தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3641

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அத்தியாயம்: 24

கல்வி.

பாடம்:

கல்வி கற்பதற்கு வந்துள்ள ஆர்வமூட்டல்.

கஸீர் பின் கைஸ் என்பவர் கூறியதாவது:

நான் திமிஷ்கி(டமாஸ்கஸி)லிருந்த ஒரு பள்ளிவாசலில் அபுத்தர்தா (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு மனிதர் அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் வந்து, அபுத்தர்தா (ரலி) அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு நபிமொழியை அறிவிக்கிறீர்கள் என்ற தகவல் எனக்குக் கிடைத்தது. (அதைக் கேட்பதற்காகவே நான்), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மதீனா நகரத்திலிருந்து இங்கு வந்துள்ளேன். வேறு எந்தத் தேவைக்காகவும் நான் வரவில்லை என்று கூறினார்.

அதற்கு அபுத்தர்தா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒருவர் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடந்தால் சொர்க்கம் செல்லும் பாதைகளில் அவரை அல்லாஹ் நடத்துகின்றான்.

வானவர்கள் கல்வியைத் தேடும் (மாணவர்) ஒருவரை உவந்து கொண்டதைக் காட்டும் முகமாக தம் இறக்கைகளை கீழே வைக்கின்றனர்.

கற்றறிந்த அறிஞர் ஒருவருக்கே வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் தண்ணீரில் வாழும் மீன்கள் உட்பட யாவும் பாவமன்னிப்புக் கோருகின்றன.

பக்தியாளரைவிட கல்வியாளருக்குள்ள சிறப்பு மற்ற நட்சத்திரங்களைவிட சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.

மார்க்க அறிஞர்கள் இறைத் தூதர்களின் வாரிசுகள் ஆவர். இறைத்தூதர்கள் பொற்காசுகளுக்கோ வெள்ளிக்காசுகளுக்கோ அவர்களை வாரிசுகளாக்கவில்லை. அவர்கள் இந்தக் கல்விக்குத்தான் வாரிசுகளாக்கியுள்ளனர். யார் இந்தக் கல்வியைப் பெற்றுக் கொண்டாரோ அவர் நிறைவான பங்கைப் பெற்றுக்கொண்டார்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.

(அபூதாவூத்: 3641)

24 – كِتَاب الْعِلْمِ
بَابُ الْحَثِّ عَلَى طَلَبِ الْعِلْمِ

حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، سَمِعْتُ عَاصِمَ بْنَ رَجَاءِ بْنِ حَيْوَةَ، يُحَدِّثُ عَنْ دَاوُدَ بْنِ جَمِيلٍ، عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ، قَالَ:

كُنْتُ جَالِسًا مَعَ أَبِي الدَّرْدَاءِ، فِي مَسْجِدِ دِمَشْقَ فَجَاءَهُ رَجُلٌ، فَقَالَ: يَا أَبَا الدَّرْدَاءِ: إِنِّي جِئْتُكَ مِنْ مَدِينَةِ الرَّسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَدِيثٍ بَلَغَنِي، أَنَّكَ تُحَدِّثُهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا جِئْتُ لِحَاجَةٍ، قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ سَلَكَ طَرِيقًا يَطْلُبُ فِيهِ عِلْمًا سَلَكَ اللَّهُ بِهِ طَرِيقًا مِنْ طُرُقِ الْجَنَّةِ،

وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ،

وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَوَاتِ، وَمَنْ فِي الْأَرْضِ، وَالْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ،

وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ، كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ،

وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ، وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا، وَلَا دِرْهَمًا وَرَّثُوا الْعِلْمَ، فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3641.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3159.




  • இந்தச் செய்தியின் இந்த அறிவிப்பாளர்தொடர் பலவீனமாக இருந்தாலும் அபூதாவூத்-3642 இல் வரும் அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரத்தில் அமைந்ததாகும்.
  • இந்தச் செய்தியின் இறுதிப் பகுதியை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் அறிவிப்பாளர்தொடர் இன்றி ஹதீஸ் பாடத்தலைப்பில் கூறியுள்ளார்.

