தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-7320

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதன் தன் நண்பனின் வழியிலேயே இருக்கிறான். ஆகவே, உங்களில் ஒருவர், தாம் யாருடன் நட்பு கொள்கிறோம் என்பதைக் கவனிக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(ஹாகிம்: 7320)

حَدَّثَنَاهُ أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى اللَّخْمِيُّ، ثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، ثَنَا صَدَقَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ الْأَنْصَارِيِّ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«الْمَرْءُ عَلَى دِينِ خَلِيلِهِ فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلْ»

حَدِيثُ أَبِي الْحُبَابِ صَحِيحٌ إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى وَلَمْ يُخَرِّجَاهُ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7320.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7384.




1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-4991-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஈஸா பின் ஸைத்
அல்லக்மீ என்பவர் பற்றி அபூஸயீத் பின் யூனுஸ் அவர்கள், இவர் குளறுபடியான செய்திகளை அறிவிப்பவர் என்றும்; முஸ்லிமா பின் காஸிம், அபூஸுர்ஆ, இப்னு தாஹிர் போன்றோர், இவர் பொய்யர்; இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பவர் என்றும் கூறியுள்ளனர்.

  • இப்னுஹிப்பான் அவர்கள், இவர் அறியப்படாதவர்களிடமிருந்து முன்கரான செய்திகளை அறிவிப்பவர்; பிரபலமானவர்களிடமிருந்து அறிவிப்பாளர்தொடர்களை மாற்றி அறிவிப்பவர்; எனவே இவர் தனித்து அறிவிக்கும் செய்திகளை ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவர் முன்கரான செய்திகளை அறிவிப்பவர் என்று கூறியுள்ளார்.
  • தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்றோர் இவர் பலமானவர் அல்ல என்று கூறியுள்ளனர்.

(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-1/314, லிஸானுல் மீஸான்-1/568, தஹ்தீபுத் தஹ்தீப்-1/39, தக்ரீபுத் தஹ்தீப்-1/ 96)

2 . மேலும் இதில் வரும் ராவீ-19735-ஸதகா பின் அப்துல்லாஹ் பலவீனமானவர்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/451)

3 . மேலும் இதில் வரும் ராவீ-1043-இப்ராஹீம் பின் முஹம்மத் என்பவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க: அபூதாவூத்-4833 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.