தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-4032

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4032. “மக்களைச் சந்திக்காமலும் அவர்களிடமிருந்து ஏற்படும் தீங்குகளைச் சகித்துக் கொள்ள முடியாமலும் இருக்கின்ற ஒரு முஸ்லிமை விட, மக்களோடு வாழ்ந்து அவர்களிடமிருந்து வரும் தீங்குகளைச் சகித்துக் கொள்ளும் முஸ்லிம் (அல்லாஹ்விடம்) மகத்தான நற்கூலியை பெறுபவர் ஆவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

இப்னு உமர் (ரலி)

عبد الله بن عمر بن الخطاب العدوي

இறப்பு: ஹிஜ்ரி 74, மக்கா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் உமர் பின் அல்கத்தாப்

தந்தை பெயர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)

வம்சம்: குறைஷி, பனூ அதீ

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 10, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 74, மக்கா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

இப்னு உமர் (ரலி) இரண்டாவது கலீஃபா உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் மகனும், நபித்தோழரும் ஆவார். சிறு வயதிலேயே தம் தந்தையுடன் இஸ்லாத்தை ஏற்று, அவருடன் ஹிஜ்ரத் செய்தார். சிறுவராக இருந்ததால் உஹுத் போரில் அனுமதிக்கப்படவில்லை; கந்தக் போரிலும் அதற்குப் பின் நடந்த போர்களிலும் நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொண்டார்.

ஹதீஸிலும் மார்க்கச் சட்டத்திலும் முன்னணி அறிஞராக இருந்தார்; இறையச்சம், நேர்மை, நபிவழிச் செய்திகளில் ஆழ்ந்த அறிவு ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றவர். உம்முல் முஃமினீன் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் சகோதரர் ஆவார். ஹிஜ்ரி 74 ஆம் ஆண்டு மக்காவில் மரணித்தார் என்று பலர் கூறியுள்ளனர்; ஹிஜ்ரி 73 என்றும் கூறப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), உமர் பின் அல்கத்தாப் (ரலி), ஸைத் பின் அல்கத்தாப் (ரலி), ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி), அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அலீ பின் அபூதாலிப் (ரலி), பிலால் பின் ரபாஹ் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), ஸுஹைப் பின் ஸினான் (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), ஆஇஷா பின்த் அபூபக்ர் (ரலி)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸாலிம் பின் அப்துல்லாஹ் (ரஹ்), நாஃபிஉ (ரஹ்), ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்), காஸிம் பின் முஹம்மத் (ரஹ்), வாகித் பின் அப்துல்லாஹ் (ரஹ்), அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் (ரஹ்), உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் (ரஹ்), ஹம்ஸா பின் அப்துல்லாஹ் (ரஹ்), ஸைத் பின் அப்துல்லாஹ் (ரஹ்), பிலால் பின் அப்துல்லாஹ் (ரஹ்)

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் உமர், இப்னு உமர் (ரலி), அபூ அப்துர்ரஹ்மான்


ஆதாரம்: muslimscholars.info (18) · Should verify


حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَيْمُونٍ الرَّقِّيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ يَحْيَى بْنِ وَثَّابٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«الْمُؤْمِنُ الَّذِي يُخَالِطُ النَّاسَ، وَيَصْبِرُ عَلَى أَذَاهُمْ، أَعْظَمُ أَجْرًا مِنَ الْمُؤْمِنِ الَّذِي لَا يُخَالِطُ النَّاسَ، وَلَا يَصْبِرُ عَلَى أَذَاهُمْ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-4032.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-4030.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26831-அப்துல்வாஹித் பின் ஸாலிஹ் என்பவர் இஸ்ஹாக் பின் யூஸுப் அவர்களிடமிருந்து மட்டும் அறிவித்துள்ளார். இவரிடமிருந்து அலீ பின் மைமூன் அவர்கள் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதாலும், இவரைப் பற்றி குறை, நிறை கூறப்படவில்லை என்பதாலும் இவர் அறியப்படாதவர் ஆவார்.
  • சிலர் இவரைப் பற்றிய குறிப்பில் அப்துல்வாஹித் பின் ஸஃப்வான் என்பவரை கூறியுள்ளனர். ஆனால் இவர் வேறு நபர் ஆவார். இவரைப் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், லைஸ பிஷைஃ-இவர் ஒரு பொருட்டே அல்ல என்று கூறியிருப்பதால் சிலர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். குறைந்த ஹதீஸுடையவர்களுக்கும் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    லைஸ பிஷைஃ என்று கூறுவார் என்பதால் இவரை சிலர் ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.
  • அப்துல்வாஹித் பின் ஸாலிஹ் அறியப்படாதவர் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/631)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க: அஹ்மத்-5022 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.