பாடம்:
ஒரு பெண் அல்லாஹ்வின் கடமைகளை நிறைவேற்றுவதுடன் கணவனுக்கும் கட்டுப்பட்டு நடந்தால் அவளுக்கு சொர்க்கம் கடமையாகிவிடுகிறது என்பது பற்றி வந்துள்ள செய்திகள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் ஐந்துவேளை தொழுகைகளைத் தொழுது; ரமலான் மாதம் நோன்பு நோற்று; தனது கற்பைப் பேணிநடந்து; தனது கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவள் சொர்க்கத்தில், தான் விரும்பிய வாசல் வழியாக நுழைவாள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அபூஹாதிம்-இப்னு ஹிப்பான் இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை அபூஸலமாவிடமிருந்து, அப்துல்மலிக் பின் உமைர் மட்டுமே தனித்து அறிவிக்கிறார்.
இவ்வாறே, அப்துல்மலிக் என்பவரிடமிருந்து ஹுத்பா பின் மின்ஹால் மட்டுமே தனித்து அறிவிக்கிறார்.
ஹுத்பா பின் மின்ஹால் அவர்கள், (ஈரான் நாட்டின்) அஹ்வாஸ் என்ற பகுதியை சேர்ந்தவராவார்.
(இப்னு ஹிப்பான்: 4163)ذِكْرُ إِيجَابِ الْجَنَّةِ لِلْمَرْأَةِ إِذَا أَطَاعَتْ زَوْجَهَا مَعَ إِقَامَةِ الْفَرَائِضِ لِلَّهِ جَلَّ وَعَلَا
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى الْجَوَالِيقِيُّ بِعَسْكَرِ مُكْرَمٍ، قَالَ: حَدَّثَنَا دَاهِرُ بْنُ نُوحٍ الْأَهْوَازِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو هَمَّامٍ مُحَمَّدُ بْنُ الزِّبْرِقَانِ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ الْمِنْهَالِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِذَا صَلَّتِ الْمَرْأَةُ خُمُسَهَا، وَصَامَتْ شَهْرَهَا، وَحَصَّنَتْ فَرْجَهَا، وَأَطَاعَتْ بَعْلَهَا دَخَلَتْ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَتْ»
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ «تَفَرَّدَ بِهَذَا الْحَدِيثِ عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ مِنْ حَدِيثِ أَبِي سَلَمَةَ وَمَا رَوَاهُ عَنْ عَبْدِ الْمَلِكِ إِلَّا هُدْبَةُ بْنُ الْمِنْهَالِ وَهُوَ شَيْخٌ أَهْوَازِيٌّ»
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-4163.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-4252.
- இந்தக் கருத்தில் வரும் அனைத்து செய்திகளிலும் விமர்சனம் இருப்பதால் அனைத்தையும் இணைத்து சில அறிஞர்கள் ஹஸன் லிஃகைரிஹீ (அல்லது ஸஹீஹ் (லிஃகைரிஹீ) என்று கூறியுள்ளனர்.
- அனைத்து செய்திகளிலும் விமர்சனம் இருப்பதால் இது பலவீனமான செய்தியாகும்.
இதைப் பற்றிய விவரம்:
1 . அப்துல்மலிக் பின் உமைர் என்பவரின் அறிவிப்பு:
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (4/ 303)
581 – وسئل عن حديث رجل لم يسم، عن عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا صَلَّتِ الْمَرْأَةُ خَمْسَهَا، وَصَامَتْ شَهْرَهَا، وَحَفِظَتْ فَرْجَهَا، وَأَطَاعَتْ زَوْجَهَا، قِيلَ: ادْخُلِي الْجَنَّةَ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شِئْتِ.
فَقَالَ: رَوَاهُ أَبُو حَمْزَةَ السُّكَّرِيُّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ رَجُلٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ.
وَخَالَفَهُ شَيْبَانُ، وَهُدْبَةُ بْنُ الْمِنْهَالِ فَرَوَيَاهُ عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَقَالَ أَبُو عَوَانَةَ عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ.
