தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-82

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

ஆண்குறியை தொட்டுவிட்டால் உளூச் செய்வது (அவசியம்).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் தனது ஆண்குறியை தொட்டுவிட்டால் உளூச் செய்யாமல் தொழக் கூடாது.

அறிவிப்பவர்: புஸ்ரா பின்த் ஸஃப்வான் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி உம்மு ஹபீபா (ரலி), அபூஅய்யூப் (ரலி), அபூஹுரைரா (ரலி), அர்வா பின்த் உனைஸ் (ரலி), ஆயிஷா (ரலி), ஜாபிர் (ரலி), ஸைத் பின் காலித் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளது.

மேற்கண்ட செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இந்தச் செய்தியை ஹிஷாம் பின் உர்வா அவர்களிடமிருந்து, ஹிஷாம் பின் உர்வா —> உர்வா பின் ஸுபைர் —> புஸ்ரா பின்த் ஸஃப்வான் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்கள் அறிவிப்பதைப் போன்றே பலரும் அறிவித்துள்ளனர்.

(திர்மிதி: 82)

بَابُ الوُضُوءِ مِنْ مَسِّ الذَّكَرِ

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ القَطَّانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ بُسْرَةَ بِنْتِ صَفْوَانَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ مَسَّ ذَكَرَهُ فَلَا يُصَلِّ حَتَّى يَتَوَضَّأَ»

وَفِي البَابِ عَنْ أُمِّ حَبِيبَةَ، وَأَبِي أَيُّوبَ، وَأَبِي هُرَيْرَةَ، وأَرْوَى ابْنَةِ أُنَيْسٍ، وَعَائِشَةَ، وَجَابِرٍ، وَزَيْدِ بْنِ خَالِدٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو،: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ، هَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ مِثْلَ هَذَا، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ بُسْرَةَ،


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-77.
Tirmidhi-Shamila-82.
Tirmidhi-Alamiah-77.
Tirmidhi-JawamiulKalim-77.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்.

2 . இஸ்ஹாக் பின் மன்ஸூர்

3 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்கத்தான்

4 . ஹிஷாம் பின் உர்வா

5 . உர்வா பின் ஸுபைர்

6 . புஸ்ரா பின்த் ஸஃப்வான் (ரலி)


ஆய்வின் சுருக்கம்:

மேற்கண்ட இந்த ஹதீஸின் கருத்துக்கு மாற்றமான கருத்துடைய ஹதீஸ்களும் வந்துள்ளன. (பார்க்க: அபூதாவூத்-182)

இந்த இரண்டு வகையான செய்திகளில் எதற்கு முன்னுரிமை தரவேண்டும் என்ற விசயத்திலும், அதற்கு கூறும் காரணங்கள் விசயத்திலும் அறிஞர்களின் கருத்து பலவாறு உள்ளது.

அபூதாவூத்-182 இல் வரும் செய்தி ஆரம்பத்தில் கூறப்பட்ட செய்தி என்பதற்கு ஆதாரம் இருப்பதாலும், மேற்கண்ட திர்மிதீ-82 இல் இடம்பெறும் செய்தி அதற்கு பிறகு கூறப்பட்டது என்பதால் திர்மிதீ ஹதீஸை நாஸிக் என்றும் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
ஹதீஸை மன்ஸூக் என்றும் சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

வேறு சில அறிஞர்கள் இரண்டு செய்திகளை இணைத்து விளக்கம் கூறியுள்ளனர்.


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (15/ 313)
4060- وسئل عن حديث بسرة، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مس الذكر والوضوء منه، وذكر الخلاف على هشام بن عروة….


1 . இந்தக் கருத்தில் புஸ்ரா பின்த் ஸஃப்வான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • உர்வா பின் ஸுபைர் —> புஸ்ரா பின்த் ஸஃப்வான் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, அஹ்மத்-, தாரிமீ-, திர்மிதீ-82 , நஸாயீ-, ஷரஹ் மஆனில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, அல்முஃஜமுஸ் ஸகீர்-, தாரகுத்னீ-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,

  • உர்வா பின் ஸுபைர் —> மர்வான் பின் ஹகம் —> புஸ்ரா பின்த் ஸஃப்வான் (ரலி)

பார்க்க: மாலிக்-100 , அஹ்மத்-, தாரிமீ-, இப்னு மாஜா-479 , அபூதாவூத்-181 , திர்மிதீ-83 , நஸாயீ-,

  • உர்வா பின் ஸுபைர் —> ஸைத் பின் காலித் (ரலி)

பார்க்க: அஹ்மத்-,


2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு ஹிப்பான்: 1118 .


3 . உம்மு ஹபீபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-481 .


4 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
, 5 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
, 6 . அப்துல்லாஹ் பின் அம்ர்…


7 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-480 .


8 . அபூஅய்யூப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-482 .


9 . ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
(ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா பைஹகீ-650 .

….


ஆய்வுக்காக:

1 . حول أحاديث نقض الوضوء بمس الذكر

2 . أثر اختلاف الأسانيد والمتون في اختلاف الفقهاء 1/202

3 . الخلاف في نقض الوضوء من مس الذكر

4 . واختلف العلماء رحمهم الله في مس الذكر والقبل هل ينقض الوضوء أم لا ؟ على أقوال



سنن النسائي

165 – أَخْبَرَنَا هَنَّادٌ، عَنْ مُلَازِمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقِ بْنِ عَلِيٍّ، عَنْ أَبِيهِ قَالَ: خَرَجْنَا وَفْدًا حَتَّى قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعْنَاهُ وَصَلَّيْنَا مَعَهُ، فَلَمَّا قَضَى الصَّلَاةَ جَاءَ رَجُلٌ كَأَنَّهُ بَدَوِيٌّ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا تَرَى فِي رَجُلٍ مَسَّ ذَكَرَهُ فِي الصَّلَاةِ؟ قَالَ: «وَهَلْ هُوَ إِلَّا مُضْغَةٌ مِنْكَ أَوْ بِضْعَةٌ مِنْكَ»

தொழும் போது ஒருவர் தனது மர்மஸ்தானத்தைத் தொடுவது பற்றி என்ன கூறுகின்றீர்கள்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதுவும் உனது மற்ற உறுப்புக்களைப் போன்ற உறுப்பு தானே? என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: தல்க் பின் அலீ (ரலி)

(நூல்கள்: அபூதாவூத்-182 , … நஸாயீ-165 , திர்மிதீ 78, இப்னுமாஜா 476, அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
15700 ,

இந்தக் கருத்துடைய ஹதீஸ் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
3/403, தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
1/149, தப்ரானியின் அல்கபீர் 8/330 ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.)

ஆதாரப்பூர்வமான இரண்டு ஹதீஸ்கள் ஒன்றோடொன்று மோதுவது போல் தோற்றமளித்தால் அவ்விரு செய்திகளையும் முறையில் இணைத்து முடிவு செய்யலாம்.

ஒருவன் தனது மர்மஸ்தானத்தைத் தொடுவது இரண்டு வகைகளில் ஏற்படலாம்.

  • மற்ற உறுப்புகளைப் போன்ற உறுப்பாகக் கருதி தொடுவது முதல் வகை.
  • அந்த உறுப்பின் தனித் தன்மையைக் கருதி தொடுவது இரண்டாவது வகை.

முதல் வகையான தொடுதலால் உளூ நீங்காது.

இரண்டாவது வகையான தொடுதலால் உளூ நீங்கும் என்று முடிவு செய்யலாம்…


தகவல்: https://www.onlinepj.in/index.php/prayers/prayers-1/ulu,bath,purity/uloovai_neekkubavai


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.