தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2685

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) அவர்களிடம் இரு மனிதர்களைப் பற்றி கூறப்பட்டது. இருவரில் ஒருவர் வணக்கசாலி மற்றொருவர் கல்வியாளர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வணக்கசாலியைப் பார்க்கிலும் கல்வியாளரின் சிறப்பாகிறது உங்களில் கடைநிலையில் உள்ள ஒருவரைவிட (இறைத்தூதராகிய) எனக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்” என்றார்கள்.

அதன் பின்னர் “அல்லாஹ்வும், அவனுடைய வானவர்களும், விண்ணிலும் மண்ணிலும் வசிப்போரும் புற்றுகளில் வாழும் எறும்புகள் (தண்ணீரில் வாழும்) மீன்கள் உட்பட யாவுமே மக்களுக்கு நல்லதைக் கற்பிப்பவருக்காக அருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழியாகும்.

“கற்றபடி செயல்பட்டு பிறருக்கு அதைக் கற்பிக்கவும் செய்கின்ற அறிஞர் ஒருவர் வானுலகில் மாமனிதர் என அழைக்கப்படுகிறார்” என்று புளைல் பின் இயாள் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என அபூஅம்மார்-ஹுஸைன் பின் ஹுரைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் (என திர்மிதீ இமாம் கூறுகிறார்.)

(திர்மதி: 2685)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الصَّنْعَانِيُّ قَالَ: حَدَّثَنَا سَلَمَةُ بْنُ رَجَاءٍ قَالَ: حَدَّثَنَا الوَلِيدُ بْنُ جَمِيلٍ قَالَ: حَدَّثَنَا القَاسِمُ أَبُو عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي أُمَامَةَ البَاهِلِيِّ، قَالَ:

ذُكِرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلَانِ أَحَدُهُمَا عَابِدٌ وَالآخَرُ عَالِمٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَضْلُ العَالِمِ عَلَى العَابِدِ كَفَضْلِي عَلَى أَدْنَاكُمْ»

ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ وَأَهْلَ السَّمَوَاتِ وَالأَرَضِينَ حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الحُوتَ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الخَيْرَ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ» سَمِعْتُ أَبَا عَمَّارٍ الحُسَيْنَ بْنَ حُرَيْثٍ الخُزَاعِيَّ، يَقُولُ: سَمِعْتُ الفُضَيْلَ بْنَ عِيَاضٍ، يَقُولُ: «عَالِمٌ عَامِلٌ مُعَلِّمٌ يُدْعَى كَبِيرًا فِي مَلَكُوتِ السَّمَوَاتِ»


Tirmidhi-Tamil-2609.
Tirmidhi-TamilMisc-2609.
Tirmidhi-Shamila-2685.
Tirmidhi-Alamiah-2609.
Tirmidhi-JawamiulKalim-2628.




1 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-, அல்முஃஜமுல் கபீர்-, ஃபவாஇத் தம்மாம்-, தாரீகு திமிஷ்க்-, கிதாபுல் இல்ம்-,


2 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

3 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

4 . ஹஸன் பஸரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.