(பார்க்க: புகாரி-68)


(அபுத்தர்தா (ரலி) வழியாக வரும்) இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர்கள் குளறுபடியாக வந்துள்ளன என அப்துல்அளீம் அல்முன்திரீ அவர்கள் கூறியுள்ளார்.

1 . இதில் அபுத்தர்தா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவரின் பெயர் கஸீர் பின் கைஸ் என்றும் கைஸ் பின் கஸீர் என்றும் வந்துள்ளது.

2 . மதீனாவிலிருந்து ஒரு மனிதர் அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் வந்தார் என கஸீர் பின் கைஸ் கூறியதாக ஒரு செய்தியில் வந்துள்ளது. கஸீர் பின் கைஸ் என்பவரே அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் (அவர் திமிஷ்கில் இருந்த போது) நான் மதீனாவிலிருந்து வருகிறேன் என்று கூறியதாக வேறு ஒரு செய்தியில் வந்துள்ளது.

3 . அபுத்தர்தா (ரலி) அவர்கள் மிஸ்ரில் இருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார் என்று வேறு ஒரு செய்தியில் வந்துள்ளது.

4 . சில அறிவிப்பாளர்தொடர்களில் ஆஸிம் பின் ரஜாவுக்கும், கஸீர் பின் கைஸ் என்பவருக்கும் இடையில் தாவூத் பின் ஜமீல் கூறப்பட்டுள்ளார். சிலவற்றில் விடப்பட்டுள்ளார்.

5 . சில அறிவிப்பாளர் தொடர் கஸீர் பின் கைஸ் —> யஸீத் பின் ஸமுரா —> அபுத்தர்தா (ரலி) என்று வந்துள்ளது.

சிலவை யஸீத் பின் ஸமுரா —> கஸீர் பின் கைஸ் —> அபுத்தர்தா (ரலி) என்று வந்துள்ளது.

(நூல்: முக்தஸர் அபூதாவூத்-3641)

இதற்கு காரணம் கஸீர் பின் கைஸ் என்பவர் தான்.


  • கஸீர் பின் கைஸ், கைஸ் பின் கஸீர் என்ற இந்த 2 பெயர்களில் கஸீர் பின் கைஸ் என்பதே சரி; முஹம்மது பின் யஸீத் அல்வாஸிதீ என்பவர் மட்டுமே கைஸ் பின் கஸீர் என்று கூறியுள்ளார்; இவரே பெயரைத் தவறாக கூறியுள்ளார்; மற்றவர்கள் கஸீர் பின் கைஸ் என்று கூறியுள்ளனர் என மிஸ்ஸீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-24/149)

முஹம்மது பின் யஸீத் அல்வாஸிதீ என்பவர் வழியாக கஸீர் பின் கைஸ் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(நூல்: அத்தத்வீன் ஃபீ அக்பாரி கஸ்வீன்-2/396)


  • 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20397-ஆஸிம் பின் ரஜா பின் ஹைவா என்பவர் பற்றி, இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    ஸுவைலிஹ்-சிறிது சுமாரானவர் என்று கூறியுள்ளார்.
  • அபூஸுர்ஆ அவர்கள் சுமாரானவர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு அப்துல்பர் பலமானவர் என்று கூறியுள்ளார்.
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இவர் பலவீனமானவர் எனக் கூறியுள்ளார்.
  • குதைபா பின் ஸயீத் இவரை விமர்சித்துள்ளார் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் சிறிது தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/342, தஹ்தீபுல் கமால்-13/483, தாரீகுல் இஸ்லாம்-3/901, அல்காஷிஃப்-3/51, தஹ்தீபுத் தஹ்தீப்-2/252, தக்ரீபுத் தஹ்தீப்-3075)


  • 2 . மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15232-தாவூத் பின் ஜமீல் என்பவரிடமிருந்து ஆஸிம் பின் ரஜா என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதாலும், இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் மட்டுமே இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார் என்பதாலும் இவரை சிலர் அறியப்படாதவர் என்று கூறியுள்ளனர். அபுல்ஃபத்ஹ் அல்அஸ்தீ என்பவர், இவர் அறியப்படாதவர்; பலவீனமானவர் என்று கூறியுள்ளார் என்பதால் சிலர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/561, தக்ரீபுத் தஹ்தீப்-1/305)


