தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-352

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 3

தொழும் போது வேஷ்டி (சிறியதாயிருந்தால் அதன் இரு முனை)யைப் பிடரியில் முடிச்சிட்டுக் கொள்வது.

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(நபித்தோழர்கள்) சிலர் தங்களுடைய வேஷ்டிகளை தமது தோள்களில் முடிச்சுப் போட்டுக் கொண்டவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் தொழுதனர்.

  ‘ஜாபிர் (ரலி) ஒரே வேஷ்டியை அணிந்து கொண்டு அதைத் தங்களின் பிடரியில் முடிச்சுப் போட்டவர்களாகத் தொழுதார்கள். அவர்களின் இதர ஆடைகளோ துணி தொங்க விடப்படும் கம்பில் தொங்கிக் கொண்டிருந்தன. இவர்களிடம் ஒருவர், ‘ஒரே வேஷ்டியிலா தொழுகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு ‘உன்னைப் போன்ற மடையர்கள் என்னைப் பார்க்க வேண்டுமென்பதற்காகவே இவ்வாறு செய்தேன். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எங்களில் யாருக்குத்தான் இரண்டு ஆடைகள் இருந்தன?’ என்று ஜாபிர் (ரலி) கேட்டார்’ என முஹம்மத் இப்னு அல்முன்கதிர் அறிவித்தார்.

அத்தியாயம்: 8

(புகாரி: 352)

بَابُ عَقْدِ الإِزَارِ عَلَى القَفَا فِي الصَّلاَةِ

وَقَالَ أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ: «صَلَّوْا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَاقِدِي أُزْرِهِمْ عَلَى عَوَاتِقِهِمْ»

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنِي وَاقِدُ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، قَالَ

«صَلَّى جَابِرٌ فِي إِزَارٍ قَدْ عَقَدَهُ مِنْ قِبَلِ قَفَاهُ وَثِيَابُهُ مَوْضُوعَةٌ عَلَى المِشْجَبِ»، قَالَ لَهُ قَائِلٌ: تُصَلِّي فِي إِزَارٍ وَاحِدٍ؟، فَقَالَ: «إِنَّمَا صَنَعْتُ ذَلِكَ لِيَرَانِي أَحْمَقُ مِثْلُكَ وَأَيُّنَا كَانَ لَهُ ثَوْبَانِ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-Tamil-352.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-352.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தக் கருத்தில் ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஹம்மது பின் முன்கதிர் —> ஜாபிர் (ரலி)

பார்க்க: புகாரி-352 , 353 , 370 , முஸ்லிம்-1414 , …

அஹ்மத்-14789 ,

  • ஃபுலைஹ் —> ஸயீத் பின் ஹாரிஸ் —> ஜாபிர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-14518 , புகாரி-361 , இப்னு குஸைமா-767 , இப்னு ஹிப்பான்-2305 ,

  • ஷுரஹ்பீல் —> ஜாபிர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, இப்னு மாஜா-974 , இப்னு குஸைமா-1535 ,

  • அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, முஸ்லிம்-898 , 899 , 900 , இப்னு குஸைமா-762 , இப்னு ஹிப்பான்-,

  • ஹாதிம் —> யஃகூப் —> உபாதா பின் வலீத் —> ஜாபிர் (ரலி)

பார்க்க: அபூதாவூத்-485 ,634 , இப்னு ஹிப்பான்-,

…அபூதாவூத்- 633 ,

…இப்னு குஸைமா-1536 ,

…மாலிக்-374376377 ,

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.