தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2507

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

மக்களைச் சந்திக்காமலும் அவர்களிடமிருந்து ஏற்படும் தீங்குகளைச் சகித்துக் கொள்ள முடியாமலும் இருக்கின்ற ஒரு முஸ்லிமை விட, மக்களோடு வாழ்ந்து அவர்களிடமிருந்து வரும் தீங்குகளைச் சகித்துக் கொள்ளும் முஸ்லிம் சிறந்தவன்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நபித்தோழர்களில் ஒருவர்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபூஅதீ (முஹம்மது பின் இப்ராஹீம்) அவர்கள், “இதில் பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழர் இப்னு உமர் (ரலி) ஆவார் என்று ஷுஅபா கருதுகிறார்” என்று கூறினார்.

(திர்மிதி: 2507)

بَابٌ

حَدَّثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ المُثَنَّى قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ الأَعْمَشِ، عَنْ يَحْيَى بْنِ وَثَّابٍ، عَنْ شَيْخٍ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرَاهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«المُسْلِمُ إِذَا كَانَ يُخَالِطُ النَّاسَ وَيَصْبِرُ عَلَى أَذَاهُمْ خَيْرٌ مِنَ المُسْلِمِ الَّذِي لَا يُخَالِطُ النَّاسَ وَلَا يَصْبِرُ عَلَى أَذَاهُمْ»

قَالَ ابْنُ أَبِي عَدِيٍّ: «كَانَ شُعْبَةُ، يَرَى أَنَّهُ ابْنُ عُمَرَ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2507.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2444.




..இதன் அறிவிப்பாளர்தொடர்களை விரிவாக கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இந்த செய்தியை சிலர் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக அறிவித்துள்ளனர். அதுவே முன்னுரிமை பெற்ற செய்தி என்று கூறியுள்ளார். மேற்கண்ட செய்தியில் நபித்தோழரின் பெயர் மட்டும் கூறப்படவில்லை என்றாலும் அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-3129, 13/230)

மேலும் பார்க்க: அஹ்மத்-5022 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.