  • 3 . மேலும் இதில் வரும் ராவீ-34540-கஸீர் பின் கைஸ் என்பவர் பலமானவர் அல்ல என்று துஹைம் பிறப்பு ஹிஜ்ரி 170
    இறப்பு ஹிஜ்ரி 245
    வயது: 75
    கூறியதாக இப்னு ஸமீஃ கூறியுள்ளார். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்களும் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார். இப்னு கானிஃ அவர்கள், இவரை நபித்தோழரின் பட்டியலில் கூறியுள்ளார். இவர் அறிவிக்கும் மேற்கண்ட செய்தி சில அறிவிப்பாளர்தொடரில் அபுத்தர்தா (ரலி) விடுபட்டு வந்ததால் இப்னு கானிஃ அவர்கள், இவரை நபித்தோழர் என்று கருதிவிட்டார்; இது தவறு என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/464)


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர்கள்:

1 . அபுத்தர்தா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் உஸ்மான் பின் அபூஸவ்தாவின் அறிவிப்பு:

பார்க்க: அபூதாவூத்-3642 ,

இது ஹஸன் தரத்தில் அமைந்த செய்தியாகும்.


2 . ஆஸிம் பின் ரஜாவின் அறிவிப்பு. (இவரிடமிருந்து 4 பேர் அறிவித்துள்ளனர்)

இவரிடமிருந்து அறிவிக்கும் 1 . முஹம்மத் பின் யஸீத் அல்வாஸிதீ என்பவர் ஆஸிம் பின் ரஜா —> கைஸ் பின் கஸீர்  —> அபுத்தர்தா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

பார்க்க: அஹ்மத்-21715 , திர்மிதீ-2682 , தாரீகு திமிஷ்க்-50/47 ,

இவரிடமிருந்து அறிவிக்கும் 2 . அப்துல்லாஹ் பின் தாவூத் என்பவர் ஆஸிம் பின் ரஜா —> தாவூத் பின் ஜமீல் —> கஸீர் பின் கைஸ் —> அபுத்தர்தா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

பார்க்க: தாரிமீ-354 , இப்னு மாஜா-223 , அபூதாவூத்-3641 , முஸ்னத் பஸ்ஸார்-4145 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-982 , இப்னு ஹிப்பான்-88 , …

இவ்விரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் அப்துல்லாஹ் பின் தாவூத் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரே உண்மையானது என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் கூறியதாக திர்மிதீ இமாம் கூறியுள்ளார்.

(நூல்கள்: தாரீகுல் கபீர்-3229, திர்மிதீ-2682)

«التاريخ الكبير» للبخاري (8/ 337 ت المعلمي اليماني):
«‌‌3229 – يَزِيدُ بْنُ سَمُرَةَ عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْعُلَمَاءُ ‌وَرَثَةُ ‌الأَنْبِيَاءِ (إِنَّ الأَنْبِيَاءَ – 1) لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلا دِرْهَمًا وَلَكِنْ وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ، وقَالَ أَحْمَد بْن عيسى نا بشر بْن بكر قَالَ نا الأوزاعي قَالَ وحدثني عَبْد السلام بْن سليم عَنْ يزيد بْن سمرة وغيره من أهل العلم، وقَالَ إِسْحَاق عَنْ عَبْد الرزاق (2) عَنِ ابْنِ المبارك عَنِ الأوزاعي عَنْ كثير بْن قيس عَنْ يزيد بْن سمرة عَنْ أَبِي الدرداء، والأول أصح،

وقَالَ مُسَدَّدٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دَاوُد عَنِ عاصم بْن رجاء عَنْ دَاوُد بْن جميل عَنْ كثير بْن قيس سَمِعَ أبا الدرداء سَمِعْتُ (3) النَّبِيَّ صلى الله عليه وسلم، وَقَالَ أَبُو نعيم عَنْ عاصم بْن رجاء عمن حدثه عَنْ كثير»


