தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3891

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இரண்டாவது) அகபா உடன்படிக்கையில் பங்கெடுத்தவர்களில் நானும், என் தந்தையும், (ஸஃலபா பின் அனமா (ரலி) (அல்லது அம்ர் பின் அனமா-ரலி), பராஉ பின் மஃரூர் (ரலி) ஆகியோரான) என் இரண்டு மாமன்மார்களும் அடங்குவோம்.

அத்தியாயம்: 63

(புகாரி: 3891)

حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ عَطَاءٌ: قَالَ جَابِرٌ

«أَنَا، وَأَبِي، وَخَالِي، مِنْ أَصْحَابِ العَقَبَةِ»


Bukhari-Tamil-3891.
Bukhari-TamilMisc-3891.
Bukhari-Shamila-3891.
Bukhari-Alamiah-3602.
Bukhari-JawamiulKalim-3627.




இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

2 . இப்ராஹீம் பின் மூஸா-அத்தமீமீ

3 . ஹிஷாம் பின் யூஸுஃப்-அல்அப்னாவீ

4 . இப்னு ஜுரைஜ்-அல்மக்கீ

5 . அதாஉ பின் அபூரபாஹ்

6 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


ஜாபிர் (ரலி) அவர்களின் தாய்மாமன்கள் குறித்த தகவல்:

فتح الباري لابن حجر (7/ 221)
أُمُّ جَابِرٍ هِيَ أُنَيْسَةُ بِنْتُ غَنَمَةَ بْنِ عَدِيٍّ وأخواها ثَعْلَبَةُ وَعَمْرٌو وَهُمَا خَالَا جَابِرٍ وَقَدْ شَهِدَا الْعَقَبَةَ الْأَخِيرَةَ وَأَمَّا الْبَرَاءُ بْنُ مَعْرُورٍ فَلَيْسَ مِنْ أَخْوَالِ جَابِرٍ قُلْتُ لَكِنْ مِنْ أَقَارِبِ أُمِّهِ وَأَقَارِبُ الْأُمِّ يُسَمَّوْنَ أَخْوَالًا مَجَازًا وَقَدْ روى بن عَسَاكِرَ بِإِسْنَادٍ حَسَنٍ عَنْ جَابِرٍ قَالَ حَمَلَنِي خَالِي الْحُرُّ بْنُ قَيْسٍ فِي السَّبْعِينَ رَاكِبًا الَّذِينَ وَفَدُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْأَنْصَارِ فَخَرَجَ إِلَيْنَا مَعَهُ الْعَبَّاسُ عَمُّهُ فَقَالَ يَا عَمِّ خُذْ لِي عَلَى أَخْوَالِكَ فَسَمَّى الْأَنْصَارَ أَخْوَالَ الْعَبَّاسِ لِكَوْنِ جَدَّتِهِ أُمِّ أَبِيهِ عَبْدِ الْمُطَّلِبِ مِنْهُمْ وَسَمَّى الْحُرَّ بْنَ قَيْسٍ خَالَهُ لِكَوْنِهِ مِنْ أَقَارِبِ أمه وَهُوَ بن عَمِّ الْبَرَاءِ بْنِ مَعْرُورٍ فَلَعَلَّ قَوْلَ سُفْيَانَ وَأَخُوهُ عَنَى بِهِ الْحُرَّ بْنَ قَيْسٍ وَأَطْلَقَ عَلَيْهِ أَخا وَهُوَ بن عَمٍّ لِأَنَّهُمَا فِي مَنْزِلَةٍ وَاحِدَةٍ فِي النَّسَبِ وَهَذَا أولى من توهيم مثل بن عُيَيْنَةَ لَكِنْ لَمْ يَذْكُرْ أَحَدٌ مِنْ أَهْلِ السِّيَرِ الْحُرَّ بْنَ قَيْسٍ فِي أَصْحَابِ الْعَقَبَةِ فَكَأَنَّهُ لَمْ يَكُنْ أَسْلَمَ فَعَلَى هَذَا فَالْخَالُ الْآخَرُ لِجَابِرٍ إِمَّا ثَعْلَبَةُ وَإِمَّا عَمْرٌو وَاللَّهُ أَعْلَمُ

