தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-5022

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

“மக்களைச் சந்திக்காமலும் அவர்களிடமிருந்து ஏற்படும் தீங்குகளைச் சகித்துக் கொள்ள முடியாமலும் இருக்கின்ற ஒரு முஸ்லிமை விட, மக்களோடு வாழ்ந்து அவர்களிடமிருந்து வரும் தீங்குகளைச் சகித்துக் கொள்ளும் முஸ்லிம் (அல்லாஹ்விடம்) மகத்தான நற்கூலியை பெறுபவர் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

ஷுஅபா அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மது பின் ஜஃபர் அவர்கள் இவ்வாறு ஹதீஸின் வாசகத்தை அறிவித்துள்ளார்.

ஷுஅபா அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹஜ்ஜாஜ் பின் முஹம்மத் அவர்கள், “தீங்குகளைச் சகித்துக் கொள்ளும் முஸ்லிம் சிறந்தவர் ஆவார்” என்று அறிவித்துள்ளார்.

இதில் நபித்தோழர்களில் ஒருபெரியவர் என்று குறிப்பிடப்படுபவர் இப்னு உமர் (ரலி) ஆவார் என்று ஸுலைமான் (பின் மிஹ்ரான்-அல்அஃமஷ்) அவர்கள் கூறினார்கள் என ஷுஅபா அவர்கள் குறிப்பிட்டார்.

(முஸ்னது அஹ்மத்: 5022)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَحَجَّاجٌ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ سُلَيْمَانَ الْأَعْمَشَ وَقَالَ حَجَّاجٌ: عَنِ الْأَعْمَشِ يُحَدِّثُ، عَنْ يَحْيَى بْنِ وَثَّابٍ، عَنْ شَيْخٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: وَأُرَاهُ ابْنَ عُمَرَ، قَالَ: حَجَّاجٌ قَالَ شُعْبَةُ: قَالَ سُلَيْمَانُ: وَهُوَ ابْنُ عُمَرَ يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:

«الْمُؤْمِنُ الَّذِي يُخَالِطُ النَّاسَ، وَيَصْبِرُ عَلَى أَذَاهُمْ، أَعْظَمُ أَجْرًا مِنَ الَّذِي لَا يُخَالِطُهُمْ، وَلَا يَصْبِرُ عَلَى أَذَاهُمْ»

قَالَ: حَجَّاجٌ: «خَيْرٌ مِنَ الَّذِي لَا يُخَالِطُهُمْ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-5022.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-4875.




علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (13/ 230)

3129- وَسُئِلَ عَنْ حَدِيثِ يَحْيَى بْنِ وَثَّابٍ، عَنِ ابْنِ عُمَرَ؛ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: المؤمن الذي يخالط الناس، ويصبر على أذاهم، أفضل من المؤمن الذي لا يخالطهم، ولا يصبر على أذاهم.
فَقَالَ: يَرْوِيهِ الْأَعْمَشُ، وَقَدِ اخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ محمد بن عبيد، عن الأعمش، عن يحيى بن وثاب، وأبي صَالِحٍ، عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عليه وسلم، لم يسمه.
وقال جعفر بن مكرم: عَنْ وَهْبِ بْنِ جَرِيرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ الأعمش، عن أبي صالح، ويحيى بن وثاب، عن ابن عمر.
وَقَالَ غَيْرُهُ: عَنْ شُعْبَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ يحيى بن وثاب وحده، عن ابن عمر.
وقال علي بن صالح: عن الأعمش، يرفعه إلى ابن عمر.
وقال داود الطائي: عن الأعمش، عن يحيى بن وثاب، مُرْسَلًا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
والصحيح قول من قال: عَنْ يَحْيَى بْنِ وَثَّابٍ، عَنِ ابْنِ عُمَرَ.
وروي عن ابن عيينة، عن حصين، عَنْ يَحْيَى بْنِ وَثَّابٍ، عَنِ ابْنِ عُمَرَ.
قاله إبراهيم بن بشار، وهو غريب عنه.

இதன் அறிவிப்பாளர்தொடர்களை விரிவாக கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இந்த செய்தியை சிலர் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக அறிவித்துள்ளனர். அதுவே சரியானது (உண்மையானது) என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-3129, 13/230)

ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் முஹம்மது பின் ஜஃபர்-ஃகுன்தர் அவர்களே முன்னுரிமை பெற்றவர் ஆவார் என்று இப்னுல் முபாரக்,பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
போன்றோர் கூறியுள்ளனர்.

((நூல்: ஜாமிஉல் உஸூல்-8/501, தஹ்தீபுத் தஹ்தீப்-3/531)…

1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • யஹ்யா பின் வஸ்ஸாப் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, அஹ்மத்-5022 , 23098 , இப்னு மாஜா-4032 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, குப்ரா பைஹகீ-,

2 . பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழர் வழியாக வரும் செய்திகள்:

  • யஹ்யா பின் வஸ்ஸாப் —> ஒரு நபித்தோழர் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, திர்மிதீ-2507 , குப்ரா பைஹகீ-,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.