அப்துல்லாஹ் பின் தாவூத் தாவூதை விட முஹம்மத் பின் யஸீத் அல்வாஸிதீ தான் மிகப்பலமானவர் என்றாலும் முஹம்மத் பின் யஸீத் அல்வாஸிதீ அவர்கள் வழியாக கஸீர் பின் கைஸ் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

التدوين في أخبار قزوين (2/ 396)
الحسن بْن أَحْمَد بْن صالح الوراق أَبُو سعيد الفقيه سمع أبا الحسن القطان بقرا أة علي ابن ثَابِتٍ حَدِيثَ أَبِي الْحَسَنِ عَنْ أبي بكر عَبْد اللَّه بْن محمد ابن عُبَيْدٍ ثنا أَبِي أَنْبَأَ مُحَمَّدُ بْنُ يَزِيدَ الْوَاسِطِيُّ عَنْ عَاصِمِ بن رجاء عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الأَنْبِيَاءِ وَإِنَّ الأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلا دِرْهَمًا إِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ فمن اخذ منه أخذ بخط وَافِرٍ رَوَى عَنِ الْحَسَنِ الْخَلِيلُ الحافظ وغيره.

(நூல்: அத்தத்வீன் ஃபீ அக்பாரி கஸ்வீன்-2/396)


இவரிடமிருந்து அறிவிக்கும் 3 . அபூநுஐம்-ஃபள்ல் பின் துகைன் என்பவரின் இரு வகை அறிவிப்பு:

1 . இப்னு அபூஷைபா அவர்கள், அபூநுஐம்-ஃபள்ல் பின் துகைன் —> ஆஸிம் பின் ரஜா —> கஸீர் பின் கைஸ் —> அபுத்தர்தா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

பார்க்க: முஸ்னத் இப்னுஅபூஷைபா-47 ,

2. முஹம்மத் பின் இஸ்ஹாக், யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
ஆகியோர் அபூநுஐம்-ஃபள்ல் பின் துகைன் —> ஆஸிம் பின் ரஜா —> ஒரு மனிதர் —> கஸீர் பின் கைஸ் —> அபுத்தர்தா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

பார்க்க: தாரீகு திமிஷ்க்-, ஜாமிஉ பயானில் இல்ம்-177 ,


இவரிடமிருந்து அறிவிக்கும் 4 . இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவரின் அறிவிப்பு:

ஹம்ஸா பின் முஹம்மத் என்பவர் இஸ்மாயீல் பின் அய்யாஷ் —> ஆஸிம் பின் ரஜா —> ஜமீல் பின் கைஸ் —> அபுத்தர்தா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

அப்துல்வஹ்ஹாப் பின் ளஹ்ஹாக் என்பவரும் மற்றவர்களும் இஸ்மாயீல் பின் அய்யாஷ் —> ஆஸிம் பின் ரஜா —> கஸீர் பின் கைஸ் —> அபுத்தர்தா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

பார்க்க: ஜாமிஉ பயானில் இல்ம்-169 ,


3 . அவ்ஸாயீ அவர்களின் அறிவிப்பு:

(இவரிடமிருந்து 3 பேர் அறிவித்துள்ளனர்)

இவரிடமிருந்து அறிவிக்கும் 1 . ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள் அவ்ஸாயீ —> கைஸ் பின் கஸீர்  —> யஸீத் பின் ஸமுரா —> அபுத்தர்தா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

பார்க்க: ஷுஅபுல் ஈமான்-1574 , தாரீகு திமிஷ்க்-, தல்கீஸுல் முதஷாபிஹ்-,

இவரிடமிருந்து அறிவிக்கும் 2 . இப்னுல் முபாரக் அவர்களும் அவ்ஸாயீ —> கைஸ் பின் கஸீர்  —> யஸீத் பின் ஸமுரா —> அபுத்தர்தா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். (தாரீகு திமிஷ்கில் யஸீத் பின் மைஸரா என்று உள்ளது. இது தவறாகும்)

பார்க்க: ஜாமிஉ பயானில் இல்ம்-177 , தாரீகு திமிஷ்க்-, (இப்னு ஹிப்பான்-, தாரீகுல் கபீர்-, )

