அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்குப் பிறகு உங்களில் சிலர் சிலருடைய பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விட வேண்டாம்.
தனது தந்தை செய்த குற்றத்திற்காக அல்லது சகோதரன் செய்த குற்றத்திற்காக ஒருவர் தண்டிக்கப்படக் கூடாது.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
(நஸாயி: 4127)أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ الْأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ، وَلَا يُؤْخَذُ الرَّجُلُ بِجَرِيرَةِ أَبِيهِ، وَلَا بِجَرِيرَةِ أَخِيهِ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-4127.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-4082.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-1833-அபூபக்ர் பின் அய்யாஷ் பின் ஸாலிம்-ஷுஃபா பின் அய்யாஷ் வயதான காலத்தில் நினைவாற்றலில் கோளாறு ஏற்பட்டதால் ஹதீஸை அறிவிப்பதில் அதிகமாக தவறு ஏற்பட்டதால் இவரை யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர். இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
போன்றோர் விமர்சித்துள்ளனர். - இவர் அஃமஷ் வழியாக அறிவிக்கும் செய்தி பற்றி கேட்கப்படும் போது அனைவரின் வழியாகவும் இவர் அறிவிப்பதில் பலவீனமானவர் என்று இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
அவர்கள் கூறினார்…
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/492)
- இதன் அறிவிப்பாளர் தொடர்களை விரிவாக கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் அஃமஷ் வழியாக அறிவிக்கும் மற்ற பலமானவர்களான அபூமுஆவியா போன்ற பலர் இந்த செய்தியை முர்ஸலாக-நபித்தோழரை விட்டு அறிவித்துள்ளனர் என்பதால் இது முர்ஸல் என்பதே உண்மை என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-5/241)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூபக்ர் பின் அய்யாஷ் —> அஃமஷ் —> முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
(அபுல்லுஹா) —> மஸ்ரூக் —> இப்னு மஸ்வூத் (ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-1959 , 1960 , குப்ரா நஸாயீ-3579 , நஸாயீ-4127 , அல்முஃஜமுல் கபீர்-10301 ,
- ஷரீக் பின் அப்துல்லாஹ் —> அஃமஷ் —> முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
(அபுல்லுஹா) —> மஸ்ரூக் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: குப்ரா நஸாயீ-3578 , நஸாயீ-4126 ,
- ஹஃப்ஸ், அபூமுஆவியா, யஃலா —> அஃமஷ் —> முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
(அபுல்லுஹா) —> மஸ்ரூக் (ரஹ்)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-37187 , குப்ரா நஸாயீ-3580 , 3581 , நஸாயீ-4128 , 4129 ,
மேலும் பார்க்க: புகாரி-6166 .
சமீப விமர்சனங்கள்