தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-2253

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் உம்மு அதிய்யா (ரலி) அவர்களிடம், “நீ (பெண்களுக்கு) விருத்தசேதனம் செய்யும்போது மேலோட்டமாக நறுக்குவாயாக!; ஒட்ட நறுக்கி விடாதே! ஏனெனில் இதுவே அதன் தோற்ற அமைப்புக்கும் நல்லது; அவளின் (வருங்கால) கணவனுக்கும் பிடித்தமானது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(almujam-alawsat-2253: 2253)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى ثَعْلَبٌ النَّحْوِيُّ قَالَ: نا مُحَمَّدُ بْنُ سَلَّامٍ الْجُمَحِيُّ قَالَ: نا زَائِدَةُ بْنُ أَبِي الرُّقَادِ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأُمِّ عَطِيَّةَ: «إِذَا خَفَضْتِ فَأَشِمِّي وَلَا تَنْهَكِي، فَإِنَّهُ أَسْرَى لِلْوَجْهِ، وَأَحْظَى عِنْدَ الزَّوْجِ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ أَنَسٍ إِلَّا ثَابِتٌ، وَلَا عَنْ ثَابِتٍ إِلَّا زَائِدَةُ بْنُ أَبِي الرُّقَادِ، تَفَرَّدَ بِهِ: مُحَمَّدُ بْنُ سَلَّامٍ الْجُمَحِيُّ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-2253.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-2310.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15938-ஸாயிதா பின் அபுர்ருகாத் என்பவர் பற்றி உபைதுல்லாஹ் பின் உமர், பஸ்ஸார் ஆகியோர் மட்டுமே இவரிடம் குறையில்லை-சுமாரானவர் என்ற கருத்தில் கூறியுள்ளனர். பஸ்ஸார் அவர்கள் இவர் மற்றவர்கள் கூறாத செய்திகளை அறிவிப்பார். (ஆய்வுக்காக) அதை மட்டுமே நான் எழுதுவேன் என்று கூறியுள்ளார்.
  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இவர் (முன்கருல் ஹதீஸ்) ஹதீஸ்கலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார். இவ்வாறே அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவர் பிரபலமானவர்களின் வழியாக முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார்; இவரின் செய்திகளை ஆதாரமாக ஏற்கக்கூடாது; இவரின் செய்திகளை ஆய்வுசெய்வதற்கு மட்டுமே எழுதிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
  • அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள், இவரைப் பற்றி எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/613, தஹ்தீபுல் கமால்-9/271, தஹ்தீபுத் தஹ்தீப்-1/620, தக்ரீபுத் தஹ்தீப்-1/333)

وقال البخاري : منكر الحديث

تهذيب الكمال: (9 / 271)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

3 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-2253 , அல்முஃஜமுஸ் ஸகீர்-122 , குப்ரா பைஹகீ-17562 ,

மேலும் பார்க்க: அபூதாவூத்-5271 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.