இவரிடமிருந்து அறிவிக்கும் 3 . பிஷ்ர் பின் பக்ர் அத்தின்னீஸீ என்பவர் அவ்ஸாயீ —> அப்துஸ்ஸலாம் பின் ஸுலைம்  —> யஸீத் பின் ஸமுரா —> கஸீர் பின் கைஸ் —> அபுத்தர்தா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

பார்க்க: தாரீகு திமிஷ்க்-50/50 , அக்லாகுல் உலமா-, ஜாமிஉ பயானில் இல்ம்-177 ,

علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (6/ 216)

1083- وَسُئِلَ عَنْ حَدِيثِ كَثِيرِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم في فضل طالب العلم، وأنه قَالَ: مَنْ سَلَكَ طَرِيقًا يَطْلُبُ فِيهِ عِلْمًا سَلَكَ اللَّهُ بِهِ طَرِيقًا مِنْ طُرُقِ الْجَنَّةِ، وَأَنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا لِطَالِبِ الْعِلْمِ…. الْحَدِيثَ.

فَقَالَ: يَرْوِيهِ عَاصِمُ بْنُ رَجَاءِ بْنِ حَيْوَةَ، وَاخْتُلِفَ عَنْهُ؛

فَرَوَاهُ عَنْهُ أَبُو نُعَيْمٍ، عَنْ عَاصِمِ بْنِ رَجَاءِ بْنِ حَيْوَةَ، عَمَّنْ حَدَّثَهُ، عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ.

وَرَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ الْخُرَيْبِيُّ، عَنْ عَاصِمٍ، فَقَالَ: عَنْ دَاوُدَ بْنِ جَمِيلٍ، عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ، وَدَاوُدُ هَذَا مَجْهُولٌ.

وَرَوَاهُ مُحَمَّدُ بْنُ يَزِيدَ الْوَاسِطِيُّ، عَنْ عَاصِمِ بْنِ رَجَاءٍ، عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ، لَمْ يَذْكُرْ بَيْنَهُمَا أَحَدًا، وَعَاصِمُ بْنُ رَجَاءٍ وَمَنْ فَوْقَهُ إِلَى أَبِي الدَّرْدَاءِ ضعفاء، ولا يثبت.

ورواه الْأَوْزَاعِيُّ، عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ، عَنْ يَزِيدَ بْنِ سَمُرَةَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، وَلَيْسَ بِمَحْفُوظٍ.

கஸீர் பின் கைஸ் வழியாக வரும் அறிவிப்பாளர்தொடர்களைக் கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், ஆஸிம் பின் ரஜா, தாவூத் பின் ஜமீல், கஸீர் பின் கைஸ் ஆகியோர் பலவீனமானவர்கள் என்பதால் இது சரியான செய்தியல்ல என்றும், அவ்ஸாயீ அவர்கள் வழியாக வரும் அவ்ஸாயீ —> கஸீர் பின் கைஸ் —> யஸீத் பின் ஸமுரா —> அபுத்தர்தா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடர் மஹ்ஃபூல் எனும் முன்னுரிமைபெற்ற செய்தியல்ல என்றும் கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-1083, 6/216)

இதிலிருந்து கஸீர் பின் கைஸ் வழியாக வரும் அறிவிப்பாளர்தொடர்கள் அனைத்தும் பலவீனமாகும் என்று தெரிகிறது.


4 . அபுத்தர்தா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அல்அதாஉ குராஸானியின் அறிவிப்பு:

அல்அதாஉ குராஸானி அவர்கள், எந்த நபித்தோழரிடமும் செவியேற்கவில்லை என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர் என்பதால் இவர் வழியாக வரும் அறிவிப்பாளர்தொடர்கள் பலவீனமானவையாகும்.

