ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
‘ஸூரத்துல் பகராவை ஓதக்கூடியவருக்கு (மறுமையில்) சொர்க்கத்தின் கிரீடம் அணிவிக்கப்படும்’ என்று அப்துர்ரஹ்மான் பின் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறினார்.
அறிவிப்பவர்: ஸுபைத் பின் ஹாரிஸ் (ரஹ்)
(ஸுனன் தாரிமீ: 3421)حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ، عَنْ زُبَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ، قَالَ:
«مَنْ قَرَأَ سُورَةَ الْبَقَرَةِ، تُوِّجَ بِهَا تَاجًا فِي الْجَنَّةِ»
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-3421.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-3283.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21490-அப்துர்ரஹ்மான் பின் அஸ்வத் பின் யஸீத் அன்னகயீ அவர்கள் நபித்தோழர் அல்ல. தாபிஈ ஆவார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/488)
எனவே இது மக்தூஃவான செய்தி என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
1 . இந்தக் கருத்தில் அப்துர்ரஹ்மான் பின் அஸ்வத் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஸ்ஸுஹ்த்-அஹ்மத்-2098 , தாரிமீ-3421 , ஃபளாஇலுல் குர்ஆன்-இப்னுள் ளரீஸ்-165 ,
2 . ஸல்ஸால் பின் தலஹ்மஸ் (ரலி) அவர்கள் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஷுஅபுல் ஈமான்-2167 ,
சமீப விமர்சனங்கள்