தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-26340

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மிஸ்வாக் செய்து (பல்துலக்கி) இரண்டு ரக்அத் தொழுவது, மிஸ்வாக் செய்யாமல் 70 ரக்அத்கள் தொழுவதை விட சிறந்தது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

 

(முஸ்னது அஹ்மத்: 26340)

حَدَّثَنَا يَعْقُوبُ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ: وَذَكَرَ مُحَمَّدُ بْنُ مُسْلِمِ بْنِ شِهَابٍ الزُّهْرِيُّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ:

«فَضْلُ الصَّلَاةِ بِالسِّوَاكِ، عَلَى الصَّلَاةِ بِغَيْرِ سِوَاكٍ، سَبْعِينَ ضِعْفًا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-26340.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-25745.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-36907-முஹம்மது பின் இஸ்ஹாக் பின் யஸார் பற்றி சிலர் பலமானவர் என்றும், சிலர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும், சிலர் ஹஸன் தரத்தில் உள்ளவர் என்றும், இவர் தனித்து அறிவித்தால் ஏற்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.
  • இவர் தத்லீஸ்  செய்பவர் என்று இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    போன்றோர் விமர்சித்துள்ளனர். மேலும் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், ஹதீஸ்கலை இமாம்கள் இவர் விசயத்தில் கருத்துவேறுபாடு கொண்டுள்ளனர். இவரை (ஹதீஸில்) ஆதாரமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றவர்கள் இவர் போன்று அறிவித்துள்ளனரா? என்று பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் நம்பகமானவர்; என்றாலும் தத்லீஸ் செய்பவர், பலவீனமானவர்களை மறைத்து அறிவிப்பவர்; வரலாற்று செய்திகளில் இவரை ஏற்கப்படும் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-24/405, தஹ்தீபுத் தஹ்தீப்-3/504, தக்ரீபுத் தஹ்தீப்-1/825, தஃரீஃபு அஹ்லித் தக்தீஸ்-1/168, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-7/254)

  • இந்த கருத்தில் வரும் செய்திகளில் எவற்றிலும் முஹம்மது பின் இஸ்ஹாக் அவர்கள், ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை.
  • மேலும் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இந்த செய்தியை ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதஃபீ அறிவித்துள்ளார். இவர் ரய்யி என்ற பகுதியில் முஹம்மது பின் இஸ்ஹாக் அவர்களின் வகுப்புத்தோழர். இவர் பலவீனமானவர். இவரிடமிருந்தே முஹம்மது பின் இஸ்ஹாக் இந்த ஹதீஸைப் பெற்றிருப்பார் என்று கூறப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-14/92)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • யஹ்யா பின் அபூகஸீர் —> ஒரு மனிதர் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) 

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29664 ,

  • ஸுஹ்ரீ —> உர்வா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) 

பார்க்க: அஹ்மத்-26340 , முஸ்னத் பஸ்ஸார்-108 , முஸ்னத் அபீ யஃலா-4738 , இப்னு குஸைமா-137 , ஹாகிம்-515, குப்ரா பைஹகீ-159 , 161 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-887 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.