பாடம்: 41
மக்களுக்குக் கல்வியைக் கற்பிப்பவர் அடையும் நற்பலன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அறிஞர் ஒருவருக்காகக் கடலில் உள்ள மீன்கள் உள்பட வானங்களில்
உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் பாவமன்னிப்புக் கோருகின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)
(இப்னுமாஜா: 239)بَابُ ثَوَابِ مُعَلِّمِ النَّاسَ الْخَيْرَ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، عَنْ عُثْمَانَ بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«إِنَّهُ لَيَسْتَغْفِرُ لِلْعَالِمِ مَنْ فِي السَّمَاوَاتِ، وَمَنْ فِي الْأَرْضِ، حَتَّى الْحِيتَانِ فِي الْبَحْرِ»
Ibn-Majah-Tamil-235.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-239.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-235.
- 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-13646-ஹஃப்ஸ் பின் உமர் யாரென அறியப்படாதவர் என அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார். இவ்வாறே தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோரும் கூறியுள்ளனர்.
(நூல்: அல்காஷிஃப்-2/300, தஹ்தீபுத் தஹ்தீப்-1/457, தக்ரீபுத் தஹ்தீப்-1/260)
2 . மேலும் இதில் வரும் ராவீ-28126-உஸ்மான் பின் அதாஉ பின் அபூமுஸ்லிம் என்பவரை அதிகமான அறிஞர்கள் பலவீனமானவர் என்றும்; கைவிடப்பட்டவர் என்றும் கூறியுள்ளனர். மேலும் இவர் தனது தந்தையின் வழியாக-தந்தையின் பெயர் கூறி முன்கரான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவித்துள்ளார் என்றும் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/71)
3 . மேலும் இதில் அபுத்தர்தா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ராவீ-28491-அதாஉ பின் அபூமுஸ்லிம் அவர்கள், ஹிஜ்ரீ 50 இல் பிறந்தவர் ஆவார். அபுத்தர்தா (ரலி) ஹிஜ்ரீ 32 இல் அல்லது உஸ்மான் (ரலி) ஆட்சிக்காலத்தில் மரணித்துவிட்டார். எனவே இது முன்கதிஃ ஆகும்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/340)
(இவ்வாறு அறிவித்தது இவரின் மகன் உஸ்மான் பின் அதாஉ என்பதால் இது இவரின் தவறல்ல)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-3641 .
சமீப விமர்சனங்கள்