பார்க்க: தாரீகு பஃக்தாத்-291, 2/286, அல்ஃபகீஹ்..-, அக்லாகுல் உலமா-,

تاريخ بغداد ت بشار (2/ 286)
(291) -[2: 286] أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ رِزْقٍ، قَالَ: أخبرنا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ، قَالَ: حدثنا أَبُو حَمْزَةَ الْمَرْوَزِيُّ مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حدثنا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، قَالَ: أخبرنا ابْنُ الْمُبَارَكِ، قَالَ: أخبرنا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنْ عَطَاءٍ الْخُرَاسَانِيِّ، قَالَ: قَالَ أَبُو الدَّرْدَاءِ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” مَنْ سَلَكَ طَرِيقًا يَطْلُبُ بِهِ عِلْمًا سَلَكَ اللَّهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ، إِنَّ الْمَلائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتِهَا لِطَالِبِ الْعِلْمِ رِضًا عَنْهُ، وَإِنَّهُ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الأَرْضِ حَتَّى الْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ، وَلَفَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ، وَإِنَّ الْعُلَمَاءِ هُمْ وَرَثَةُ الأَنْبِيَاءِ “

….

 

இதில் வரும் உஸ்மான் பின் அதாஃ பலவீனமானவர்.


5 . அபுத்தர்தா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் உஸ்மான் பின் அஃயன் என்பவரின் அறிவிப்பு

பார்க்க: தாரீகு திமிஷ்க்-4575 , அல்இத்ஹாஃப்-293 ,

«تاريخ دمشق لابن عساكر» (38/ 318):
«[7679] 4575 -‌‌ عثمان بن أيمن ذكر أبو عبد الله بن مندة أنه دمشقي روى عنه أبي الدرداء روى عنه خالد بن يزيد بن صبيح (2)

أخبرتنا أم المجتبى العلوية قالت قرئ على إبراهيم بن منصور أنا أبو بكر بن المقرئ أنا أبو يعلى الموصلي نا أبو همام نا الوليد عن رجل سماه أبو همام فانقطع في كتابي عن عثمان بن أيمن عن أبي الدرداء قال سمعت النبي (3) صلى الله عليه وسلم يقول من خرج يريد علما يتعلمه فتح له باب إلى الجنة ‌وفرشته ‌الملائكة ‌أكنافها وصلت عليه ملائكة السموات وحيتان البحور وللعالم من الفضل على العابد كفضل القمر ليلة البدر على أصغر كوكب في السماء إن العلماء ورثة الأنبياء لم يرثوا دينارا ولا درهما ولكنهم ورثوا العلم فمن أخذ بالعلم فقد أخذ بحظه موت العالم مصيبة لا تجبر وثلمة لا تسد وهو نجم طمس موت قبيلة أيسر من موت عالم
[7680] الرجل الذي سقط اسمه من كتاب أبي يعلى هو خالد بن يزيد أخبرنا أبو القاسم محمود بن أحمد بن الحسن أنا أبو طالب أحمد بن محمد بن عبد الرحمن نا الشيخ أبو سعيد محمد بن علي بن عمرو بن مهدي النقاش إملاء نا أبو بكر عبد الله بن يحيى أبو (4) معاوية الطلحي بالكوفة أنا أبو جعفر محمد بن عبد الله بن سليمان الحضرمي نا الوليد بن شجاع نا الوليد بن مسلم عن خالد بن يزيد المري (1) عن عثمان بن أيمن عن أبي الدرداء قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من غدا يريد العلم يتعمله فرشت له الملائكة أكنافها وصلت عليه ملائكة السموات وحيتان البحور وللعالم من الفضل على العابد كفضل القمر ليلة البدر على أصغر كوكب في السماء والعلماء ورثة الأنبياء إن الأنبياء لم يورثوا (2) دينارا ولا درهما ولكنهم ورثوا العلم فمن أخذ بالعلم فقد أخذ بحظه موت العالم مصيبة لا تجبر وثلمة لا تسد وهو نجم طمس»

إتحاف الخيرة المهرة بزوائد المسانيد العشرة (1/ 210)

