இப்னு அபூஹாதிம் அவர்கள் கூறுகிறார்:
நான், எனது தந்தை அபூஹாதிம் அர்ராஸீ அவர்களிடம், இப்னு உயைனா அவர்கள் அப்துல்லாஹ் பின் அபூநஜீஹ் —> அப்துல்லாஹ் பின் ஆமிர் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில்,
“நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை”
என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கும் செய்தி பற்றி கேட்டேன். அதற்கு என் தந்தை அப்துல்லாஹ் பின் அபூநஜீஹ் —> உபைதுல்லாஹ் பின் ஆமிர் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) —> நபி (ஸல்) என்று வந்திருப்பதே சரியானதாகும்-(அப்துல்லாஹ் பின் ஆமிர் என்று கூறியிருப்பது தவறாகும்) என்று கூறினார்.
(alilal-ibn-abi-hatim-2211: 2211)وَسَأَلتُ أَبِي عَن حَدِيثٍ ؛ رَواهُ ابنُ عُيَينَةَ ، عَنِ ابنِ أَبِي نَجِيحٍ ، عَن عَبْد اللهِ بنِ عامِرٍ ، عَن عَبدِ اللهِ بنِ عَمرٍو ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، قالَ :
مَن لَم يَرحَم صَغِيرَنا وَيَعرِف حَقَّ كَبِيرِنا فَلَيسَ مِنّا
قالَ أَبِي : الصَّحِيحُ ابنُ أَبِي نَجِيحٍ ، عَن عُبَيدِ اللهِ بنِ عامِرٍ ، عَن عَبدِ اللهِ بنِ عَمرٍو ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
Alilal-Ibn-Abi-Hatim-Tamil-.
Alilal-Ibn-Abi-Hatim-TamilMisc-.
Alilal-Ibn-Abi-Hatim-Shamila-2211.
Alilal-Ibn-Abi-Hatim-Alamiah-.
Alilal-Ibn-Abi-Hatim-JawamiulKalim-.
(குறிப்பு: இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள் தனது தந்தையிடம் கேட்டது அப்துல்லாஹ் பின் ஆமிர் இடம்பெறும் அறிவிப்பாளர்தொடர் பற்றி தான். இலலுல் ஹதீஸ் நூலின் சில பிரதிகளில் உபைதுல்லாஹ் பின் ஆமிர் இடம்பெறும் அறிவிப்பாளர்தொடரை பற்றி கேட்டதாக வந்துள்ளது. இது தவறாகும். காரணம் இதன்படி பார்த்தால் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களின் பதிலுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், அப்துல்லாஹ் பின் ஆமிர் என்று இடம்பெற்றதை மறுத்தே உபைதுல்லாஹ் பின் ஆமிர் என்பதே சரி என்று கூறுகிறார்)
பார்க்க: அபூதாவூத்-4943 .
சமீப விமர்சனங்கள்