தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-607

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 75

மறுமை நாளில் இந்தச் சமுதாயத்தாரின் சிறப்பு அடையாளம், அவர்கள் செய்த அங்கத்தூய்மை மற்றும் ஸஜ்தாவின் அறிகுறிகள்தான் என்பது தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தார் (உலகில்) ‘ஸஜ்தா’ செய்ததன் காரணமாக முகம் வெண்மையானவர்களாகவும், அங்கத்தூய்மை (உளூ) செய்ததன் காரணமாக (பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாவும் மறுமை நாளில் இருப்பார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) வழியாக வரும் இந்த அறிவிப்பாளர்தொடர் “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

(திர்மிதி: 607)

بَابُ مَا ذُكِرَ مِنْ سِيمَاءِ هَذِهِ الْأُمَّةِ يَوْمَ الْقِيَامَةِ مِنْ آثَارِ السُّجُودِ وَالطُّهُورِ

حَدَّثَنَا أَبُو الوَلِيدِ أَحْمَدُ بْنُ بَكَّارٍ الدِّمَشْقِيُّ قَالَ: حَدَّثَنَا الوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: قَالَ صَفْوَانُ بْنُ عَمْرٍو قَالَ: أَخْبَرَنِي يَزِيدُ بْنُ خُمَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«أُمَّتِي يَوْمَ القِيَامَةِ غُرٌّ مِنَ السُّجُودِ، مُحَجَّلُونَ مِنَ الوُضُوءِ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ»


Tirmidhi-Tamil-552.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-607.
Tirmidhi-Alamiah-552.
Tirmidhi-JawamiulKalim-552.




3 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அத்தஹூர்-அபூஉபைத்-காஸிம் பின் ஸல்லாம்-28 , அஹ்மத்-17693 , திர்மிதீ-607 , முஸ்னத் பஸ்ஸார்-3500 , அல்முஃஜமுல் அவ்ஸத்-04 ,


மேலும் பார்க்க: புகாரி-136 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.