293 – قَالَ أَبُو يَعْلَى: وثنا أبو هَمَّام، ثنا الْوَلِيدُ، عَنْ رَجُلٍ- سَمَّاهُ أَبُو هَمَّامٍ فَانْقَطَعَ فِي كِتَابِي- عَنْ عُثْمَانَ بْنِ أيمن،، عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – يَقُولُ: “مَنْ خَرَجَ يُرِيدُ عِلْمًا يَتَعَلَّمُهُ فُتِحَ لَهُ بَابٌ إِلَى الْجَنَّةِ، وَفَرَشَتْهُ الْمَلَائِكَةُ أَكْنَافَهَا، وَصَلَّتْ عَلَيْهِ مَلَائِكَةُ السَّمَوَاتِ وحيتان البحور، وللعالم مِنَ الْفَضْلِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى أَصْغَرِ كَوْكَبٍ فِي السَّمَاءِ، الْعُلَمَاءُ وَرَثَةُ الْأَنْبِيَاءِ، إِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا وَلَكِنَّهُمْ وَرَّثُوا الْعِلْمَ، فَمَنْ أَخَذَ بِالْعِلْمِ فَقَدْ أَخَذَ بِحَظِّهِ، مَوْتُ الْعَالِمِ مُصِيبَةٌ لَا تُجْبَرُ، وَثُلْمَةٌ لَا تُسَدُّ، وَهُوَ نَجْمٌ طُمِسَ، مَوْتُ قَبِيلَةٍ أَيْسَرُ مِنْ مَوْتِ عَالِمٍ “.

قُلْتُ: رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ دُونَ قَوْلِهِ: “مَوْتُ الْعَالِمِ … ” إِلَى آخِرِهِ. وَكَذَا رَوَاهُ ابْنُ حِبَّانَ فِي صَحِيحِهِ، وَالْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ، كُلُّهُمْ مِنْ طَرِيقِ كَثِيرِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِي الدَّرْدَاءِ بِهِ.
وَقَالَ التِّرْمِذِيّ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عَاصِمِ بْنِ رَجَاءِ بْنِ حَيْوَةَ، وَلَيْسَ إِسْنَادُهُ عِنْدِي بِمُتَّصِلٍ، إنما يُروى عَنْ عَاصِمِ بْنِ رَجَاءِ بْنِ حَيْوَةَ، عَنْ دَاوُدَ بْنِ جَمِيلٍ، عَنْ كَثِيرِ بْنِ قيس.
قَالَ الْحَافِظُ الْمُنْذِرِيُّ: وَمِنْ هَذِهِ الطَّرِيقِ رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَابْنُ حبان في صحيحه وغيرهم.
قَالَ: وَقَدْ رُوِيَ عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ، عْنَ يَزِيدَ بْنِ سَمُرَةَ عَنْهُ، وَعَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ عَبْدِ السَّلَامِ بْنِ سُلَيْمٍ، عَنْ يَزِيدَ بْنِ سَمُرَةَ، عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ عَنْهُ. قَالَ الْبُخَارِيُّ: هَذَا أَصَحُّ.
وَرُوِيَ غَيْرُ ذَلِكَ، وَقَدِ اخْتُلِفَ فِي هَذَا الْحَدِيثِ اخْتِلَافًا كَثِيرًا ذَكَرْتُ بَعْضَهُ فِي مُخْتَصَرِ السُّنَنِ وَبَسَطْتُهُ فِي غَيْرِهِ، وَاللَّهُ أَعْلَمُ.

இதில் வரும் உஸ்மான் பின் அய்மன் (அல்லது அஃயன்) யாரென அறியப்படாதவர்.


1 . இந்தக் கருத்தில் அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • கஸீர் பின் கைஸ் —> அபுத்தர்தா (ரலி)

பார்க்க: அஹ்மத்-21715 , 21716 , தாரிமீ-354 , இப்னு மாஜா-223 , அபூதாவூத்-3641 , திர்மிதீ-2682 , முஸ்னத் பஸ்ஸார்-4145 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-982 , இப்னு ஹிப்பான்-88 ,

  • ஹிஷாம் பின் அம்மார்…—> அதாஉ பின் அபூமுஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    —> அபுத்தர்தா (ரலி)

பார்க்க: இப்னு மாஜா-239 ,

  • ஷபீப் பின் ஷைபா —> உஸ்மான் பின் அபூஸவ்தா —> அபுத்தர்தா (ரலி)

பார்க்க: அபூதாவூத்-3642 ,


1 . இந்தச் செய்தியின் முதல் பகுதியின் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-5231 ,

2 . இரண்டாவது பகுதியின் கருத்தில் ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-3535 .

