பாடம்:
ஒருவர் மூன்று ரக்அத் வித்ர் தொழும்போது (அதைப்) பிரிக்காமல் தொழுவது கண்டனத்திற்குரிய செயல்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று ரக்அத் (எண்ணிக்கையில்) வித்ருத் தொழாதீர்கள்; ஐந்து அல்லது ஏழு ரக்அத் வித்ருத் தொழுங்கள். (மூன்று ரக்அத் வித்ருத் தொழுகையை) மஃக்ரிப் தொழுகையைப் போன்று தொழாதீர்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(இப்னு ஹிப்பான்: 2429)ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يُوتِرَ الْمَرْءُ بِثَلَاثِ رَكَعَاتٍ غَيْرِ مَفْصُولَةٍ
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَعَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ:
«لَا تُوتِرُوا بِثَلَاثٍ، أَوْتِرُوا بِخَمْسٍ، أَوْ بِسَبْعٍ، وَلَا تَشَبَّهُوا بِصَلَاةِ الْمَغْرِبِ».
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-2429.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-.
- இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் அப்துல்லாஹ் பின் ஃபள்ல் —> அபூஸலமா, அஃரஜ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரை பற்றி தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோர் இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள் என்று கூறியுள்ளனர். - மேலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இந்த செய்தியை சிலர் நபித்தோழரின் கூற்றாக அறிவித்திருந்தாலும் அது இந்த அறிவிப்பாளர்தொடருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட முடியாது என்றும் கூறியுள்ளார்.
(நூல்: அத்தல்கீஸ்-2/30)
மூன்று ரக்அத் வித்ருத் தொழுகையை மஃக்ரிபை போன்று ஆக்கக் கூடாது என்பதில் இருவித கருத்துக்கள் உள்ளன.
1 . இரண்டு ஸலாமில் தொழுவது. (இரண்டு ரக்அத் தொழுவிட்டு ஸலாம் கூறி 3 வது ரக்அத்தை தனியாக தொழுது ஸலாம் கொடுப்பது)
2 . மூன்று ரக்அத் வித்ருத் தொழும் போது இரண்டாவது ரக்அத்தில் அத்தஹிய்யாத் ஓத அமராமல், கடைசி ரக்அத்தில் மட்டும் அத்தஹிய்யாத் இருப்பு இருப்பது.
…
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துல்லாஹ் பின் ஃபள்ல் —> அபூஸலமா, அஃரஜ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-1738 , இப்னு ஹிப்பான்-2429 , தாரகுத்னீ-1650 , 1651 , ஹாகிம்-1138 , குப்ரா பைஹகீ-4815 ,
- யஸீத் பின் அபூஹபீப் —> இராக் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.—> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஹம்மது பின் நஸ்ர்-48, அல்அவ்ஸத்-இப்னுல் முன்திர்-2590 , ஹாகிம்-1137 , குப்ரா பைஹகீ-4816 , முவள்ளிஹுல் அவ்ஹாம்-1096 ,
இந்த செய்திகளின் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20083-தாஹிர் பின் அம்ர்-ஹபஷீ பின் அம்ர் என்பவரின் நம்பகத் தன்மை அறியப்படவில்லை என்பதால் இவை பலவீனமான அறிவிப்பாளர் தொடர்களாகும்.
- ஜஃபர் பின் ரபீஆ —> இராக் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.—> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-1739 , குப்ரா பைஹகீ- 4817 ,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: நஸாயீ-1699 ,
அஸ்ஸலாமு அலைக்கும்,
தலைப்பில் ஒருவர் மூன்று ரக்அத் வித்ர் தொழும்போது (அதைப்) பிரிக்காமல் தொழுவது கண்டனத்திற்குரிய செயல் என்று உள்ளது மேலும் இதற்கு ஆதாரமாக புகாரியில் வித்ரை 2+1 என்று பிரித்தே தொழுததாக செய்தி உள்ளது. அதுவே உங்கள் விளக்கத்தில் 1வது உள்ளது.
ஆனால்
2 . மூன்று ரக்அத் வித்ருத் தொழும் போது இரண்டாவது ரக்அத்தில் அத்தஹிய்யாத் ஓத அமராமல், கடைசி ரக்அத்தில் மட்டும் அத்தஹிய்யாத் இருப்பு இருப்பது.
இந்த 2வது விளக்கத்திற்கு இந்த ஹதீஸில் ஆதாரம் இல்லையே மஃரிபை போல் ஆக்கவேண்டாம் என்றால் முதல் விளக்கத்தை போல் தானே எடிக்க முடியும். புரியவில்லை விளக்கவும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இதைப் பற்றிய விவரம் விரிவாக இருப்பதால் இன்ஷா அல்லாஹ் பிறகு பதிவு செய்கிறோம். அதனால் தான் (…) இந்த அடையாளம் உள்ளது.
இன்ஷா அல்லாஹ்,நல்லது ஜி…