பாடம்: 13
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டி விடுங்கள். ஏனெனில், அதில் என்ன (விஷ ஜந்து) ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்:
பிஸ்மிக்க ரப்பீ வளஃத்து ஜன்பீ. வ பிக்க அர்ஃபஉஹு இன் அம்ஸக்த்த நஃப்ஸீ ஃபர்ஹம்ஹா வ இன் அர்ஸல்த் தஹா ஃபஹ்ஃபழ்ஹா பிமா தஹ்ஃபழு பிஹி இபாதக்கஸ் ஸாலிஹீன்.
(பொருள்: என் அதிபதியே! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால், அதற்கு நீ கருணை புரிவாயாக. அதை நீ (கைப்பற்றாமல்)விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இந்தச் செய்தியை ஸுஹைர் பின் முஆவியா அறிவித்துள்ளதைப் போன்றே அபூளம்ரா, இஸ்மாயீல் பின் ஸகரிய்யா ஆகியோர் உபைதுல்லாஹ் பின் உமர் —> ஸயீத் —> அபூஸயீத் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
யஹ்யா பின் ஸயீத், பிஷ்ர் பின் முஃபள்ளல் ஆகியோர் உபைதுல்லாஹ் பின் உமர் —> ஸயீத் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
மாலிக் இமாம், இப்னு அஜ்லான் ஆகியோர் ஸயீத் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
அத்தியாயம்: 80
(புகாரி: 6320)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ المَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِذَا أَوَى أَحَدُكُمْ إِلَى فِرَاشِهِ فَلْيَنْفُضْ فِرَاشَهُ بِدَاخِلَةِ إِزَارِهِ، فَإِنَّهُ لاَ يَدْرِي مَا خَلَفَهُ عَلَيْهِ، ثُمَّ يَقُولُ: بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ، إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ “
تَابَعَهُ أَبُو ضَمْرَةَ، وَإِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، وَقَالَ يَحْيَى، وَبِشْرٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَرَوَاهُ مَالِكٌ، وَابْنُ عَجْلاَنَ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
Bukhari-Tamil-6320.
Bukhari-TamilMisc-6320.
Bukhari-Shamila-6320.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
அஸ்ஸலாமு அலைக்கும்
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்!
“(சொர்க்கவாசிகள்) முள் இல்லாத இலந்தை மரத்தின் அருகில் இருப்பார்கள். (அதனுடைய) முட்களை அல்லாஹ் நீக்கிவிட்டு, ஒவ்வொரு முள்ளுடைய இடத்திலும் பழத்தை வைத்துவிடுவான். அது ஒரு கனியைத் தரும். அக்கனி 72 நிறங்களில் பிளந்துவிடும். அதில் எந்த ஒரு நிறமும் மற்றொரு நிறத்திற்கு ஒப்பானதாக இருக்காது’ என்று கூறினார்கள்.
அபூ உமாமா (ரலி),
ஹாகிம் (3778).
இந்த ஹதீஸின் தரம்?
வ அலைக்கும் ஸலாம்.
இந்தச் செய்தியை சிலர் முர்ஸலாகவும், சிலர் மவ்ஸூலாகவும் அறிவித்துள்ளனர். இரண்டில் எதற்கு தர்ஜீஹ் செய்ய வேண்டும் என்பதை பொருத்து இதற்கு இன்ஷா அல்லாஹ் தரம் பதிவிடுகிறோம்.
பார்க்க: ஹாகிம்-3778.
ஜஸாக்கல்லாஹ் ஹைர்