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
கூறுகிறார்:

ஜாபிர் (ரலி) அவர்களின் தாயார் உனைஸா பின்த் அனமா பின் அதீ ஆவார். இவருக்கு ஸஃலபா, அம்ர் என இரு சகோதரர்கள் இருந்தனர். இவ்விருவரும் ஜாபிர் (ரலி) அவர்களின் (நேரடித்) தாய்மாமன்கள் ஆவர். இவர்கள் இருவரும் இறுதியாக நடைபெற்ற ‘அகபா’ உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்கள்.

அதே சமயம் பராஃ பின் மஃரூர் (ரலி) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களின் நேரடித் தாய்மாமன் அல்லர். இருப்பினும் அவர் ஜாபிரின் தாயாருக்கு நெருங்கிய உறவினர் ஆவார். அரபியர்களின் வழக்கத்தில் தாய் வழி உறவினர்களையும் ‘மாமன்’ என்று உருவகமாக (மஜாஸாக) அழைக்கும் வழக்கம் உண்டு.

இப்னு அஸாகிர் (ரஹ்) அவர்கள் ஹஸன் தர அறிவிப்பாளர்தொடரில் பின்வருமாறு அறிவிக்கிறார்:

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அன்சாரிகளில் 70 பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றபோது, எனது மாமன் ஹுர்ரு பின் கைஸ் அவர்கள் என்னைச் சுமந்து சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களும் வந்திருந்தார். நபி (ஸல்) அவர்கள், ‘என் பெரிய தந்தையே! உங்கள் மாமன்மார்களிடம் எனக்காக வாக்குறுதி பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார்கள்.

இங்கு அன்சாரிகளை அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு ‘மாமன்மார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். காரணம், அப்பாஸின் தந்தை அப்துல்முத்தலிபின் தாயார் அவர்கள் அன்சாரி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாகும். அதேபோல், ஹுர்ரு பின் கைஸை ஜாபிர் (ரலி) ‘மாமன்’ என்று குறிப்பிட்டது அவர் தாயின் உறவினர் என்பதால் தான். இவர் பராஉ பின் மஃரூரின் தந்தையுடைய சகோதரர் மகன் ஆவார்.

எனவே, ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
(ரஹ்) அவர்கள் “அவரது சகோதரர்” என்று குறிப்பிட்டது ஹுர்ரு பின் கைஸையே குறிக்கலாம். அவர் பங்காளி முறையாக இருந்தாலும், நெருக்கமான உறவு என்பதால் ‘சகோதரர்’ என்று அழைக்கப்பட்டுள்ளார். இப்னு உயைனா போன்ற சிறந்த அறிஞர்கள் தவறாகக் குறிப்பிட்டிருப்பார்கள் என்று கருதுவதை விட, இத்தகைய விளக்கமே பொருத்தமானது.

ஆயினும், வரலாற்று ஆசிரியர்கள் யாரும் ஹுர்ரு பின் கைஸை ‘அகபா’ உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்கள் பட்டியலில் சேர்க்கவில்லை. ஒருவேளை அப்போது அவர் இஸ்லாத்தை ஏற்காமல் இருந்திருக்கலாம். எனவே, ஜாபிர் (ரலி) அவர்கள் குறிப்பிட்ட மற்றொரு மாமன் ஸஃலபா அல்லது அம்ர் ஆகிய இருவரில் ஒருவராகவே இருக்க முடியும். (அல்லாஹ்வே மிக அறிந்தவன்).


1 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-1377, புகாரி-3891, 3890, முஸ்னத் அபீ யஃலா-2240,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-352.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.