3 . மூன்றாவது, நான்காவது பகுதியின் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2685 .


4 . ஜந்தாவது (பகுதியான கடைசிப்) பகுதியின் கருத்தில் வரும் செய்திகள்:

1 . பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: (அத்தஃப்ஸீருல் வஸீத்) அல்வஸீது ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன்-1 ,

التفسير الوسيط للواحدي (1/ 45)

1 – أَخْبَرَنَا أَبُو سَعِيدٍ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدٍ الزمجَارِيُّ، حَدَّثَنَا أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ حَمَّادٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُعَاوِيَةَ الْبَكَّائِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ السَّعْدِيُّ، عَنْ شَرِيكٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْعُلَمَاءُ وَرَثَةُ الأَنْبِيَاءِ، يُحِبُّهُمْ أَهْلُ السَّمَاءِ وَيَسْتَغْفِرُ لَهُمُ الْحِيتَانُ فِي الْبَحْرِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»

2 . அனஸ் (ரலி)…

3 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரீகு ஜுர்ஜான்-297 .

تاريخ جرجان (ص: 204)

297أَخْبَرَنِي أَبُو الْحُسَيْنِ عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْبَرُوجَرْدِيُّ الْقَاضِي حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ الأَصْفَهَانِيُّ حَدَّثَنَا حَاتِمُ بْنُ يُونُسَ الْجُرْجَانِيُّ حَدَّثَنَا يَحْيَى بن عبد الحميد حدثنا بن الْمُبَارَكِ عَنِ الأَوْزَاعِيِّ عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ عَنْ يَزِيدَ بْنِ سَمُرَةَ قَالَ: كُنْتُ عِنْدَ أَبِي الدَّرْدَاءِ إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ: مَا جَاءَ بِكَ؟ قُلْتُ: جِئْتُ أَنْبِطُ الْعِلْمَ فَقَالَ أَبُو الدَّرْدَاءِ رضي الله عنه: سمعت رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: “إِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الأَنْبِيَاءِ إِنَّ الأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلا دِرْهَمًا إِنَّمَا وَرِثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَ بِهِ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ”

قَالَ أَبُو بَكْرٍ الأصبهاني: لم يروى هذا الحديث عن بن الْمُبَارَكِ غَيْرُ يَحْيَى الْحِمَّانِيِّ.

4 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரீகு பஃக்தாத்-1663 .

تاريخ بغداد ت بشار (6/ 127)

(1663) أَخْبَرَنَا الْقَاضِي أَبُو الْعَلاءِ الْوَاسِطِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَامِدٍ الْبَلْخِيُّ، قَدِمَ عَلَيْنَا بَغْدَادَ، قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ الْبَغْدَادِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو يُوسُفَ يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ الْبَصْرِيُّ الْعَطَّارُ بِأَنْطَاكِيَّةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ الضَّحَّاكُ بْنُ حَجْوَةَ، قَالَ: حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَكْرِمُوا الْعُلَمَاءَ، فَإِنَّهُمْ وَرَثَةُ الأَنْبِيَاءِ، فَمَنْ أَكْرَمَهُمْ فَقَدْ أَكْرَمَ اللَّهَ وَرَسُولَهُ ”

حَدَّثَنِي الأزهري، قَالَ: حَدَّثَنَا الحسين بْن أَحْمَد بْن بكير، قَالَ: حَدَّثَنَا أَبُو العباس أَحْمَد بْن مُحَمَّد بْن حامد البلخي الجمال، قَالَ: حَدَّثَنَا أَبُو إسحاق إِبْرَاهِيم بْن عَبْد اللَّه بْن مُحَمَّد البغدادي، قَالَ: حَدَّثَنَا أَبُو يوسف يعقوب بْن إسحاق، مثله سواء.

இன்ஷா அல்லாஹ் மற்ற கூடுதல் தகவல்கள் பிறகு சேர்க்கப்படும்.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-2776 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.