தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-861

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

ஏழு அறிவிப்புகளில் ஏழாம் அறிவிப்பு: ஹதீஸ் எண்-856 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில்,

“மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் உனக்குக் கட்டளையிட்டுள்ளபடி நீ அங்கத் தூய்மை செய்துகொள். அது (அங்கத் தூய்மை) முடிந்த பின் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று பாங்கு சொல். பின்பு இகாமத் சொல்லி தொழுகைக்கு நின்ற பின் தக்பீர் கூறி, குர்ஆனிலிருந்து எதுவும் (மனனமாக) இருந்தால் அதனை ஓது.

குர்ஆனில் எதுவும் மனனம் இல்லையென்றால் “அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ்” என்று சொல்.

இவற்றிலிருந்து எதுவும் நீ குறைவு செய்தால் உனது தொழுகையில் நீ குறைவு செய்துவிட்டாய்! (என்று அறிந்துக் கொள்!) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது).

அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி)

(அபூதாவூத்: 861)

حَدَّثَنَا عَبَّادُ بْنُ مُوسَى الْخُتَّلِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ جَعْفَرٍ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلَّادِ بْنِ رَافِعٍ الزُّرَقِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَقَصَّ هَذَا الْحَدِيثَ قَالَ فِيهِ: «فَتَوَضَّأْ كَمَا أَمَرَكَ اللَّهُ جَلَّ وَعَزَّ، ثُمَّ تَشَهَّدْ، فَأَقِمْ ثُمَّ كَبِّرْ، فَإِنْ كَانَ مَعَكَ قُرْآنٌ فَاقْرَأْ بِهِ، وَإِلَّا فَاحْمَدِ اللَّهَ وَكَبِّرْهُ وَهَلِّلْهُ»، وَقَالَ فِيهِ: «وَإِنِ انْتَقَصْتَ مِنْهُ شَيْئًا انْتَقَصْتَ مِنْ صَلَاتِكَ»


Abu-Dawood-Tamil-730.
Abu-Dawood-TamilMisc-730.
Abu-Dawood-Shamila-861.
Abu-Dawood-Alamiah-730.
Abu-Dawood-JawamiulKalim-731.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . அப்பாத் பின் மூஸா

3 . இஸ்மாயீல் பின் ஜஃபர்

4 . யஹ்யா பின் அலீ

5 . அலீ பின் யஹ்யா

6 . யஹ்யா பின் கல்லாத்

7 . ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி)


…யஹ்யா பின் அலீ அவர்களிடமிருந்து இஸ்மாயீல் பின் ஜஃபர் மட்டுமே ஹதீஸ்களை அறிவித்துள்ளார். எனவே சிலர் இவரை அறியப்படாதவர் என்று கூறியுள்ளனர்…இவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். இத்துடன் இவர் பிரபலமான அறிஞர்களில் ஒருவர் என்றும், உறுதியானவர் என்றும் கூறியுள்ளார் என்பதால் அறியப்படாதவரை பலமானவர் என்று முடிவு செய்யும் அடிப்படையில் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் இதைக் கூறவில்லை என்று தெரிகிறது…

 


மேலும் பார்க்க: அபூதாவூத்-858 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.