தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-1377

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“ஒருவர் ஒரே துணியை அணிந்தும் தொழலாம்; அது விசாலமான அளவுள்ளதாக இருந்தால் அதைத் தன் உடலில் போர்த்திக் கொள்ளலாம். இருப்பினும், கீழாடையுடன் மேலாடையையும் சேர்த்து அணிந்து தொழுவதே எனக்கு மிகவும் விருப்பமானது” என்று அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டார்.


பின்னர் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியை நமக்கு அறிவித்தார். – ஜாபிர் (ரலி) அவர்கள் தான் (அகபா உடன்படிக்கையில் கலந்துக் கொண்ட) நபித்தோழர்களில் இறுதியாக மரணித்தவர் ஆவார். –

அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்களுக்கு முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் பனூஸலமா கிளையில் இருந்த ஜாபிர் (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் செல்வோம். ஒருமுறை நாங்கள் ஒரு குழுவாக இருந்தபோது, அவர்கள் தங்கள் இல்லத்திலேயே எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள். அப்போது அவர்களின் மேலாடை அங்கிருந்த ஆடைமாட்டும் குச்சியில் தொங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் ஒரேயொரு துணியை மட்டும் உடலில் போர்த்தியவாறு நின்றார்கள். அத்துணியோ அவர்களின் இரு தோள்களையும் முழுமையாக மறைக்கவில்லை. (அத்துணி நெசவு செய்யப்பட்ட ஒரு வகை ஆடை என்று முஹம்மத் பின் அலீ (ரஹ்) குறிப்பிடுகிறார்.) “ஒரே ஆடை அணிந்து தொழுவதில் தவறில்லை” என்பதை எங்களுக்குக் காட்டித் தருவதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்தார்கள் என்பதை நான் உணர்ந்தேன்.


மேலும் அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், “அகபா உடன்படிக்கையில் பங்கெடுத்தவர்களில் நானும், என் தந்தையும், (ஸஃலபா பின் அனமா (ரலி), பராஉ பின் மஃரூர் (ரலி) ஆகியோரான) என் இரண்டு மாமன்மார்களும் அடங்குவோம் என்று கூறினார்கள்.

(musannaf-abdur-razzaq-1377: 1377)

عَبْدُ الرَّزَّاقِ، عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: سَمِعْتُ عَطَاءً يَقُولُ:

يُصَلِّي الْمَرْءُ فِي الثَّوْبِ، وَإِنْ كَانَ ذَا سَعَةٍ وَلَكِنْ لِيَتَوَشَّحْ بِهِ، وَأَحَبُ إِلَيَّ أَنْ يُصَلِّيَ فِي الرِّدَاءِ مَعَ الْإِزَارِ “.

ثُمَّ أَخْبَرَنَا خَبَرًا أَخْبَرَهُ إِيَّاهُ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، وَكَانَ مِنْ آخِرِ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْتًا قَالَ: فَكُنَّا نَأْتِيهِ فِي بَيْتِهِ فَأَمَّنَا فِي بَيْتِهِ فِي بَنِي سَلَمَةَ وَنَحْنُ نَفَرٌ، فَقَامَ فَأَمَّنَا، وَإِنَّ مِشْجَبَهُ لَمَوْضُوعٌ عَلَيْهِ رِدَاؤُهُ قَالَ: فَتَوَشَّحَ ثَوْبًا قَالَ: مَا تَطْلُعُ عَلَى مَنْكِبَيْهِ، قَالَ مُحَمَّدٌ: حَسِبْتُ أَنَّهُ قَالَ: «نِسَاجَةً» قَالَ: فَمَا رَأَيْتُهُ إِلَّا يُرِينَا أَنَّ ذَلِكَ لَا بَأْسَ بِهِ.

قَالَ ابْنُ جُرَيْجٍ، قَالَ عَطَاءٌ: قَالَ جَابِرٌ: ” أَنَا وَأَبِي وَخَالِي مِنْ أَصْحَابِ الْعَقَبَةِ


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-1377.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-1326.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-1327.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-1328.




இந்தச் செய்தியின் முதல் அறிவிப்பாளர்தொடரின் அறிவிப்பாளர்கள்:

1 . அப்துர்ரஸ்ஸாக் பின் ஹம்மாம்-அல்ஹுமைரீ

2 . இப்னு ஜுரைஜ்-அல்மக்கீ

3 . அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்)

இது மக்தூஃ வான அறிவிப்பாளர்தொடராகும்.


இரண்டாவது அறிவிப்பாளர்தொடரின் அறிவிப்பாளர்கள்:

1 . அப்துர்ரஸ்ஸாக் பின் ஹம்மாம்-அல்ஹுமைரீ

2 . இப்னு ஜுரைஜ்-அல்மக்கீ

3 . அதாஉ பின் அபூரபாஹ்

4 . முஹம்மத் பின் அலீ பின் ஹுஸைன்-அல்பாகிர்

5 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


மூன்றாவது அறிவிப்பாளர்தொடரின் அறிவிப்பாளர்கள்:

1 . அப்துர்ரஸ்ஸாக் பின் ஹம்மாம்-அல்ஹுமைரீ

2 . இப்னு ஜுரைஜ்-அல்மக்கீ

3 . அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்)

4 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


மேலும் பார்க்க: புகாரி-3891.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.