ: عَنْ ‌صالح ‌بْن ‌جُبَيْر الصدائي من كتاب عُمَر بْن عَبْد العزيز.


الجرح والتعديل – ابن أبي حاتم (4/ 397):
نا عبد الرحمن أنا يعقوب [بن إسحاق – 1] [الهروي – 2] فيما كتب إلي قال ثنا عثمان [بن سعيد – 1] قال سألت يحيى [بن معين – 1] عن صالح بن جبير كيف هو؟ فقال: ثقة.
نا عبد الرحمن قال ‌سئل ‌أبي ‌عن ‌صالح ‌بن ‌جبير ‌فقال: ‌شيخ ‌مجهول.


الضعفاء والمتروكون لابن الجوزي (2/ 47)
1655 – صَالح بن جُبَير الشَّامي يروي عَن أبي جُمُعَة قَالَ يحيى مَجْهُول وَقَالَ فِي رِوَايَة ثِقَة


تقريب التهذيب (ص271):
2846- ‌صالح ‌ابن ‌جبير الصدائي بضم المهملة وتخفيف الدال أبو محمد الطبراني كاتب عمر ابن عبد العزيز ‌صدوق ‌من ‌الرابعة عخ


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19482-ஸாலிஹ் பின் ஜுபைர் அவர்களை இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் பலமானவர் என்று கூறியதாக உஸ்மான் தாரிமீ அவர்கள் நேரடியாக கேட்டு அறிவித்துள்ளார். இதை இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
    இறப்பு ஹிஜ்ரி 327
    வயது: 87
    அவர்களும் குறிப்பிட்டுள்ளார்.
  • இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
    இறப்பு ஹிஜ்ரி 597
    அவர்கள், இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவரை அறியப்படாதவர் என்று கூறினார். பலமானவர் என்று கூறியதாக ஒரு கருத்தும் உள்ளது என்ற தகவலை மட்டும் கூறியுள்ளார். (இவர் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்களிடம் நேரடியாக கேட்டவரல்ல)
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவர் அறியப்படாதவர் என்று கூறியதாக இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
    இறப்பு ஹிஜ்ரி 327
    வயது: 87
    அறிவித்துள்ளார்.
  • புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இவரின் பெயரை அவ்ஸாயீ அவர்கள் ஸாலிஹ் பின் முஹம்மத் என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை ஸதூக் எனும் தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்கள்: தாரீகுல் கபீர்-4/274, அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/397, தஹ்தீபுல் கமால்-13/23, அல்இக்மால்-6/321, அள்ளுஅஃபாஉ வல்மத்ரூகூன்-இப்னுல் ஜவ்ஸீ-2/47, தஹ்தீபுத் தஹ்தீப்-2/190, தக்ரீபுத் தஹ்தீப்-1/443, 1/271)

ஒருவரை சிலர் அறியப்படாதவர் என்றும் வேறு சிலர் பலமானவர் என்றோ அல்லது இதுபோன்ற தகவலையோ கூறினால் அறியப்படாதவர் என்று கூறியோரின் கருத்தை விட்டுவிட வேண்டும். மேலும் இவரிடமிருந்து பலரும் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர் என்பதாலும், இவரை சிலர் பலமானவர் என்ற கருத்தில் கூறியிருப்பதாலும் இதற்கே முன்னுரிமை அளிக்கப்படும்.


1 . இந்தக் கருத்தில் அபூஜுமுஆ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அஸீத் —> ஸாலிஹ் பின் ஜுபைர் —> அபூஜுமுஆ (ரலி)

பார்க்க: அஹ்மத்-16976, முஸ்னத் அபீ யஃலா-1559, அல்முஃஜமுல் கபீர்-3537, 3539, ஹாகிம்-6992,

அல்முஃஜமுல் கபீர்-3540, 3541,


  • அஸீத் —> காலித் பின் துரைக் —> இப்னு முஹைரீஸ் —> அபூஜுமுஆ (ரலி)

பார்க்க: அஹ்மத்-16977, தாரிமீ-2786, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-2459, அல்முஃஜமுல் கபீர்-3538,


2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-6993.


3 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-7294.


கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.