தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4833

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதன் தன் நண்பனின் வழியிலேயே இருக்கிறான். ஆகவே, உங்களில் ஒருவர், தாம் யாருடன் நட்பு கொள்கிறோம் என்பதைக் கவனிக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(அபூதாவூத்: 4833)

حَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، وَأَبُو دَاوُدَ، قَالَا: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ وَرْدَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ، فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4833.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4195.




1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16227-ஸுஹைர் பின் முஹம்மத்-அபுல்முன்திர் என்பவர் பற்றி சிலர் நம்பகமானவர் என்றும்; பலமானவர் என்றும் கூறியுள்ளனர்.

  • வேறு சில அறிஞர்கள் இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் ஹதீஸை அறிவிப்பதில் அதிகம் தவறிழைத்தவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் இவரிடமிருந்து ஷாம்வாசிகள் அறிவிப்பது முன்கரானவை-நிராகரிக்கப்பட்வை என்றும், பஸராவாசிகள் இவரிடமிருந்து அறிவிப்பது சரியானவை என்றும் கூறியுள்ளார்.
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவர் ஷாமில் இருக்கும்போது தனது மனனத்திலிருந்து அறிவித்ததில் அதிகம் தவறு ஏற்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார்.
  • எனவே தான் இவரிடமிருந்து ஷாம்வாசிகள் அறிவிப்பது சரியானதல்ல என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இப்னு அப்தில்பர் அவர்கள் இவர் அனைவரிடமும் பலவீனமானவர் என்று கூறியுள்ளார். என்றாலும் இது சரியானதல்ல என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: மீஸானுல் இஃதிதால்-2918, 2/84, தஹ்தீபுத் தஹ்தீப்-1/639, தக்ரீபுத் தஹ்தீப்-2060)

  • ஸுஹைர் பின் முஹம்மத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    தயாலிஸீ பிறப்பு ஹிஜ்ரி 133
    இறப்பு ஹிஜ்ரி 204
    வயது: 71
    அவர்கள் பஸராவாசி ஆவார். இவ்வாறே வேறு சில பஸராவாசிகளும் ஸுஹைர் பின் முஹம்மத் அவர்களிடமிருந்து இந்தச் செய்தியை அறிவித்துள்ளனர்.

2 . மேலும் இதில் வரும் ராவீ-45989-மூஸா பின் வர்தான் என்பவர் பற்றி அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவரை நான் நல்லவராகவே கருதுகிறேன் என்றும், இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
ஆகியோர் பலமானவர் என்றும் கூறியுள்ளனர்.

  • அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    யஃகூப் பின் ஸுஃப்யான்,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    பஸ்ஸார், தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    ஆகியோர் சுமாரானவர் என்று கூறியுள்ளனர்.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் இவரை ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரைப் பற்றி இவர் நம்பகமானவர்; சில செய்திகளில் தவறிழைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/986)

எனவே அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்றோர் இவரை ஹஸன் தரத்தில் உள்ளவர் என்று கூறியுள்ளனர்.

1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸுஹைர் பின் முஹம்மத் —> மூஸா பின் வர்தான் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2696 , அஹ்மத்-8028 , 8417 , அபூதாவூத்-4833 , திர்மிதீ-2378 , ஹாகிம்-7319 ,

  • இப்ராஹீம் பின் முஹம்மத் —> ஸயீத் பின் யஸார் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: ஹாகிம்-7320 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.