وَقَالَ عَبْدُ الْحَكِيمِ بْنُ مَنْصُورٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي الْهَيْثَمِ بْنِ التَّيِّهَانِ.
وَالِاضْطِرَابُ فِيهِ مِنْ عبد الملك.
அப்துல்மலிக் பின் உமைர் அவர்கள் அறிவிக்கும் பலதரப்பட்ட அறிவிப்பாளர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், அப்துல் மலிக் இதைத் குளறுபடியாக அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-581)
- மேற்கண்ட செய்தியை, அப்துல்மலிக் பின் உமைர் அவர்களிடமிருந்து ஹுத்பா பின் மின்ஹால் அறிவித்துள்ளார். இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15164-தாஹிர் பின் நூஹ் என்பவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். மேலும் சில செய்திகளை இவர் தவறாக அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார். - தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இவர் பலமானவர் அல்ல என்று கூறியுள்ளார்.
(நூல்: லிஸானுல் மீஸான்-3/389)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . இப்னு லஹீஆவின் அறிவிப்பு:
1 . இப்னு லஹீஆவிடமிருந்து அறிவிக்கும் யஹ்யா பின் இஸ்ஹாக் அவர்கள், இப்னு லஹீஆ —> உபைதுல்லாஹ் பின் அபூஜஃபர் —> இப்னு காரிள் —> அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
2 . இப்னு லஹீஆவிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் அவர்கள், இப்னு லஹீஆ —> ஜஃபர் பின் ரபீஆ —> இப்னு காரிள் —> அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
3 . இப்னு லஹீஆவிடமிருந்து அறிவிக்கும் ஸயீத் பின் அபூமர்யம் அவர்கள், இப்னு லஹீஆ —> ஜஃபர் பின் ரபீஆ —> இப்னு காரிள் —> அப்துர்ரஹ்மான் பின் ஹஸனா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
4 . இப்னு லஹீஆவிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் முஸ்அப், ஸயீத் பின் உஃபைர் ஆகியோர், இப்னு லஹீஆ —> மூஸா பின் வர்தான் —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
…
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இஃதிலாலுல் குலூப்-147 , இப்னு ஹிப்பான்-4163 , அல்முஃஜமுல் அவ்ஸத்-4598 ,
…அல்முஃஜமுல் அவ்ஸத்-4715 ,
- இஃதிலாலுல் குலூப்-147.
اعتلال القلوب للخرائطي (1/ 79)
147 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُصْعَبٍ الدِّمَشْقِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ مُوسَى بْنِ وَرْدَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَيُّمَا امْرَأَةٍ اتَّقَتْ رَبَّهَا، وَأَحْصَنَتْ فَرْجَهَا، وَأَطَاعَتْ زَوْجَهَا، قِيلَ لَهَا يَوْمَ الْقِيَامَةِ: ادْخُلِي مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شِئْتِ “
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-42878-முஹம்மத் பின் முஸ்அப் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-1661.
3 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-7480.
4 . அப்துர்ரஹ்மான் பின் ஹஸனா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: மஃரிஃபதுஸ் ஸஹாபா-அபூநுஐம்-4583 ,
معرفة الصحابة لأبي نعيم (4/ 1814)
4583 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ، ثنا أَبُو حَبِيبِ يَحْيَى بْنُ نَافِعٍ، ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، ثنا ابْنُ لَهِيعَةَ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ ابْنِ قَارِظٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ ابْنَ حَسَنَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا صَلَّتِ الْمَرْأَةُ خَمْسَهَا، وَصَامَتْ شَهْرَهَا، وَأَطَاعَتْ بَعْلَهَا، وَحَفِظَتْ فَرْجَهَا، فَلْتَدْخُلِ الْجَنَّةَ مِنْ أَيِ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَتْ»
- 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48690-அபூஹபீப்-யஹ்யா பின் நாஃபிஃ யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்…
சமீப விமர்சனங்கள்